...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, June 6, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                         நெல்லை கோட்ட 45 வது மாநாடு வெல்லட்டும் 
                              நெல்லை  மாநாட்டு சிறப்பு அறிக்கை -5
           நமது கோட்டம் பாரம்பரியமிக்க ஒரு கோட்டம் அதில் NFPE இயக்கத்தின் பங்கு மகத்தானது .வாத பிரதிவாதங்கள் கொள்கைவழி பிரசாரங்கள் நிர்வாகிகள் தேர்வில் பலமான போட்டி  தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் தோழமை பேனும் நட்பு என தனது ஜனநாயக முறையில் இருந்து சிறிதும் விலகியதில்லை எவரையும் வித்தியாசமாக நினைத்ததில்லை இதையும் தாண்டி கடந்த 5 வருடங்களாக மாநாட்டில் நமது குடும்ப மழலைகளின் களிமிகு நடனங்கள் இளைய தோழியர்களின் நாடகங்கள் கவிதைகள் என பல்சுவை நிறைந்ததாக இருந்தது இந்த ஆண்டும் அதற்கேதும் குறைவில்லாமல் தோழியர் பூர்ணகலா அவர்களின் உரைவீச்சு எனும் புதிய அறிமுகமும் உண்டு நமது இயக்க கவிஞர் S.முத்துலெட்சுமி அவர்களின் கவிதை வாசிப்பும் உண்டு 
ஆகவே ஞாயிறு ஒருநாள் தான் ஓய்வென்று இருந்துவீடாதீர்கள் --ஓயாமல் உழைக்கும் எங்களுக்கு நீங்கள் தரும் அங்கீகாரம் தான் உங்கள் பங்களிப்பு .
               இதோ தோழியர் S.முத்துலெட்சுமி  அவர்களின் மாநாட்டு கவிதை

NFPE -எங்கள் எல்லையற்ற வானம் 
எந்த இடியும் தகர்த்து விடாமல் 
எந்த மின்னலும் கிழித்து விடாமல் 
என்றும் உயிர்ப்புடன் இருக்கும் 
எல்லையற்ற வானம் -இன்று 
அதில் பல புதிய குயில்களின் கானம் 
அடைந்துகொள்ள கூண்டுகளை தேடாமல் 
பறந்து செல்ல வானத்தை தேர்ந்தெடுத்த 
தேடல் நிறைந்த பறவைகள் 

சந்தேகம் வரலாம் -சங்கம் எதெற்கென்று ?
நேர விதிமுறை -வார விடுமுறை 
சீரான ஊதியம் என் போராடிய 
உயிர்களின் சங்கமமாம் தான் 
ஊழியர்கள் சங்கம் -நமது சங்கம் 

அதிகார அம்புகளை 
கேடயமாய் தடுக்க 
சதிகார வேலைகளை 
சத்தமாய் கேள்வி கேட்க 
சத்தியமாய் சங்கம் வேண்டும் 
தனியாய் இருந்திருந்தால் -எப்போதோ 
தனியார் ஆகியிருப்போம் .....

கவசமில்லை -கையுறை இல்லை 
அவசர ஊரடங்கிலும் 
அலுவலகம வரவேண்டும் 
சங்கம் மட்டுமே சத்தமாக சொல்லியது
 ஊழியர்களின் உயிர் முக்கியமென்று 
ஆம் ..நம்  சங்கம் மட்டுமே சத்தமாக சொல்லியது
 ஊழியர்களின் உயிர் முக்கியமென்று,,,,,

சங்கம் என்பதே பெருமை -அதிலும் 
NFPE என்றும் முதன்மை 
தன்னலம் இல்லாத தலைமை 
ஒருங்கிணைக்க வழிநடத்த 
ஏராளம் ஆளுமை 

போராட்டம் என்றல் 
ஊதியம் இழப்போம் -ஏன் 
உதிரம் கூட இழப்போம் -ஒருபோதும் 
உறுதி இழப்பதில்லை 

புதிய தோழமைகளே !
இது ஓரணி மட்டுமல்ல --பேரணி 
இப்பேரணியில் இணைவதற்கு 
எப்போதும் மகிழ்வீர்கள் இனி ....
புதிய பறவைகளை வரவேற்கிறேன் 
நமது NFPE இயக்க வானில் சிறகு விரிக்க 
                 ----S.முத்துலட்சுமி PA  திருநெல்வேலி HO-------

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை 

0 comments:

Post a Comment