...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, June 15, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
*இந்த ஆண்டிற்கான சுழல் மாறுதல் உத்தரவிற்கான ஆயத்தப்பணிகள் நமது கோட்ட அளவில் முடுக்கிவிடப்பட்டுள்ளன .LSG ஊழியர்களை பணியமர்த்தும்போது ஏற்கனவே அங்கு பணியாற்றும் TS ஊழியர்களிடம் அவர்களின் விருப்பங்களின் அடிப்படையில்  இடமாறுதல்களை வழங்கிடவேண்டும் .ஏற்கனவே சில ஊழியர்களிடம் நிர்வாகம்  சுட்டிக்காட்டும் இடங்களை தெரிவுசெய்திட கட்டாயப்படுத்த கூடாது என்பதே நமது கோட்ட சங்கத்தின் நிலைப்பாடு .
* RT  யை பொறுத்தவரை இயக்குனராக உத்தரவு 19.12,2019 வழிகாட்டுதல்கள் மற்றும் 19.05.2020 தேதியிட்ட வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் -
 RULE 38 இடமாறுதல் குறித்த சில விளக்கங்களை அஞ்சல் வாரியம் 03.06.2020 தேதியிட்ட தனது கடிதத்தில் தெளிவுபடுத்தியுள்ளது .
*நேரடி நியமன ஊழியர்கள் .SURPLUS ஊழியர்கள் என்றில்லாமல் இரண்டு ஆண்டு சேவைமுடித்த அனைத்து ஊழியர்களும் RULE 38 இடமாறுதளுக்கு தகுதியானவர்கள் 
*தபால்காரர் மற்றும் MTS ஊழியர்கள் கோட்ட அளவிற்குள் இடமாறுதல் விண்ணப்பிக்க RULE 38 என்றில்லாமல் கோட்ட அதிகாரியே முடிவெடுப்பார் 
*ஜூன் 30 க்கு பிறகு வரும் விண்ணப்பங்களை பரிசீலிக்கமுடியாததால் அவர்களை அடுத்தாண்டிற்காக புதிதாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுவார்கள் .
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 

0 comments:

Post a Comment