...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, January 30, 2020

இன்று பணிநிறைவு பெறுகின்ற  NFPE  பேரியக்கத்தின் பெருமைமிகு தோழர்களாக வலம்வந்த இனிய 
நண்பர்கள் செல்வராஜ் PA டவுண் சந்தானம் தபால்காரர் வண்ணார்பேட்டை  நடராஜன் தபால்காரர் டவுண் ஆகியோர்களை வாழ்த்துகிறோம் 
                                                  தோழர் செல்வராஜ் 
அன்பெனும் ஆடையணிந்து                                 
அமைதியெனும் அலங்காரம் கொண்டு 


சூழ்ந்துகொண்ட நெருக்கடிகளிலும் 
சிரிப்பொன்றையே பதிலாக்கி 
நல்லபடியே நீ ஓய்வு பெறுகிறாய் !
உள்ளபடியே நாங்க ளெல்லாரும் 
உவகை கொள்கிறோம் -
உன்போல் ஒரு தோழன் 
உண்டா இனி என்று 
உலகை கேட்கிறோம் !

சத்தியத்திற்கு கட்டுப்பட்டதை போலல்லவா 
சங்கம் அழைத்த அனைத்து போராட்டத்திலும் 
சொல்லும் முன்னே செயல்படுத்தினாய் !
பதவி உயர்வில் எழுத்தரான காலத்திலும் 
பழசை மறக்காமலே பழகி பார்த்திருக்கிறாய் !
துணை அஞ்சலகங்களில்-எவர் 
துணையில் லாமே சாதித்து காட்டினாய் !

தங்கள் பணிஓய்வு காலங்கள் சிறக்க வாழ்த்துகிறோம் 
-----------------------------------------------------------------------------------------------------
                                      தோழர் சந்தானம் தபால்காரர் 

சந்தனம் மணக்கும் சுந்தர தோழன் 
தொலைத்த சந்தர்ப்பத்தை நோகாமல் 
கிடைத்த வாய்ப்பினை சாதகமாக்கி கொண்டவன் 

சீருடைக்காய் வேறிடம் போனதெல்லாம் 
உன்னோடு போகட்டும் -இன்றோடு விலகட்டும் 
சீர்மிகு இயக்கத்தின் போர்முரசு தொடரட்டும் 
நாளைய நாட்கள் நமக்கு  புதிதாய் பிறக்கட்டும் 

ஆளை பார்த்தால் அறுபது தெரியவில்லை 
நாளை கேட்டால் நம்பாமலும் முடியவில்லை 
ஆரோக்கியத்தோடு இன்னும் ஆயிரமாய் 
சந்தனகுணம் மாறாமல் நிலைத்திட வாழ்த்துகிறோம் 
-------------------------------------------------------------------------------------------------------
                               தோழர் நடராஜன் தபால்காரர் 
நடராஜனும் ஓய்வுபெறுகிறர் 
அடுத்தவர் காதுகளுக்கு 
வலிக்கக்கூடாது என்பதற்காகவே 
மெதுவாய்  பேசுபவர் ---இன்னும் 
பொதுவாய் பேசுபவர் 

ஈடியாய் பணியாற்றிய நாட்களிலும் 
இலாகா  ஊழியராய் பவ ணி வந்த நாட்களிலும் 
அதே நடராஜன் --அன்றும் இன்றும் 
ஒரே நடராஜன் --என்றும் 
இதே நடராஜன் 
பணிஓய்வுக்காலங்கள் சிறக்க வாழ்த்துகிறோம் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 










0 comments:

Post a Comment