...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, June 30, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                                  வாழ்த்துக்கள் 
                           இன்று 30.06.2020  பணிஓய்வு பெறுகின்ற தோழர்கள் 
S .ராமலிங்கம் தலைமை தபால்காரர் திருநெல்வேலி HO மற்றும்
 S .அமிர்தராஜ் தபால்காரர் திருநெல்வேலி HO  ஆகியோர்களின் பணிநிறைவு காலங்கள் சிறப்புடன் அமைய NELLAI NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் 
                                           நெருங்குகிறது கொரானா 
*அங்கே இங்கே அவருக்கு இவருக்கு என்பதெல்லாம் மாறி இன்று நமக்கு அறிமுகமான தோழர்களின் பெயரை குறிப்பிட்டு தொற்று உறுதிசெய்யப்பட்ட செய்திகள் நம்மை வாட்டி வதைக்கின்றன ச்சரிக்கையாக இருப்பது நமது கடமை .
                                துயரத்திலும் சின்ன ஆறுதல் 
*கடந்த சிலநாட்களுக்கு முன்பு நாகர்கோயில் தலைமை அஞ்சலகத்தில் தோழர் ஒருவருக்கு ஏற்பட்ட தொற்றினை அடுத்து வேறு யாருக்கும் அவரது மனைவி உட்பட வேறு யாருக்கும் தொற்று இல்லை என்பதும் -
நமது திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்திற்கு அருகாமையில் உள்ள காவல்துறையில் வேறு யாருக்கும் தொற்று இல்லை என்ற ஆறுதல் செய்தியும் வந்துள்ளது 
                                          ஊரடங்கு நீடிக்கிறது 
தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது மேலும் 15 ம் தேதிவரை பொது போக்குவரத்து நிறுத்தம் 4 ஞாயிற் று கிழமைகளில் முழு ஊரடங்கு உண்டு இந்த சூழலில் நமது ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் மீண்டும் சுழற்சி முறையில் பணி மற்றும் அருகாமையில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றிட அனுமதி கிடைத்தால் அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டுள்ள அஞ்சல் ஊழியர்கள் அச்சமனின்றி பணியாற்ற முடியும் .இது குறித்து நமது மாநில சங்கத்தின் கவனத்திற்கு இன்று கொண்டுசெல்லப்படும் 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment