...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, January 16, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                       நெல்லை கோட்ட நிர்வாகத்தின் கடைசி நேர ஆட்டங்கள் --
                        (நெல்லை NFPE உறுப்பினர்களுக்கு மட்டும் )
நமது கண்காணிப்பாளர் அவர்கள் வருகிற 31.01.2020 அன்று பணிநிறைவு பெறப்போகிறார்கள்  .பொதுவாக பணிநிறைவு நெருங்க நெருங்க சில அதிகாரிகள் ஊழியர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை (சட்டத்திற்குட்பட்டு )செய்வது உண்டு .சில அதிகாரிகள் தன்னை எதிர்த்தவர்கள் தனக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை ஏதாவது ஒரு வழக்கில் சிக்கவைத்து தண்டனையை கொடுத்துவிட்டு தனது பகையை தீர்த்துகொள்ளுபவர்களும் உண்டு .அந்த அடிப்படையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு ஊழியர்களுக்கு ரூல் 16 இன் கீழ் குற்றப்பத்திரிகையை பொங்கல் பரிசாக கொடுத்திருக்கிறார் .
ஆதார் போராட்டத்திற்கு முன் -ஆதார் போராட்டத்திற்கு பின் என நமது நிர்வாகம் நமது இயக்கம் கொடுத்த  பிரச்சினைகளை தீர்ப்பதில் அணுகிய விதமே இதற்கு சாட்சி ..இந்த நிலையில் வருகிற 24.01.2020 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் நாம் கலந்துகொள்ள வேண்டுமா என்ற சிந்தனை என்னுள் எழுகிறது .கண்காணிப்பாளர் அவர்களின் கடைசி நேர நடவடிக்கைகளில் சில 
*பாளையம்கோட்டையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்ததின் அடிப்படையில் இரண்டு ஊழியர்களுக்கு ரூல் 16 தண்டனை ( 14.01.2020 )அன்று குற்றப்பத்திரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது  .நிர்வாகம் வழக்கமாக கொடுக்கும் 10 நாள்அவகாசம்  குற்றம்சாட்டப்பட்ட ஊழியர்கள் கேட்கும் கால அவகாசம் நிச்சயம் 31.01.2020 க்கு பிறகுதான் நிர்வாகத்திற்கு பதில் கிடைக்கும் .இதற்காக முன்கூட்டியே தண்டனையை தீர்மானிக்க முடியுமா ?) தீர்மானிக்கப்பட்டுவிட்டதா ? கேமிராவை பாருங்கள் பாருங்கள் என்று நாம் சொன்னபொழுதெல்லாம் கண்களை மூடிக்கொண்டு சென்ற நிர்வாகம் மாதாந்திர பேட்டியில் தனக்கு எதிராக கேள்விகேட்ட குற்றத்திற்காக ) நெற்றிக்கண்ணை திறந்து இன்று குற்றம் சுமத்தியிருக்கிறது 
*பாளையங்கோட்டையில் பணிபுரியும்  பெண் ஊழியர்களுக்கு மதிய உணவு அமர்ந்து சாப்பிட ஒரு இடம் ஒதுக்கி தருகிறேன் என்று கொடுத்த உறுதிமொழிகள் ஆதார் போராட்டத்தில் நமது தோழியர்கள் பங்கேற்றத்தின் காரணமாக இன்றுவரை இடம்கொடுக்காமலே இழுத்தடிக்கப்பட்து .  மனதில் இடமில்லை போலும் ?
*காசாளர் பதவிகளை நிரப்புங்கள் மாதம் 1000 ரூபாய் அலவன்ஸ் கிடைக்கும் என்ற கோரிக்கை மாதாந்திர பேட்டியில் ஒத்துக்கொள்ளப்பட்டும் புதுப்புது காரணங்களை கண்டுபிடித்து தள்ளிப்போடுவது ஏன் என்று தெரியவில்லை ?
*மண்டல அலுவலகம் மாற்றிக்கொடுத்த இடமாறுதல் உத்தரவை (தோழர் துளசிராமன் ) அமுல்படுத்திட மாதக்கணக்கில் தள்ளிப்பட்டது எதற்காக ?
*புதிதாகி LSG பதவி உயர்வு பெற்றவர்களுக்கு VACANT இடங்களை வெளிப்படையாக அறிவிப்போம் என்று சொல்லிவிட்டு மாநில சர்க்கார் போல் சில இடங்களை மறைத்து வைத்தது யாருக்காக ?
*மூத்த தோழர்களுக்காவது (ஓய்வுபெறும் ஊழியர்களுக்காவது )சீனியாரிட்டி அடிப்படையில் HSG 1 மற்றும் HSG II OFFICIATING கொடுக்க இன்றுவரை மறுப்பதின் மர்மம் புரியவில்லை 
*  கோட்ட அலுவலக OA  பதவி  நிரப்பிட பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் நமது சங்க உறுப்பினர்கள் என்பதற்காகவே OA பதவியை நிரப்பிட காட்டும் மௌனம் ஏன் ?
*இடமாறுதல் கமிட்டி அனுமதித்த தபால்காரர் இடமாறுதல்களை மறுக்கும் போக்கு எதற்கு என்று தெரியவில்லை 
*புதிதாக நியமனம் பெற்ற ஒரு BPM ஊழியரிடம் எந்தவித விளக்கமும் கேட்காமல் அவர் அந்த கிராமத்தில் தங்கவில்லை என்ற காரணத்திற்காக (ஆனால் அதிகாரிகளின் கேள்விக்கு துணிச்சலாக பதில் சொன்னதற்காக ) PUT OFF செய்யப்பட்டுள்ளார் .
             இப்படி பல விஷயஙக்ளில் நமது நிர்வாகத்தின் சமீபகால நடவடிக்கைகள் ஏற்புடையதாக இல்லை .இருந்தாலும் மாதாந்திர பேட்டி எனும் கோட்டமட்டத்தில் இருக்கின்ற உட்சபட்ச உரிமையை விட்டுக்கொடுப்பதும் தொழிசங்கத்திற்கு அழகல்ல ...
ஆகவே தங்கள் பகுதி பிரச்சினைகள் இருந்தால் இன்று மதியத்திற்குள் தெரிவிக்கவும் .நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
  


0 comments:

Post a Comment