...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, June 22, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                       ஊரடங்கு காலத்திலும்.. உற்சாக விற்பனையில் பொதுத்துறை நிறுவனங்கள் ........
*கொரானா ஒருபக்கம் மறுபக்கம் மீண்டும் பொதுத்துறை மற்றும் அரசுத்துறை நிறுவனங்களின் மீது தாக்குதல் என்ற நிலையை மத்திய அரசு எடுத்துள்ளது இந்தியன் ஓவெர்சீஸ் வங்கி தனியார்மயம் என செய்தி மறைவதற்குள் நிலக்கரி சுரங்க துறையை தனியார்மயமாக்கிடும் முயற்சி தொடங்கியுள்ளது .இதனை எதிர்த்து அந்த துறையின் ஊழியர்கள் வருகிற ஜூலை 2 முதல் 4 வரை வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர் இது இ ன்றெல்ல ஏற்கனவே 1991  முதலே மாறிமாறி வந்த அரசுகள் தங்கள் பங்கிற்கு பொதுத்துறை நிறுவனங்களை சூறையாட தொடங்கிவிட்டன .ஆரம்பத்தில் நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பதில் தொடங்கி படிப்படியாக லாபம் ஈட்டும் நிறுவங்களின் மீதும் அரசின் கழுகு பார்வை படத்தொடங்கியது -1995 யில் BALCO நிறுவனத்தின் மீது கைவைப்பு என தொடங்கிய தாக்குதல்கள் இறுதியாக நவரத்தின அந்தஸ்து பெற்ற நிறுவனகளையும் விட்டுவைக்கவில்லை ..அதில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை விற்றிட முடிவெடுத்தபோது 2005 யில் தமிழக அரசே அதை வாங்கி காத்துக்கொண்டது .ஆக இப்படியாக எல்லா ஆட்சியாளார்களாலும் தொழிலாளர் நலனுக்கு எதிராக  சட்டங்களை இயற்றப்படும் போது ஆட்சியில் இருந்த கட்சிகள் ஆதரவு தந்த கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு என எல்லாநிலையிலும் எல்லா கொடிகளும் தன் முகத்தை திருப்பி கொண்டன என்பது வரலாற்று உண்மை .புதிய பென்ஷன் சட்டத்த்திற்கு 2013 யில் பாராளுமண்ற த்தில் ஒப்புதல் கொடுக்கும் போதும் இதே காட்சி அரங்கேறியது இன்றுகூட கோவிட காரணத்தை காட்டி நமது சங்கங்கள் கூட போராட்டத்தை தவிர்க்கின்றன .ஆனால் போராடும் நிலக்கரி சுரங்க ஊழியர்களுக்கு மட்டும் ஆதரவு தெரிவிக்க மத்தியஅரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் அழைப்பு விடுக்கின்றன ...இதை முன்மாதிரியாக கொண்டு அஞ்சல் ஊழியர்களின் பகுதி பிரச்சினைகளுக்காக நமது சம்மேளனமும் அகிலஇந்திய சங்கமும் போராட்ட இயக்கங்களை முன்னெடுக்கவேண்டும் என்பதுதான் தமிழக அஞ்சல் ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் .
    இதோ நமது . சம்மேளன ,மத்திய சங்க முடிவுகள் 
   நமது NFPE சம்மேளனத்தின் பெடரல் கவுன்சில் கூட்டம் 10.06.2020 அன்றும் அஞ்சல் மூன்றின் மத்திய செயற்குழு கூட்டம் 18.06.2020 அன்றும் வீடியோ கான்பரென்ஸ் மூலம் நடைபெற்றது .இரண்டு உச்சமட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவுகள் வருகிற 03.07.2020 அன்று Opposing Change in Labour laws, migrant labourers  issues, against freezing of DA/DR , Scrapping  NPS and restoration  of OPS , உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது .மீதமுள்ள நமது பகுதி கோரிக்கைகளுக்கு COVID 19 சகஜ நிலைக்கு வந்தபின் அஞ்சல் வாரியத்துடன் விவாதிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது ..
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பா கரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

1 comment:

  1. Tirunelveli division l GDS to postman enna mark Ku pottanga? OBC UR plz tell me sir

    ReplyDelete