...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, June 19, 2020

                                                   அழகிய ஆபத்துக்கள் 
கொரானா தனது 
கோர முகத்தை காட்ட 
துவங்கிவிட்டது 

ஆபத்து அருகில் என்றாலும் 
அத்தியாவசியப்பணி எனும் 
அழகிய சொல்லுக்குள் 
அஞ்சல் துறையம் அடைபட்டு நிற்கிறது 

வங்கிகள் மூடப்பட்டால் --நம் 
வருமானத்தை பெருக்க 
வாய்ப்பு கிடைத்திருப்பதாக 
மேலிடத்தில் செய்தி பரப்பப்படுகிறது 

வாழ்த்துச்செய்திகளை 
வாசித்து முடிப்பதற்குள் 
வருந்துகிறோம் செய்தி 
வந்துகொண்டே இருக்கிறது 

வாழ கற்றுக்கொள்ளும் முன்பே 
தப்பிக்க தெரியாமல் 
தத்தளித்து கொண்டிருக்கிறோம் 

மக்கள் பிரதிநிதிகள் முதல் 
மருத்துவர்கள் வரை -மிக 
சாதாரணமாக பலியாகிறார்கள் 

அந்தநாடு -இந்தநாடு என்பது போய் 
அடுத்ததெரு- பக்கத்துவீடு என 
பரவலாக பரவ தொடங்கிவிட்டது 

தலைநகரிலே -பலியாகின்ற 
தபால் ஊழியர்களின் எண்ணிக்கை 
நாள் தவறாமல் அதிகரிக்கிறது 

ஊரடங்கு ஊருக்கு மட்டும் தான் 
உனக்கும் எனக்கும்  அல்ல 
வழக்கமான சேவைகளை செய்து 
வாடிக்கையாளர்களை திருப்பிதிப்படுத்தும் 
வேடிக்கை இங்கே அரங்கேறிக்கொண்டிருக்கிறது 

வரவேற்கவோ -வழியனுப்பவோ 
வருவதற்கு ஆள் இல்லை 
வருத்தமும் வீர வணக்கமும் 
மட்டுமே  இங்கு மிஞ்சும் 

அலுவலகத்தில் ஒருவருக்கு என்றால் 
அடுத்த இரு நாட்களுக்கு 
அலுவலகம்  இயங்காது என்ற 
அறிவிப்போடு  முடிந்துவிடுகிறது 
அதிகாரிகளின் கடமைகள் 

இறந்தவர்களின் கணக்கெடுப்பு 
உதவித்தொகை என நிர்வாகமும் 
-ஒருவருக்கு வேலை என  நாமும் 
அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டோம் 

நாடு இயல்பு நிலைக்கு வந்துவிட்டது 
நாமும் இறைவன் (இலாகா )விட்ட வழி என்று 
நாட்களை நகர்த்த முடிவெடுத்துவிட்டோம் 

ஆம் ஆபத்தை எதிகொள்வோம் 
அலட்சியத்தை விட்டுவிட்டு 
ஆரோக்கிய வாழ்வை தேடுவோம் 

அத்தியாவசிய சேவை எனும் 
அழகிய வாசகம்  நம்மை 
ஆபத்தை தாண்டி 
அழைத்து  கொண்டே இருக்கிறது 

சார் ....போஸ்ட் ....
                                 ---------        SK .ஜேக்கப் ராஜ் --------









0 comments:

Post a Comment