...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, June 20, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                          நமது கோட்ட முதுநிலை  கண்காணிப்பாளர் (கூடுதல் பொறுப்பு 
திரு .) VP.சந்திரசேகர் அவர்கள் இடமாறுதல் காரணமாக நேற்று RELIVE ஆகி சென்றுவிட்டார்கள் .2015முதல் -2018 வரை நமது கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றி மீணடும் கடந்த பெப்ருவரி மாதம் முதல் கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றியவர் .ஊழியர்களின் நலன்கருதி பல உதவிகளை செய்தவர் ..எந்தவித வெறுப்புணர்வோடு எவருக்கும் தண்டனை வழங்கியது கிடையாது .ஊழியர்கள் விரும்பி அழைக்கும் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று சிறப்பு சேர்த்தவர் .அவர்களை மீண்டும் வாழ்த்துகிறோம் .
                                          இதர செய்திகள் 
*SAS  முகவர்களுக்கு வழங்கப்படும்  AUTHORIZED RECEIPT  BOOK (AAR )  யை ரத்துசெய்திட அஞ்சல் வாரியம்  முடிவெடுத்து அதன் அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் கருத்துக்களை கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது 
* நேற்று நடைபெற்ற சம்மேளன குழு கூட்டத்தில் (வீடியோ கான்பரென்ஸ் ) சம்மேளன உதவி பொதுச்செயலர் தோழர் வீரன் (தமிழ்நாடு ) அஞ்சல் பகுதி பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்ட இயக்கங்களை நமது NFPE சம்மேளனம் முன்னெடுக்க வேண்டும் என்று வலுவான கோரிக்கையை வைத்தார் .மீண்டும் தமிழகத்தின் குரல் மத்திய அமைப்புகளில் ஓங்கி ஒலிக்கிறது .தமிழ் மாநிலம் தலைநிமிர்ந்து ஊழியர்கள் பிரச்சினைகளுக்கு போராட அழைக்கிறது பொதுப்போராட்டங்களில் காட்டும் ஆர்வத்தை நம் பகுதி பிரச்சினைகளில் காட்டவேண்டும் என்பதே ஒவ்வொரு அடிமட்ட ஊழியரின் எதிர்பார்ப்பு ..
*PLI /RPLI க்கான புதிய ஊக்கத்தொகை மற்றும் விற்பனை முறையை PLI இயக்குனரகம் 16.06.2020 அன்று வெளியிட்டுள்ளது 
அதன்படி ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு DEVELOPMENT அதிகாரி  நியமிக்கப்படுவார் ..இவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் நியமிக்கப்படுவார்கள் .எழுத்தர் பிரிவில் குறைந்தபட்ச சேவை 5 ஆண்டுகள் பூர்த்திசெய்யப்பட்டிருக்கவேண்டும் வயது 25- -45  குள் இருக்கவேண்டும் 
*மீண்டும் PLI /RPLI பணிக்கு IP /ASP கள் பயன்படுத்தப்படுவார்கள் .(இடையில் IP /ASP  முகவராக பணியாற்ற தடைசெய்யப்பட்டிருந்தது )
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

1 comment:

  1. V.P.Chandarasekar.SSPO.,is very nice man.when his period TIRUNELVELI.,Division we canvass a strike camp at Plc.H.O.And Division office,he advised by soft words and some strike news from north India circles.
    Without prestige he attended my retirement function at my house.
    K.PONNURAJ.retired P.A.,TIRUNELVELIH.O.

    ReplyDelete