...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, March 5, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 

                              உணமை சாகவிடாது ! பொய் வாழவிடாது !

தமிழக அஞ்சல் வரலாற்றில் சமீபகாலமாக GDSTO PA  GDS TO போஸ்ட்மேன் போஸ்ட்மேன் /MTS TO PA  என அதிக எண்ணிக்கையில் தேர்ச்சிபெற்றுவருவதற்கு அவர்களுக்காக தொழிற்சங்கங்கள் உருவாக்கி கொடுத்த /கண்டுபிடித்து கொடுத்த காலி பணியிடங்களே முக்கிய காரணம் என்பதை யாரும் மறந்துவிட முடியாது .

இது தொடர்பாக அன்றைய நமது NFPE -P 3 தமிழ்மாநில செயலர் அண்ணன் JR அவர்கள் 2017 யில் நடைபெற்ற RJCM கூட்டத்தில் விவாத பொருளாக    CPMG அவர்களிடம் வாதாடினார் (S ubject no.3/Aug/2015 , subject no. 2/July /2017 ) அப்பொழுது FNPO தோழர் சரவணன் அவர்கள் RJCM உறுப்பினராக இல்லை என்பதும் உண்மை -இதோ நமது அன்றைய மாநிலசெயலர்அண்ணன் JR  அவர்கள்  வைத்தகோரிக்கை 

Request to initiate action to have a thorough review on assessment of vacancies in PA cadre in all the Divisions, so as to fill up all the difference in vacancies between the sanctioned and working strength immediately. There is mismatch between the sanctioned and working strengths, despite taking into account of the announced current year vacancies, screening committee vacancies etc. For Example Namakkal, Kanchipuram, Chengalpattu, Arakkonam, Tiruvannamalai, Sivaganga, Kumbakonam, Mayiladuthurai, Dindigul, Dharmapuri and Salem East divisions. Item No.31 in RJCM DC meeting dt. 16.12.2014. No Divisionwise, information provided to the staff side till date as recorded.

இந்தப் பிரச்னை RJCM ஊழியர் தரப்பு செயலர் J.R. அவர்களால்  எடுக்கப்பட்டு தொடர்ந்துகடுமையான விவாதங்களின் அடிப்படையில்  கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை தொடர்ந்து 

ஜூலையில் வேலை நிறுத்த நோட்டீசில் இந்தக் கோரிக்கை எழுப்பப்பட்டு Regional Southern Labour Commissioner முன்னிலையில் Conciliatory talks நடத்தப்பட்டு, இப்படி 

தொடர் நடவடிக்கைகளால்  RJCM ஊழியர் தரப்பு செயலரை வைத்து முதலில் கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் முதலில் NFPE அஞ்சல் மூன்றின் தமிழ் மாநிலசெயலர் அண்ணன் JR மட்டுமே இடம்பெற்றிருந்தார் .

பின்னர் தன்னையும் சேர்த்துக் கொள்ள FNPO சரவணன் அன்றைய FNPO உதவி பொதுச்செயலர் )( 23.12.2017அன்று  கேட்டுக் கொண்டதால் J.R. அவர்கள் சரவணனையும் பெருந்தன்மையுடன் கமிட்டியில் சேர்த்துக் கொள்ள  CPMG யிடம் கோரினார் . இந்த உண்மைகளை தோழர். சரவணன் மறுக்க மாட்டார் . ஆனால் இங்கே உள்ள புலம்பெயர்வு தோழர்கள்  உண்மைகளை  மறைத்து பதிவிடுவது வேடிக்கையிலும் வேடிக்கையாகும்.(தோழர் சரவணன் அவர்கள் மீது இன்றும் எங்களுக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு  )

இது CPMG திரு  சார்ல்ஸ் லோபா அவர்கள் காலத்தில் தொடங்கி திரு .சம்பத் CPMG ஆக வந்த காலத்தில் நமது தென்மண்டல CPMG திரு UNNAM  UPENDER அவர்களை சேர்மன் ஆக கொண்டு அமைக்கப்பட்ட கமிட்டியில் அண்ணன் JR மற்றும் P4 மாநில செயலர் தோழர் கண்ணன் FNPO சார்பாக P3-P 4 மாநில செயலர்கள் அந்த கமிட்டியில் இடம்பெற்று நமது நீண்டகால கோரிக்கையான அதாவது 2015 முதல் எழுப்பப்பட்ட கோரிக்கைகள் வெற்றிபெற்றது ..இதுகுறித்து நமது NELLAI NFPE WEBSITE யில் டிசம்பர் 2017 யில் பதிவிட்ட செய்தி ..முடிந்தால் சரிபார்த்துக்கொள்ளலாம் 

மாநில அளவில் இருக்கும் காலியிடங்களை  மதிப்பீடு செய்ய மாநில அளவில் அமைக்கப்பட்ட   கமிட்டியில் ஊழியர் தரப்பு பிரதிநிதியாக RJCM ஊழியர்தரப்பு தலைவரான நமது மாநிலசெயலர் இடம் பெற்றிருக்கிறார்   .இது மாநில அளவில் உள்ள SANCTIONED STRENGTH மற்றும் WORKING STRENGTH இடையிலான ACTUAL வேறுபாட்டினை உறுதிப்படுத்த நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு .தமிழகத்தில் மூன்று சங்கங்கள் இருந்தாலும் NFPE க்கு மட்டும் இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது நமக்கு கிடைத்த வெற்றியே !dec 2017

சில வரலாறுகள் திரிக்கப்பட்டு பதிவிடும் போது தெரிந்த உண்மைகளை வெளியிடுவதில் தவறேதும் இல்லை என்ற அடிப்படையில் பதிவிட்டுஇருக்கிறேன் .....

அஸ்திவாரங்கள் என்றும் தங்களை அலங்கரித்துக்கொள்ள தேவையில்லை ஆம் ...இணையுங்கள் இளைய தோழர்களே ! போராடும் பேரியக்கமாம் NFPE யில் இணைவீர் ! உங்கள் போராட்ட உணர்வுகளை புதைத்துவிடாதீர்கள் !

வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 




0 comments:

Post a Comment