...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, June 30, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                                  வாழ்த்துக்கள் 
                           இன்று 30.06.2020  பணிஓய்வு பெறுகின்ற தோழர்கள் 
S .ராமலிங்கம் தலைமை தபால்காரர் திருநெல்வேலி HO மற்றும்
 S .அமிர்தராஜ் தபால்காரர் திருநெல்வேலி HO  ஆகியோர்களின் பணிநிறைவு காலங்கள் சிறப்புடன் அமைய NELLAI NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் 
                                           நெருங்குகிறது கொரானா 
*அங்கே இங்கே அவருக்கு இவருக்கு என்பதெல்லாம் மாறி இன்று நமக்கு அறிமுகமான தோழர்களின் பெயரை குறிப்பிட்டு தொற்று உறுதிசெய்யப்பட்ட செய்திகள் நம்மை வாட்டி வதைக்கின்றன ச்சரிக்கையாக இருப்பது நமது கடமை .
                                துயரத்திலும் சின்ன ஆறுதல் 
*கடந்த சிலநாட்களுக்கு முன்பு நாகர்கோயில் தலைமை அஞ்சலகத்தில் தோழர் ஒருவருக்கு ஏற்பட்ட தொற்றினை அடுத்து வேறு யாருக்கும் அவரது மனைவி உட்பட வேறு யாருக்கும் தொற்று இல்லை என்பதும் -
நமது திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்திற்கு அருகாமையில் உள்ள காவல்துறையில் வேறு யாருக்கும் தொற்று இல்லை என்ற ஆறுதல் செய்தியும் வந்துள்ளது 
                                          ஊரடங்கு நீடிக்கிறது 
தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது மேலும் 15 ம் தேதிவரை பொது போக்குவரத்து நிறுத்தம் 4 ஞாயிற் று கிழமைகளில் முழு ஊரடங்கு உண்டு இந்த சூழலில் நமது ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் மீண்டும் சுழற்சி முறையில் பணி மற்றும் அருகாமையில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றிட அனுமதி கிடைத்தால் அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ள அஞ்சல் ஊழியர்கள் அச்சமனின்றி பணியாற்ற முடியும் .இது குறித்து நமது மாநில சங்கத்தின் கவனத்திற்கு இன்று கொண்டுசெல்லப்படும் 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, June 27, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
              மீண்டும் முரண்டு பிடிக்கும் FINACLE -----
கடந்த பத்து நாட்களாக  Finacle, Sap, MCCamise சரியாக கிடைப்பதில்லை. இதனால் ஊழியர்கள் மிகவும் கஷ்டபடுகின்றனர். சில இடங்களில் ஊழியருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவாகிறது. ஒரு Deposit போடுவதற்கு 5 நிமிடம் ஆகிறது. சில நேரம் அதுவும் முடியாமல் போகிறது.Net கிடைத்தால் software வேலை செய்யவில்லை, Software சரியானால் Net கிடைப்பதில்லை.  இந்த கொரானா நேரத்திலும்கூட வேலையை முடித்து மிகவும் Late ஆக வீடு செல்லும் நிலை உள்ளது. ஆகவே தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 
*கொரானா தொற்று அதிகரிக்கும் இவ்வேளையில் நமது கோட்டத்தில் ஊழியர்கள் தயங்காமல்  sanitizer,mask,போன்ற அவசியமான பொருள்களை வாங்குவதற்கு கோட்ட அலுவலகத்திற்கு தகவல்களை அனுப்பி அனுமதி பெற்று வாங்கி கொள்ளவும் .யாருக்கும் மறுப்பு தெரிவிக்கப்போவதில்லை என்பதினை மனதில் கொள்ளவும் *HSG I பதவிகளில் இரண்டு ஆண்டுகள் சேவைமுடித்த ஊழியர்களுக்கு நோஷனல் NFG(GP 4800)  பதவி உயர்வு வழங்கிடவேண்டும் என நமது மத்தியசங்கம் அஞ்சல் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது .ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் இந்த உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதையும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது 
*CSC (Common Service Centre )  சர்வீஸ்  திட்டத்தி ன் கீழ் அரசின் பல்வேறு பணிகளை
 பார்த்திட அனுமதிக்கும் திட்டத்தை கொரானா பாதிப்பு அதிகமுள்ள இந்த நாட்களில் அமுல்படுத்திடவேண்டாம் எனவும் ஏற்கனேவே ஆதார் மற்றும் பாஸ்போர்ட் சேவைகளினால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை நாம் மறந்துவிடமுடியாது எனவும் மீண்டும் நமது மத்திய சங்கத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது 
             நமது மாநிலசெயலர் தோழர் வீரமணி அவர்களின் அறிக்கை 
அன்பு தோழர்கள்  தோழியர்களுக்கு வணக்கம்
கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்து தற்பொழுது காய்ச்சலில் இருந்து விடுபட்டு உள்ளேன் உடல் சோர்வு மட்டும் உள்ளது நான் பூரண நலம் பெற வேண்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இதயபூர்வமான நெஞ்சார்ந்த   நன்றி நன்றி   நன்றி
A. வீரமணி 

மாநிலச் செயலர்                அஞ்சல் மூன்று
--------------------------------------------------------------------------------
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, June 25, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                    *  நேற்று மாலை கிடைத்த செய்தி -நாகர்கோவிலில் ஒரு ஊழியருக்கு ஏற்பட்ட தொற்றின் காரணமாக நாகர்கோவில் HO மற்றும் கன்னியாகுமரி கோட்ட அலுவலகம் மூடப்பட்டுள்ளது .
                 *அஞ்சல் ஆய்வாளர் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன /அதில் நமது கோட்டத்தில் யாரும் தேர்வாகவில்லை என்ற செய்தி கவலையை தந்தாலும் தமிழகமெங்கும் தொழிற்சங்கத்தில் மிகுந்த ஈடுபாடுள்ள பல இளைய தோழர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் குறிப்பாக தருமபுரி கோட்ட செயலர் தம்பி பழனிமுத்து தேர்வாகியுள்ளார் .அவர்களுக்கு நெல்லை NFPE தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது 
                =நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, June 24, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
Eligibility for an annual increment 1st July 2020
* An employee shall be entitled to once in year one annual increment either on 1st January or 1st July depending on the date of his appointment, promotion or grant of financial upgradation.
* 1st January or 1st July, as the case may be, provided a period of 6 months’ qualifying service is strictly fulfilled.
* The next increment, thereafter shall However, accrue only after completion of one year.
* An employee who falls Withholding Annual Increments not eligible to get annual increments this July 2020. so the employee should not fall under in this category.
Annual Increments with the help of Pay Matrix :
The increment shall be as specified in the vertical Cells of the applicable Level in the Pay Matrix.

Monday, June 22, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                       ஊரடங்கு காலத்திலும்.. உற்சாக விற்பனையில் பொதுத்துறை நிறுவனங்கள் ........
*கொரானா ஒருபக்கம் மறுபக்கம் மீண்டும் பொதுத்துறை மற்றும் அரசுத்துறை நிறுவனங்களின் மீது தாக்குதல் என்ற நிலையை மத்திய அரசு எடுத்துள்ளது இந்தியன் ஓவெர்சீஸ் வங்கி தனியார்மயம் என செய்தி மறைவதற்குள் நிலக்கரி சுரங்க துறையை தனியார்மயமாக்கிடும் முயற்சி தொடங்கியுள்ளது .இதனை எதிர்த்து அந்த துறையின் ஊழியர்கள் வருகிற ஜூலை 2 முதல் 4 வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர் இது இ ன்றெல்ல ஏற்கனவே 1991  முதலே மாறிமாறி வந்த அரசுகள் தங்கள் பங்கிற்கு பொதுத்துறை நிறுவனங்களை சூறையாட தொடங்கிவிட்டன .ஆரம்பத்தில் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதில் தொடங்கி படிப்படியாக லாபம் ஈட்டும் நிறுவங்களின் மீதும் அரசின் கழுகு பார்வை படத்தொடங்கியது -1995 யில் BALCO நிறுவனத்தின் மீது கைவைப்பு என தொடங்கிய தாக்குதல்கள் இறுதியாக நவரத்தின அந்தஸ்து பெற்ற நிறுவனகளையும் விட்டுவைக்கவில்லை ..அதில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை விற்றிட முடிவெடுத்தபோது 2005 யில் தமிழக அரசே அதை வாங்கி காத்துக்கொண்டது .ஆக இப்படியாக எல்லா ஆட்சியாளார்களாலும் தொழிலாளர் நலனுக்கு எதிராக  சட்டங்களை இயற்றப்படும் போது ஆட்சியில் இருந்த கட்சிகள் ஆதரவு தந்த கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு என எல்லாநிலையிலும் எல்லா கொடிகளும் தன் முகத்தை திருப்பி கொண்டன என்பது வரலாற்று உண்மை .புதிய பென்ஷன் சட்டத்த்திற்கு 2013 யில் பாராளுமண்ற த்தில் ஒப்புதல் கொடுக்கும் போதும் இதே காட்சி அரங்கேறியது இன்றுகூட கோவிட காரணத்தை காட்டி நமது சங்கங்கள் கூட போராட்டத்தை தவிர்க்கின்றன .ஆனால் போராடும் நிலக்கரி சுரங்க ஊழியர்களுக்கு மட்டும் ஆதரவு தெரிவிக்க மத்தியஅரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் அழைப்பு விடுக்கின்றன ...இதை முன்மாதிரியாக கொண்டு அஞ்சல் ஊழியர்களின் பகுதி பிரச்சினைகளுக்காக நமது சம்மேளனமும் அகிலஇந்திய சங்கமும் போராட்ட இயக்கங்களை முன்னெடுக்கவேண்டும் என்பதுதான் தமிழக அஞ்சல் ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் .
    இதோ நமது . சம்மேளன ,மத்திய சங்க முடிவுகள் 
   நமது NFPE சம்மேளனத்தின் பெடரல் கவுன்சில் கூட்டம் 10.06.2020 அன்றும் அஞ்சல் மூன்றின் மத்திய செயற்குழு கூட்டம் 18.06.2020 அன்றும் வீடியோ கான்பரென்ஸ் மூலம் நடைபெற்றது .இரண்டு உச்சமட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவுகள் வருகிற 03.07.2020 அன்று Opposing Change in Labour laws, migrant labourers  issues, against freezing of DA/DR , Scrapping  NPS and restoration  of OPS , உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது .மீதமுள்ள நமது பகுதி கோரிக்கைகளுக்கு COVID 19 சகஜ நிலைக்கு வந்தபின் அஞ்சல் வாரியத்துடன் விவாதிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது ..
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பா கரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, June 20, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                          நமது கோட்ட முதுநிலை  கண்காணிப்பாளர் (கூடுதல் பொறுப்பு 
திரு .) VP.சந்திரசேகர் அவர்கள் இடமாறுதல் காரணமாக நேற்று RELIVE ஆகி சென்றுவிட்டார்கள் .2015முதல் -2018 வரை நமது கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றி மீணடும் கடந்த பெப்ருவரி மாதம் முதல் கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றியவர் .ஊழியர்களின் நலன்கருதி பல உதவிகளை செய்தவர் ..எந்தவித வெறுப்புணர்வோடு எவருக்கும் தண்டனை வழங்கியது கிடையாது .ஊழியர்கள் விரும்பி அழைக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று சிறப்பு சேர்த்தவர் .அவர்களை மீண்டும் வாழ்த்துகிறோம் .
                                          இதர செய்திகள் 
*SAS  முகவர்களுக்கு வழங்கப்படும்  AUTHORIZED RECEIPT  BOOK (AAR )  யை ரத்துசெய்திட அஞ்சல் வாரியம்  முடிவெடுத்து அதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் கருத்துக்களை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது 
* நேற்று நடைபெற்ற சம்மேளன குழு கூட்டத்தில் (வீடியோ கான்பரென்ஸ் ) சம்மேளன உதவி பொதுச்செயலர் தோழர் வீரன் (தமிழ்நாடு ) அஞ்சல் பகுதி பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்ட இயக்கங்களை நமது NFPE சம்மேளனம் முன்னெடுக்க வேண்டும் என்று வலுவான கோரிக்கையை வைத்தார் .மீண்டும் தமிழகத்தின் குரல் மத்திய அமைப்புகளில் ஓங்கி ஒலிக்கிறது .தமிழ் மாநிலம் தலைநிமிர்ந்து ஊழியர்கள் பிரச்சினைகளுக்கு போராட அழைக்கிறது பொதுப்போராட்டங்களில் காட்டும் ஆர்வத்தை நம் பகுதி பிரச்சினைகளில் காட்டவேண்டும் என்பதே ஒவ்வொரு அடிமட்ட ஊழியரின் எதிர்பார்ப்பு ..
*PLI /RPLI க்கான புதிய ஊக்கத்தொகை மற்றும் விற்பனை முறையை PLI இயக்குனரகம் 16.06.2020 அன்று வெளியிட்டுள்ளது 
அதன்படி ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு DEVELOPMENT அதிகாரி  நியமிக்கப்படுவார் ..இவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் நியமிக்கப்படுவார்கள் .எழுத்தர் பிரிவில் குறைந்தபட்ச சேவை 5 ஆண்டுகள் பூர்த்திசெய்யப்பட்டிருக்கவேண்டும் வயது 25- -45  குள் இருக்கவேண்டும் 
*மீண்டும் PLI /RPLI பணிக்கு IP /ASP கள் பயன்படுத்தப்படுவார்கள் .(இடையில் IP /ASP  முகவராக பணியாற்ற தடைசெய்யப்பட்டிருந்தது )
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, June 19, 2020

                                                   அழகிய ஆபத்துக்கள் 
கொரானா தனது 
கோர முகத்தை காட்ட 
துவங்கிவிட்டது 

ஆபத்து அருகில் என்றாலும் 
அத்தியாவசியப்பணி எனும் 
அழகிய சொல்லுக்குள் 
அஞ்சல் துறையம் அடைபட்டு நிற்கிறது 

வங்கிகள் மூடப்பட்டால் --நம் 
வருமானத்தை பெருக்க 
வாய்ப்பு கிடைத்திருப்பதாக 
மேலிடத்தில் செய்தி பரப்பப்படுகிறது 

வாழ்த்துச்செய்திகளை 
வாசித்து முடிப்பதற்குள் 
வருந்துகிறோம் செய்தி 
வந்துகொண்டே இருக்கிறது 

வாழ கற்றுக்கொள்ளும் முன்பே 
தப்பிக்க தெரியாமல் 
தத்தளித்து கொண்டிருக்கிறோம் 

மக்கள் பிரதிநிதிகள் முதல் 
மருத்துவர்கள் வரை -மிக 
சாதாரணமாக பலியாகிறார்கள் 

அந்தநாடு -இந்தநாடு என்பது போய் 
அடுத்ததெரு- பக்கத்துவீடு என 
பரவலாக பரவ தொடங்கிவிட்டது 

தலைநகரிலே -பலியாகின்ற 
தபால் ஊழியர்களின் எண்ணிக்கை 
நாள் தவறாமல் அதிகரிக்கிறது 

ஊரடங்கு ஊருக்கு மட்டும் தான் 
உனக்கும் எனக்கும்  அல்ல 
வழக்கமான சேவைகளை செய்து 
வாடிக்கையாளர்களை திருப்பிதிப்படுத்தும் 
வேடிக்கை இங்கே அரங்கேறிக்கொண்டிருக்கிறது 

வரவேற்கவோ -வழியனுப்பவோ 
வருவதற்கு ஆள் இல்லை 
வருத்தமும் வீர வணக்கமும் 
மட்டுமே  இங்கு மிஞ்சும் 

அலுவலகத்தில் ஒருவருக்கு என்றால் 
அடுத்த இரு நாட்களுக்கு 
அலுவலகம்  இயங்காது என்ற 
அறிவிப்போடு  முடிந்துவிடுகிறது 
அதிகாரிகளின் கடமைகள் 

இறந்தவர்களின் கணக்கெடுப்பு 
உதவித்தொகை என நிர்வாகமும் 
-ஒருவருக்கு வேலை என  நாமும் 
அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டோம் 

நாடு இயல்பு நிலைக்கு வந்துவிட்டது 
நாமும் இறைவன் (இலாகா )விட்ட வழி என்று 
நாட்களை நகர்த்த முடிவெடுத்துவிட்டோம் 

ஆம் ஆபத்தை எதிகொள்வோம் 
அலட்சியத்தை விட்டுவிட்டு 
ஆரோக்கிய வாழ்வை தேடுவோம் 

அத்தியாவசிய சேவை எனும் 
அழகிய வாசகம்  நம்மை 
ஆபத்தை தாண்டி 
அழைத்து  கொண்டே இருக்கிறது 

சார் ....போஸ்ட் ....
                                 ---------        SK .ஜேக்கப் ராஜ் --------









Thursday, June 18, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
 *கொரானா எனும் பேராபத்தின் உச்சகட்டமாக ஒவ்வொருநாளும் நம் அஞ்சல் ஊழியர்கள் மரணமடைந்துவருவது தொடர்கதையாகிவிட்டது சென்னை   தோழர் ஜெயபிரகாஷ் மறைவு செய்தி முடிவதற்குள்  பெசன்ட்நகர் முன்னாள் எழுத்தர் தோழியர் தேவகி மரணச்செய்தி வந்துள்ளதுஏற்கனவே சூளைமேடு அலுவலக ஊழியர்களில் மூவருக்கு கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது ..நமது கோட்டத்தில் மஹாராஜநகர் அஞ்சலகத்தில் அருகிலுள்ள நமது அஞ்சல்துறைக்கு மிகவும் நெருக்கமான மருத்துவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது .இதுகுறித்து மஹாராஜநகர் அஞ்சலை அதிகாரி அவர்கள் கோட்ட அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார் .நாமும் நேற்று மாலை ASP (HOS) அவர்களை சந்தித்து மஹாராஜநகர் அலுவலக ஊழியர்கள் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பேசியிருக்கிறோம் 
மாநிலச்சங்க செய்தியில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் அதி தீவிரமாக பரவும் கொரானா தொற்று குறித்தும் இதுவரை சென்னையில்  தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பல தோழர்களின் நிலைமையை எடுத்துக் கூறியும் இறந்துவிட்ட தோழர்களின் விவரங்களை முழுமையாக கொடுத்து  மாநிலச் சங்கத்தின் சார்பாக நமது மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அவர்களிடம் விளக்கமாக கடிதம் கொடுக்கப்பட்டது. 
 *நாளை நடைபெறவுள்ள மத்தி யசங்க செயற்குழுவில் தமிழகம் சார்பாக வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள் 
1. COVID 19,  தாக்கத்தினால் இறந்த ஊழியர்களின் குடுமப உறுப்பினர் ஒருவருக்கு எல்லா விதிமுறைகளையும் தளர்த்தி உடனே கருணைஅடிப்படையிலான பணி வழங்கிடவேண்டும் 
2.ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து இல்லாத /கர்ப்பிணி பெண்கள் /ஊனமுற்றவர்கள் இவர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கிடவேண்டும் 
3.அஞ்சல் ஊழியர்களுக்கு வாரம் 5நாட்கள் வேலை அல்லது வங்கிகளைப்போல் IPPB வரை நீட்டிக்கப்பட்ட இரண்டாம் மற்றும் நான்காம் சனிகிழமை விடுமுறை வழங்கவேண்டும் 
4.ஆய்வாளர் தேர்விற்கு பழையகாலங்களில் இருந்ததை போல் குறைந்தபட்ச சேவை காலம் 5 வருடம் என மாற்றவேண்டும் 
5.LRPA என்னிக்கை 20 சதமாக உயர்த்தவேண்டும் 
6.HSG II &HSG I பதவிகளை நிரப்பிட குறைந்தபட்ச சேவைக்காலத்தை தளர்த்தி ONETIME MEASURE அடிப்படையில்  பதவி உயர்வு வழங்கிடவேண்டும் 
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் 

Wednesday, June 17, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
 * HSG II மற்றும் HSG I  பதவிகளை நிரப்பிட நடைமுறையில் உள்ள நியமனவிதிகளில் உள்ள  கட்டுப்பாடுகளை தளர்த்தி உயர் பதவிகளை நிரப்பிட நமது மத்திய சங்கம் மீண்டும் அஞ்சல் வாரியத்தை வலியுறுத்தியுள்ளது 2017 முதல் அமுல்படுத்தப்பட்ட கேடர் சீரமைப்பினால் 75 சத HSG II மற்றும் HSG I பதவிகள் காலியாகவே உள்ளன இந்த பதவிகளை எழுத்தர் பிரிவு ஊழியர்கள் தான் சமாளித்துவருகிறார்கள் . HSG-II மற்றும் 
HSG-I பதவிகளில்  முறையே  9101 & 2853  புதிய பதவிகள் உருவாக்கிய பின்னரும் மூத்த தோழர்கள் HSG II மற்றும் HSG I  பதவிகளை அடையாமலே ஓய்வுபெறுகிறார்கள் என்பதனை கருத்தில்கொண்டு இந்த தளர்வினை அமுல்படுத்திட வேண்டும் 
*பெருகிவரும் புதிய சேமிப்புக்கணக்குகள் மற்றும் AUTOCREDIT இவைகளை தனியாக  சேமிப்பு புத்தகங்களில் உடனுக்குடன் பதிவு செய்து கொடுக்க வசதியாக அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் 
( Automatic printing of PassBooks ) வழங்கிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது 
*2003 க்கு முன்பாக பணியமர்த்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் முடித்து 2004 க்கு பிறகு பணியில் சேர்ந்த மத்தியஅரசு ஊழியர்கள் மற்றும் தன்னாட்சி நிறுவன  ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தில் மாறிட கொடுக்கப்பட்ட வாய்ப்பை விரைந்து முடித்திட DOPT 11.06.2020 அன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது 
                                                   நெல்லை கோட்ட செய்திகள் 
GDS TO MTS சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதற்கான கமிட்டி நேற்று மதுரையில் கூடியது ..அதற்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .பதவி உயர்வு பெற்று செல்கின்ற GDS தோழர்களுக்கு வாழ்த்துக்கள் 
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, June 16, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 
                                 முக்கிய செய்திகள் --மாநில சங்க கடிதங்கள் ..........
*   10000 ரூபாய்க்கு மேல் SB அக்கவுண்டில் பணம் எடுத்தால் மீண்டும் PRI வெரிஃபிகேஷன் செய்வதை இலாகா விதியின்படி (SB -9/2018_)ரத்து செய்திட ஏற்கனவே நாம் கொடுத்த கடிதத்தின் மீது நடவடிக்கை எடுத்திட மாநில நிர்வாகத்திற்கு மாநில சங்கம் மீண்டும் நினைவூட்டுக் கடிதம்  15/06/2020    அன்று எழுதியுள்ளது .
*   காலியாக உள்ள எழுத்தர் பதவிகளில் தகுதிவாய்ந்த GDS ஊழியர்களை கொண்டு பணியாற்றிட நடவடிக்கை எடுத்திட அகில இந்திய சங்கத்திற்கு மாநில சங்கம்  வலியுறுத்தியுள்ளது 
*     வேகமாக பரவி வரும் கொரானாவால்  சிக்கித் தவிக்கும் காஞ்சிபுரம் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் முக்கிய சேவைகளை தவிர்த்து பிற சேவைகளை ரத்து செய்யக்கோரி மாநிலச் சங்கத்தின்  சார்பாக  மண்டல நிர்வாகத்திற்கு  கடிதம்   எழுதியுள்ளது 
*  கிளை அஞ்சலகங்களில் துவங்கப்படும் SB /TD கணக்குகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையானது டெபாசிட்டர் அந்தந்த பட்டுவாடா பகுதியில் வசிப்பவராக இருக்கவேண்டும் என்று      POSB(CBS)Manual/POSB  யில்  திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது   
*2020 ம் ஆண்டிற்கான   இலாகா தேர்வில் கலந்துகொள்ளும் GDS   ஊழியர்களுக்கான சேவை தகுதிகள் 
MTS தேர்விற்கு 01.01..2017 க்கு   முன்பாகவும் தபால்காரர் தேர்விற்கு 01.01.2015 க்கு முன்பாகவும் GDS ஆக பணிநியமனம் பெற்றிருக்கவேண்டும்  
*வள்ளியூர் உபகோட்டத்தில் மெயில் ஓவர்சியர் பதவிக்கு விருப்பமனுக்கள் கோரப்பட்டுள்ளன /கடைசி  தேதி 19.06.2020
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T-புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை  
            

Monday, June 15, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
*இந்த ஆண்டிற்கான சுழல் மாறுதல் உத்தரவிற்கான ஆயத்தப்பணிகள் நமது கோட்ட அளவில் முடுக்கிவிடப்பட்டுள்ளன .LSG ஊழியர்களை பணியமர்த்தும்போது ஏற்கனவே அங்கு பணியாற்றும் TS ஊழியர்களிடம் அவர்களின் விருப்பங்களின் அடிப்படையில்  இடமாறுதல்களை வழங்கிடவேண்டும் .ஏற்கனவே சில ஊழியர்களிடம் நிர்வாகம்  சுட்டிக்காட்டும் இடங்களை தெரிவுசெய்திட கட்டாயப்படுத்த கூடாது என்பதே நமது கோட்ட சங்கத்தின் நிலைப்பாடு .
* RT  யை பொறுத்தவரை இயக்குனராக உத்தரவு 19.12,2019 வழிகாட்டுதல்கள் மற்றும் 19.05.2020 தேதியிட்ட வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் -
 RULE 38 இடமாறுதல் குறித்த சில விளக்கங்களை அஞ்சல் வாரியம் 03.06.2020 தேதியிட்ட தனது கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளது .
*நேரடி நியமன ஊழியர்கள் .SURPLUS ஊழியர்கள் என்றில்லாமல் இரண்டு ஆண்டு சேவைமுடித்த அனைத்து ஊழியர்களும் RULE 38 இடமாறுதளுக்கு தகுதியானவர்கள் 
*தபால்காரர் மற்றும் MTS ஊழியர்கள் கோட்ட அளவிற்குள் இடமாறுதல் விண்ணப்பிக்க RULE 38 என்றில்லாமல் கோட்ட அதிகாரியே முடிவெடுப்பார் 
*ஜூன் 30 க்கு பிறகு வரும் விண்ணப்பங்களை பரிசீலிக்கமுடியாததால் அவர்களை அடுத்தாண்டிற்காக புதிதாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுவார்கள் .
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 

Saturday, June 13, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
 * புதியதாக தேர்ந்தெடுக்கப்படும் எழுத்தர்கள் (Direct recruit ) Induction பயிற்சிக்காலத்தில் நடைபெறும் தேர்வில் வெற்றிபெறவேண்டும் அதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் மூன்று வாய்ப்புகளுக்குள் தேர்வாகவில்லை என்றால் அவர்களுக்கு நியமனம் ரத்துசெய்யப்படும் இரண்டு வாய்ப்புகளுக்குள் அவர்கள் தேர்வாகவில்லை என்றால் எழுத்துப்பூர்வமான எச்சரிக்கை வழங்கப்படும் என அஞ்சல் வாரியத்தின் 04.06.2020 தேதியிட்ட வழிகாட்டுதல் கடிதம் தெரிவிக்கிறது 
*அங்கே கொல்கத்தாவில் அஞ்சல் ஊழியர் பாதிப்பு -மும்பையில் ஒருவர் சென்னையில் கூடுதல் என்ற நிலைமாறி இன்று கோவில்பட்டியில் ஒரு GDS ஊழியருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது வருத்தமான செய்தி .நம் அலுவலகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களை குறைந்தபட்ச விழிப்புணர்வுடன் இருக்கச்சொல்வது அனைவருக்கும் பாதுகாப்பு 
*நமது கோட்டத்தில் கூடுதல் பொறுப்பேற்றிருக்கும் நமது SSP திரு VPC அவர்கள் 19.06.2020 அன்று கன்னியாகுமரியில் இருந்து RELIVE ஆகிறார்கள் .கன்னியாகுமரி SSP திரு .கணேஷ் குமார் அவர்கள் 22.06.2020 அன்று கன்னியாகுமரி கோட்டத்தில்  பொறுப்பேற்கிறார்கள் 
*நமது மத்திய சங்கத்தின் (P3)செயற்குழு வருகிற 18.06.2020 அன்று வீடியோ கான்பரென்ஸ் மூலம் நடைபெறுகிறது 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்[பா கரண் கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, June 12, 2020

அஞ்சல் துறையில் பணியாற்றி தனித்தமிழ் இயக்கத்தின் மூலம் நாடெங்கும் அறிமுகமானவர் எழுச்சி கவிஞர் பெருஞ்சித்தனார் 
 பாவலேறு என்றழைக்கப்படும் பெருஞ்சித்திரனார் நினைவு நாள். ஜூன் 11,1995 இயற்பெயர் துரை. மாணிக்கம் பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் பணியாற்றியவர் ஐந்து ஆண்டுகள் புதுவையில் வாழ்க்கை அமைந்தது. அக்காலத்தில் பாவேந்தருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. தென்மொழி என்னும் இதழை 1959இல் பெருஞ்சித்திரனார் தொடங்கி நடத்தினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்து பெருஞ்சித்திரன் என்னும் புனைப்பெயரில் எழுதினார். கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவிய கொத்து, பள்ளிப்பறவைகள், நூராசிரியம் முதலிய பல நூல்களை எழுதியுள்ளார். ,
பெருஞ்சித்திரனார் சாதியை வெறுக்கும் தமிழறிஞராக இறுதிவரை வாழ்ந்தார். அவரது சாதி எதிர்ப்புக் கருத்தியல் தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் எளிய, அடித்தட்டு சாதியினரின்பால் மிகுந்த கரிசனம் கொண்டதாகவும் விளங்கியது. எம்மதங்களைத் தழுவினாலும் தமிழர் இனத்தால் தமிழரே என்பதை இவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சாதியை வைத்துத் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தும் போக்கை இவர் தொடர்ந்து கண்டித்து எழுதி வந்தார்.திரு.வி.க போலவே தனித்தமிழ் இயக்கத்தை தூக்கிப் பிடித்தார்.

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 
                                             மாநிலச்சங்க செய்திகள் 
*SMR மற்றும் Special Error  Book ஆகியவற்றை ரத்து செய்ய கோரி ஏற்கனவே மாநிலச் சங்கத்தால். கடிதம் கொடுக்கபட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது இதன் மீது உரிய கவனம் செலுத்திட ஒரு நினைவூட்டும் கடிதம் மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது 
*12.12.2019 அரசு கெசட்டில் கொண்டு வந்துள்ள SB  விதிகளில் மாற்றங்கள் முறையாக CBS- Finacle சாப்ட்வேரில் இதுவரை வரவில்லை. இதை மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று இதன் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டி மாநில சங்கத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது 
*Postman.  GDS. தோழர்கள் எழுத்தராக தேர்ச்சிபெற்று இன்னும் பயிற்சியை எடுக்காமல் அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு CBS-Finacle சாப்ட்வேரில் வேலை செய்வதற்கான அனுமதியை வழங்கிடவும் இதற்கான முறையான பயிற்சியையும் வழங்கிடவும் மேலும் அவர்கள் பணி செய்வதற்கான user id களை வழங்கிடவும் வேண்டி  மாநிலச் சங்கத்தின் சார்பில் CPMG. அவர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது 
                                  மண்டல /மாநில செயலர்களுக்கு நன்றி1 நன்றி1 
*தோழர் M.ரமேஷ் அவர்களின் LSG இடமாறுதல் மேல்முறையீடு மண்டல அலுவலகத்தால் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு வருகிற சு ழல்மாறுதலில் தோழரின் விண்ணப்பத்தை சேர்த்து பரிசீலித்திட உத்தரவு வந்துள்ளது /இந்த பிரச்சினையில் நடவடிக்கைகளை விரைந்து எடுத்த நமது மாநிலசெயலர் சகோதரர் வீரமணி அவர்களுக்கும் தென்மண்டலச்செயலர் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 
தோழமையுடன் SK ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை 

Thursday, June 11, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
* நமது கோட்டத்திற்கு புதிய கண்காணிப்பாளராக இதுவரை 3 அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் 3 அதிகாரிகளும் தங்கள் Adhoc  பதவியுயர்வை ஏற்றுக்கொள்ளவில்லை /ஆகவே வழக்கம்போல் கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் அவர்களின் கூடுதல் பொறுப்பில்தான் நமது கோட்டம் நிர்வகிக்கப்படும் .கன்னியாகுமரி கோட்ட புதிய SSP  ஆக திரு கணேஷ் குமார் IPoS அவர்கள் அடுத்தவாரம் பொறுப்பேற்கிறார்கள் 
*மிக ஆவலோடு எதிர்பார்த்த LGO VACANCY அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பிற்கு 2019 காலியிடஙக்ளில் அதேயாண்டில் எழுந்த LSG யினால் எழுந்த எழுத்தர் இடங்கள் சேர்க்கமுடியாது என மாநிலநிர்வாகம் முடிவெடுத்து அறிவித்துவிட்டது .இது பல இளைய தோழர்களின் கனவினை தற்காலிகமாக தகர்த்திருக்கிறது என்றாலும் அடுத்த தேர்வுக்கு தாங்கள் தயாராகும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
                          45 வது நமது கோட்ட மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்களின் பட்டியல் 
M.ஆசைத்தம்பி -G.கணபதி -T.கோபாலன் -V.ஹரிராமகிருஷ்ணன் --S.ஐசக் பால்பாண்டியன் -A.ஜஹாங்கிர் உசேன் -S.கனகசபதி -A.கதிரேசன் 
K.குத்தாலிங்கம் -S.மகபூப் ஜான் --O .மூ க்கையா --S.முருகன் -B .நாகராஜன் M.பாலசுப்ரமணியன் -S.இளங்கோ 
C .நமசிவாயமூர்த்தி --A-நியூட்டன் -G.புருஷோ த்தமன் --R .ரகுமாதவன் 
G.ராஜேந்திரபோஸ் --M.ராமையா -C.சங்கர் -K.சபரி கைலாஷ் -I.சீனி 
KSY.சாகுல் ஹமீது -KS .ஷியாம் -A.செல்வகுமாரன்-A.சுப்ரமணியன் 
S-சுடலைமுத்து -GS .சுந்தரம் -GR .துளசிராமன் -C.வண்ணமுத்து 
S.வள்ளிநாயகம்  P.சுப்ரமணியன் N.முத்துக்குமாரசாமி -A.ரசூல் 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை ;

Wednesday, June 10, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                   நமது 45  வது கோட்ட மாநாட்டில் அமைக்கப்பட்ட மகிளா கமிட்டி நிர்வாகிகள் பட்டியல் .
                                      33 சதம் என்பதை தாண்டி மாநாட்டில்  முழுவதுமாய் பங்கேற்ற  தோழியர்கள் அனைவரு க்கும் நெல்லை NFPE சார்பாக மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
                                             மகிளா கமிட்டி நிர்வாகிகள் 
தலைவர் ---தோழியர் V.விஜயலெட்சுமி LSG PA  பேட்டை 
கன்வீனர் --தோழியர் S .முத்துபேட்சியம்மாள் PA TVLHO 
                                             உறுப்பினர்கள் 
S .ஆனந்த கோமதி SPM முனைஞ்சிப்பட்டி - S .முத்துலட்சுமி PA TVLHO- 
S .பாரதி OA DO --V.செல்லம்மாள் PA திசையன்விளை-- C .பூர்ணகலா PA TVLHO 
R .உமாதேவி PA நான்குனேரி - M.ஹைருனிஷாபேகம்PAPLC  -R.கனகராஜேஸ்வரி  PAPLC  -S.தமிழ்செல்வி PAPLC --D.ஹேனா SPM மூன்றடைப்பு --JAB .மேரி  PA மேலப்பாளையம் --E .திலகவதி SPM KTC நகர் 
-M.சந்தானமாரி PA திசையன்விளை --A.சிவ னருள்செல்வி OA DO
D.ப்ரீத்தா சலோமி OA DO --M.உஷா தேவி PA மானுர் A.வெற்றிச்செல்வி PA களக்காடு--S.கலாதேவி PAPLC  (மேலும் விடுபட்ட மற்றும் விருப்பமுள்ளவர்கள் கோட்ட கன்வீனரை அனுகவும் )
                                   கௌரவ ஆலோசகர் --S.விஜயராணி SPM ஜவஹர் நகர் 
   கோட்ட சங்கநிர்வாகிகளுக்கு இணையாக மகிளா கமிட்டி நிர்வாகிகள் செயல்படுவார்கள் .நாளை செயற்குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்படும் 
              நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, June 9, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                    *நமது கோட்ட சங்கத்தின்( அஞ்சல் மூன்று நெல்லை புதிய )நிர்வாகிகள் பட்டியல்  நேற்று 08.06.2020 மாலை கோட்ட அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுவிட்டது .
                  *திருத்தப்பட்ட தபால்காரர் MTS (குரூப் -C ) நியமனவிதிகள் (05,-3.2020) அஞ்சல் வாரியத்தால் 08.06,2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது 
1த பால்காரர் நேரடிநியமனத்திற்கு கல்வித்தகுதி +2 (local language )
2.GDS ஊழியர்களுக்கு கல்வித்தகுதி 10 Std local language )(மேலும் மாநில மொழி மற்றும் கம்ப்யூட்டர்  கற்றிருக்கவேண்டும் 
*local language குறித்து அஞ்சல் வாரியம் தனியாக அறிவிப்பு வெளியிடும் 
   இவையெல்லாம் கடந்த காலங்களில் அஞ்சல்துறை  தேர்வை அந்தந்த மாநிலமொழிகளில் நடத்திடவேண்டும் என நமது போராட்டங்களினால் பெற்ற உத்தரவுகள் .
*COVID  19  ஊழியர்களிடையே /வாடிக்கையாளர்களி டையே  பரவும்  போக்கினை 
தடுக்க MHFA மீண்டும் 4.6.2020 தேதியிட்ட வழிகாட்டுதலை அறிவித்துள்ளது 
அதன்படி  ஊழியர்கள் சம்பந்தப்பட்ட  சில தகவல்கள் 
*தனிமனித இடைவெளி 6 அடி  கடைபிடிக்கவேண்டும் 
*அலுவலகநேரங்களில் முககவசம் கட்டயமாக்கப்படுகிறது 
*தொற்று அறிகுறியற்றவர்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும் 
*நுழைவு வாயிலில் சுகா தாரணமான HAND WASH மற்றும் தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தவேண்டும் 
*CONTAINMENT பகுதியில் வசிக்கும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவேண்டாம் 
*அலுவலக பணிநேரம் உணவு இடைவேளை தேநீர் இடைவேளை சாத்தியமானவரை தளர்த்தப்படும் 
*அலுவலக இருக்கைகளை இதே இடைவெளியில் அமைத்திடவேண்டும் 
  நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் ----T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 
*

                       

Monday, June 8, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                    நமது நெல்லை கோட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் 
NFPE
               ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                           TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-GB - dlgs dated at Tirunelveli  - 627002 the 08.06.2020

To
The Senior Superintendent of Post Offices
Tirunelveli Division
Tirunelveli 0627002

Respected Sir

Sub : Submission of list of Office Bearers elected in the 45th Biennial Conference of AIPEU Group C, Tirunelveli Divisional Branch - reg.

As per the notification dated  20.05.2020,  the Biennial Conference of AIPEU Group C Tirunelveli Divisional Branch was held in a befitting manner on 07.06.2020 at Tirunelveli HPO premises.

The conference was chaired by Com. T. Alagumuthu, SPM Tirunelveli Merku SO & Divisional President.

All the new set of Office Bearers elected unanimously in the conference is enclosed herewith.

It is requested to kindly extend the trade union facilities to the Office Bearers as per the extant instructions.

President                                   T.Alagumuthu SPM Tirunelve;i Merku SO
Working President                 N.Kannan APM (G) Palayamkottai HO
Vice President                           S.Avodainayagam SPM Tondarbazar
                                                       M.Ramesh PA Suttamally   

Secretary                                     S.K.Jacobraj LSG PA CPC Tirunelveli HO
Asst.Secretaries                        S.Anandha Raj PA Maharajanagar
                                                        V.S.Krishnan LSG PA Vallioor
                                                        V.Saravanan PA Palayamkottai
                                                        P Arjunan SPM Pettaikulam
                                                         M.Haji Ali PA Eruvadi

Finance Secrectray                 D.Prabahar SPM Ukiirancottai
Asst Finance Secretary           R,Parathan Thirumavalavan SPM MS University
Organising Secretaries            GSivakumar PA Tirunelveli HO                                      
                                                          S.Muthumalai PA SankarNagar
                                                          GNellaiappan LSG PA Maharajanagar
                                                                 Thankingy   ou 
           

                         Yours faithfully

[S.K.JACOBRAJ]

  மகிளா கமிட்டி நிர்வாகிகள் 
தலைவர் .தோழியர் V.விஜய லட்சுமி LSG SPM பேட்டை 
கன்வீனர் தோழியர் S.முத்துபேட்சியம்மாள் PA TVL HO  
 மாநாடுகுறித்த விரிவான அறிக்கையுடன் விரைவில் சந்திப்போம் நன்றி தோழமையுடன்
 SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை                              
                                          

Saturday, June 6, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                         நெல்லை கோட்ட 45 வது மாநாடு வெல்லட்டும் 
                              நெல்லை  மாநாட்டு சிறப்பு அறிக்கை -5
           நமது கோட்டம் பாரம்பரியமிக்க ஒரு கோட்டம் அதில் NFPE இயக்கத்தின் பங்கு மகத்தானது .வாத பிரதிவாதங்கள் கொள்கைவழி பிரசாரங்கள் நிர்வாகிகள் தேர்வில் பலமான போட்டி  தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் தோழமை பேனும் நட்பு என தனது ஜனநாயக முறையில் இருந்து சிறிதும் விலகியதில்லை எவரையும் வித்தியாசமாக நினைத்ததில்லை இதையும் தாண்டி கடந்த 5 வருடங்களாக மாநாட்டில் நமது குடும்ப மழலைகளின் களிமிகு நடனங்கள் இளைய தோழியர்களின் நாடகங்கள் கவிதைகள் என பல்சுவை நிறைந்ததாக இருந்தது இந்த ஆண்டும் அதற்கேதும் குறைவில்லாமல் தோழியர் பூர்ணகலா அவர்களின் உரைவீச்சு எனும் புதிய அறிமுகமும் உண்டு நமது இயக்க கவிஞர் S.முத்துலெட்சுமி அவர்களின் கவிதை வாசிப்பும் உண்டு 
ஆகவே ஞாயிறு ஒருநாள் தான் ஓய்வென்று இருந்துவீடாதீர்கள் --ஓயாமல் உழைக்கும் எங்களுக்கு நீங்கள் தரும் அங்கீகாரம் தான் உங்கள் பங்களிப்பு .
               இதோ தோழியர் S.முத்துலெட்சுமி  அவர்களின் மாநாட்டு கவிதை

NFPE -எங்கள் எல்லையற்ற வானம் 
எந்த இடியும் தகர்த்து விடாமல் 
எந்த மின்னலும் கிழித்து விடாமல் 
என்றும் உயிர்ப்புடன் இருக்கும் 
எல்லையற்ற வானம் -இன்று 
அதில் பல புதிய குயில்களின் கானம் 
அடைந்துகொள்ள கூண்டுகளை தேடாமல் 
பறந்து செல்ல வானத்தை தேர்ந்தெடுத்த 
தேடல் நிறைந்த பறவைகள் 

சந்தேகம் வரலாம் -சங்கம் எதெற்கென்று ?
நேர விதிமுறை -வார விடுமுறை 
சீரான ஊதியம் என் போராடிய 
உயிர்களின் சங்கமமாம் தான் 
ஊழியர்கள் சங்கம் -நமது சங்கம் 

அதிகார அம்புகளை 
கேடயமாய் தடுக்க 
சதிகார வேலைகளை 
சத்தமாய் கேள்வி கேட்க 
சத்தியமாய் சங்கம் வேண்டும் 
தனியாய் இருந்திருந்தால் -எப்போதோ 
தனியார் ஆகியிருப்போம் .....

கவசமில்லை -கையுறை இல்லை 
அவசர ஊரடங்கிலும் 
அலுவலகம வரவேண்டும் 
சங்கம் மட்டுமே சத்தமாக சொல்லியது
 ஊழியர்களின் உயிர் முக்கியமென்று 
ஆம் ..நம்  சங்கம் மட்டுமே சத்தமாக சொல்லியது
 ஊழியர்களின் உயிர் முக்கியமென்று,,,,,

சங்கம் என்பதே பெருமை -அதிலும் 
NFPE என்றும் முதன்மை 
தன்னலம் இல்லாத தலைமை 
ஒருங்கிணைக்க வழிநடத்த 
ஏராளம் ஆளுமை 

போராட்டம் என்றல் 
ஊதியம் இழப்போம் -ஏன் 
உதிரம் கூட இழப்போம் -ஒருபோதும் 
உறுதி இழப்பதில்லை 

புதிய தோழமைகளே !
இது ஓரணி மட்டுமல்ல --பேரணி 
இப்பேரணியில் இணைவதற்கு 
எப்போதும் மகிழ்வீர்கள் இனி ....
புதிய பறவைகளை வரவேற்கிறேன் 
நமது NFPE இயக்க வானில் சிறகு விரிக்க 
                 ----S.முத்துலட்சுமி PA  திருநெல்வேலி HO-------

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை 

Friday, June 5, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                                        நெல்லை  மாநாட்டு சிறப்பு அறிக்கை -4
    வணக்கம் 7.6.2020 யில் நடைபெறும் நமது கோட்ட மாநாட்டில்  பங்கேற்றிட உங்களை மீண்டும் அழைக்கிறோம் மிக சரியாக மாநாட்டை காலை 10 மணிக்கு தொடங்கிட உங்கள் ஒத்துழைப்பு மிகஅவசியம் நமது கோட்ட சங்க நிர்வாகிகளுக்கு இணையாக மகிளா கமிட்டியில் தோழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவுசெய்திருக்கிறோம் .தோழியர்களை  தொழிற்சங்க பணிகளில் இன்னும் ஆர்வமாக ஈடுபடுத்திட இந்த மாநாடு முக்கிய பங்காற்றும் என நம்புகிறோம் புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கும் RULE 38 யில் வந்திருக்கும் தோழர்களுக்கும் இந்த மாநாடு புத்துணர்வை ஊட்டட்டும் புதிய நம்பிக்கையை   காட்டட்டும்                                                         
                                                            வரவேற்கிறோம் 
*நாகப்பட்டினம் கோட்டத்தில் இருந்து RULE 38 யில் இடமாறுதல் பெற்று இன்று பணகுடி அஞ்சலகத்தில் எழுத்தராக பணியில் சேரும் அருமை தம்பி ராமகிருஷ்ணன் அவர்களை NELLAI NFPE வாழ்த்திவரவேற்கிறது தோழர் ராமகிருஷ்ணன் முன்னாள் பெருமாள்புரம் தபால்காரர் அண்ணன் பொன்னுசாமி அவர்களின் புதல்வர் என்பது குறிபிடத்தக்கது 
* தருமபுரி கோட்டத்தில் இருந்து தபால்காரராக பெருமாள்புரத்தில் பணியில் சேர்ந்திருக்கும் தோழர் அஜன் மத்திய சென்னை கோட்டத்தில் இருந்து திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் 
சேர்ந்திருக்கும் தோழியர் மாரியம்மாள் மற்றும் மதுரை கோட்டத்தில் இருந்து பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் சேர்ந்திருக்கும் தோழியர்   வள்ளி ராஜேஸ்வரி   அவர்களையும் வரவேற்கிறோம் இவர் பாளை முன்னாள் தபால்காரர் கணேசன் அவர்களின் புதல்வி ஆவார் 
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -----T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, June 4, 2020

நெல்லை அஞ்சல் ஊழியர்கள் சங்கம் மூன்றாம் பிரிவில் நிறைவேற்ற வந்துள்ள தீர்மானங்கள் 
1அஞ்சல் எழுத்தர்களுக்கான திருத்தப்பட்ட நியமனவிதிகளின் அடிப்படையில் அஞ்சல் எழுத்தர்களுக்கு உயர் ஊதியம் வழங்கிடவேண்டும் 
2.கொரோனாவை காரணம் கட்டி 18 மாதங்களுக்கு முடக்கிவைக்கப்பட்டுள்ள பஞ்சபடியை உடனே வழங்கு 
3அஞ்சல் ஊழியர்கள் அனைவருக்கும் இலாகா அடையாள அட்டையை நிர்வாகமே வழங்கிடவேண்டும் 
4பராமரிப்பு இன்றி இருக்கும் குடும்பத்தோடு குடியிருக்க தகுதியில்லாத  அலுவலக குடியிருப்பு உள்ள அலுவலகங்களை 
குடியிருப்பு இல்லாத அலுவலகமாக மாற்றிடவேண்டும் 
5.போனஸ் பெரும் அதிகபட்ச நாட்கள் 60 என்பதனை மாற்றிடவேண்டும் 
6. HSG 1 HSG 11 பதவிகளுக்கு LSG யில் இருந்து 5 மற்றும் 6 ஆண்டுகள் சேவை என்பதனை தளர்த்தி தகுதியுள்ள அனைவருக்கும் . HSG 1 HSG 11  பதவி உயர்வை வழங்கிடவேண்டும் 
7.ஏழாவது ஊதியக்குழுவின் புதிய சம்பள விகிதத்தில் OPTION கொடுப்பதில் தணிக்கை அதிகாரிகளின் ஆட்சேபனையை ரத்துசெய்திட வேண்டும் 
8.GDS செக்யூரிட்டி பாண்ட் இலாகா ஊழியர்களுக்கான தொழில்வரி உள்ளிட்ட தொகைகளை பல தவணைகளாக பிடித்தம் செய்திடவேண்டும் குறிப்பாக GDS ஊழியர்களுக்கு 3000  ,4000 என ஒரே தவணையில் பிடித்தம் செய்வதை   தவிர்க்கவேண்டும் 
மேற்கண்ட தீர்மானங்கள் இதுவரை கிடைக்கப்பெற்றோம் மீதமுள்ள தீர்மானங்களை விரைந்து வழங்கிடுவீர் 
நன்றி SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 
                       நமது கோட்ட சங்க வாட்ஸாப் குரூப்பில் (NELLAI NFPE- I ) நமது மாநிலசெயலர் தோழர் A வீரமணி அவர்களை இணைத்துள்ளோம் நீண்டநாட்களுக்கு பிறகு மாநில செயலர் நம் தளத்தில் இருப்பது நமக்கெல்லாம் பெருமையே !அவர்களை வாழ்த்திவரவேற்ப்போம் .
                                                   முக்கிய செய்திகள் 
              நமது மாநாட்டிற்கு தீர்மானங்களை அனுப்புகிறவர்கள் இன்று மாலைக்குள் அனுப்பிவைக்கும் படி மீண்டும் நினைவூட்டுகிறோம் 
              இலாகா தேர்விற்கான உத்தேசமான தேர்வு அட்டவணைகள் அஞ்சல் வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது 
              HSG I இடமாறுதல்கள் குறித்த விருப்ப விண்ணப்பங்கள் மண்டல அலுவலகத்தால் கோரப்பட்டுள்ளது 
              நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, June 3, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
வணக்கம்                 
   நெல்லை  மாநாட்டு சிறப்பு அறிக்கை -3
                           நேற்றைய நமது அறிவிப்பில்  ஓய்வுபெற்ற தோழியர்களில் விடுபட்ட தோழியர்கள் 
1AM .ராஜேஸ்வரி  2.வாசுகி .
                                                மாநாட்டிற்கு வருகிற தென்பகுதி ஊழியர்களுக்கு மீண்டும் நினைவு படுத்துகிறோம் 
திசையன்விளை பகுதி ஊழியர்கள் -தோழர்கள் அர்ஜுனன் மற்றும் சிவகுமார் SPM சமூகரெங்கபுரம் அவர்களையும் வள்ளியூர் பகுதி ஊழியர்கள் தோழர் VS .கிருஷ்ணன் LSG PA வள்ளியூர் அவர்களையும் 
களக்காடு பகுதி ஊழியர்கள் தோழர் கணபதி PA களக்காடு அவர்களையும் நாங்குநேரி பகுதி ஊழியர்கள் தோழியர் உமா தேவி PA நான்குனேரி அவர்களையும் தொடர்புகொள்ளவும் 
                                        புதிய எழுத்தர்களளை (GDS-PA )  வரவேற்கிறோம் 
தோழர்கள் A.வெர்னிக் ஜெல்சி S.பிரபாவதி S.முத்துலட்சுமி A.சத்யா A.பழனிவேல் R.கவுசல்யா T.அருணாசெல்வி J.ஆனந்த புஷ்பராஜ் P.கிருஷ்ணவேணி Mசித்திரை செல்வம் C .மஞ்சுளா M.இன்ப சத்யா S.ஹரிகிருஷ்ணன் 
                     புதிய தபால்காரர்GDS-போஸ்ட்மேன் /MTS தோழர்களையும் மாநாட்டிற்கு எதிர்பார்க்கிறோம் 
E.அருண்குமார் M.பகவதி GS .கங்காதரன் A.முத்துலட்சுமி B .பியூலா எமிலி T.சிவலிங்கம் N.ராமலட்சுமி N.உமாமகேஸ்வரி U.சுதா M.சுகந்தி M.பாலசுப்ரமணியன் M.அந்தோணி பூபாள ராயன் M.ரெங்கநாதன் M.அருணாச்சலம் A.அனுசுயா P.வெங்கடேஸ்வரி N.வெங்கடாச்சலம் M.ரேவதி M.மகேஸ்வரன் K.செல்வரத்தினம் 
                               தீர்மானகளை அனுப்புகிற தோழர்கள் விரைந்து அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம் 
இதுவரை வந்த தீர்மானங்கள் .........
1POSB கணக்குகளுக்கு IFSC CODE மற்றும் MOBILE BANKING வசதிகள் கொடுக்கவேண்டும் 
2.PA கேடர்களுக்கு உயர் ஊதியம் எனும் கோரிக்கை மீண்டும் வலியுறுத்த படவேண்டும் 
3.அதிகபட்ச போனஸ் 60 நாட்கள் என்பது மாற்றப்பவேண்டும் 
4.அனைத்து ஊழியர்களுக்கும் நிர்வாகம் சார்பாக அடையாள அட்டை வழங்கிடவேண்டும் 
                        தீர்மானங்கள் ...........
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, June 1, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
   வணக்கம்             நெல்லை  மாநாட்டு சிறப்பு அறிக்கை -2
நமது கோட்ட மாநாட்டில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று கடந்த இராண்டுகளில் ஓய்வுபெற்ற ஊழியர்களை கௌரவிப்பது அதன் அடிப்படையில் கீழ்கண்ட ஊழியர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது நமது தோழர்களும் தொடர்பில் உள்ள ஊழியர்களுக்கு தகவல்களை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம் 
1.பெருமாள் களக்காடு 2 .KGகுருசாமி 3.K .எழிலரசி 4.M .அப்துல்ரஹீம் 
5.M .அந்தோணி சாமி 6.R .வனிதா 7.C .ராணி அன்பரசி 8.முத்து கிருஷ்ணன் வள்ளியூர் 9.II மகாராஜன் திசையன்விளை 10.R .ஆனந்த கண்மணி 11.P .செல்வராஜ் 12 A .பூங்குமரி 13.T .சுடலையாண்டி 14.MP.விஜயா 15.K அனுராதா 16.P .குமாரி 17.R .ராமாத்தாள் 
    மேற்குறிப்பிட்ட ஓய்வூதியர்கள் அனைவரும் மாநாட்டில் கலந்துகொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம் அழைப்பிதழ்களும்     அவரவர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது 
                                          ------------------------------
                                           முக்கிய செய்திகள் 
பேருந்து இயங்க தொடங்கிவிட்டது அதனால் அருகிலுள்ள அலுவலகங்களில் பணியாற்றிய ஊழியர்களை உடனே அவரவர் சொந்த அலுவலகத்தில் பணியாற்றிட நேற்று நமது கோட்ட அலுவலகத்தால் உத்தரவு மாலை வந்தது உடனே ஒருகடிதத்தை தயார்படுத்தி நமது கண்காணிப்பாளர் அவர்களிடம் பேசியபின் முற்றிலுமாக போக்குவரத்து இயங்காத அலுவலகங்களுக்கு சில விலக்குகள் அளிக்க பரீசீலிப்பதாக  உறுதி அளித்துள்ளார்கள் அதற்காக   நமது SSP அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 
                                 நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ்P3 -T.புஷ்பாகரன்P4  கோட்ட செயலர்கள்  நெல்லை                                       
                                          

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                      நெல்லை  மாநாட்டு சிறப்பு அறிக்கை -1
                            வணக்கம் நமது கோட்ட சங்கத்தின் 45 வது கோட்ட மாநாட்டிற்கான அறிவிப்பு மற்றும் அழைப்பிதழை தாங்கள் பார்த்திருப்பீர்கள் எந்த சூழலில் இந்த மாநாடு நடைபெறுகிறது என்பதனை தாங்கள் அறீவீர்கள் எவ்வளவு விரைவாக மாநாட்டுநிக்ழ்ச்சிகளை முடிக்கமுடியுமே அவ்வளவு விரைவாக மாநாட்டினை நடத்திட முடிவெடுத்துள்ளோம் ஆகவே தாங்கள் அனைவரும் தவறாமல் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறோம் மாநாட்டில் முக்கிய நிகழ்வான தீர்மானங்களை வடித்தெடுக்கும் நிகழ்ச்சி ஒருசடங்காக மட்டும் அமைந்துவிடக்கூடாது நாம் எடுக்கின்ற தீர்மானங்கள் நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியாக மாறவேண்டும் கோட்ட மட்டத்தில் மாநில மட்டத்தில் அகிலஇந்திய அளவில் நாம் எடுக்கவேண்டிய பிரச்சினைகளை தீர்மானமாக எடுக்க உங்கள் பங்களிப்பும் அவசியம் ஆகவே வருகிற வியாழன் {4,6,2020 } மாலைக்குள் தீர்மானங்களை கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் 
                  நன்றி தோழமையுடன் SK ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை