...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, June 17, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
 * HSG II மற்றும் HSG I  பதவிகளை நிரப்பிட நடைமுறையில் உள்ள நியமனவிதிகளில் உள்ள  கட்டுப்பாடுகளை தளர்த்தி உயர் பதவிகளை நிரப்பிட நமது மத்திய சங்கம் மீண்டும் அஞ்சல் வாரியத்தை வலியுறுத்தியுள்ளது 2017 முதல் அமுல்படுத்தப்பட்ட கேடர் சீரமைப்பினால் 75 சத HSG II மற்றும் HSG I பதவிகள் காலியாகவே உள்ளன இந்த பதவிகளை எழுத்தர் பிரிவு ஊழியர்கள் தான் சமாளித்துவருகிறார்கள் . HSG-II மற்றும் 
HSG-I பதவிகளில்  முறையே  9101 & 2853  புதிய பதவிகள் உருவாக்கிய பின்னரும் மூத்த தோழர்கள் HSG II மற்றும் HSG I  பதவிகளை அடையாமலே ஓய்வுபெறுகிறார்கள் என்பதனை கருத்தில்கொண்டு இந்த தளர்வினை அமுல்படுத்திட வேண்டும் 
*பெருகிவரும் புதிய சேமிப்புக்கணக்குகள் மற்றும் AUTOCREDIT இவைகளை தனியாக  சேமிப்பு புத்தகங்களில் உடனுக்குடன் பதிவு செய்து கொடுக்க வசதியாக அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் 
( Automatic printing of PassBooks ) வழங்கிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது 
*2003 க்கு முன்பாக பணியமர்த்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் முடித்து 2004 க்கு பிறகு பணியில் சேர்ந்த மத்தியஅரசு ஊழியர்கள் மற்றும் தன்னாட்சி நிறுவன  ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தில் மாறிட கொடுக்கப்பட்ட வாய்ப்பை விரைந்து முடித்திட DOPT 11.06.2020 அன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது 
                                                   நெல்லை கோட்ட செய்திகள் 
GDS TO MTS சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதற்கான கமிட்டி நேற்று மதுரையில் கூடியது ..அதற்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .பதவி உயர்வு பெற்று செல்கின்ற GDS தோழர்களுக்கு வாழ்த்துக்கள் 
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment