அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
*நமது தமிழக NFPE தமிழ்மாநில சங்கத்தின் அடுத்தகட்ட ஆக்கபூர்வமான/தனித்துவமான பணிகளில் ஒன்றான எழுத்தர் தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் வருகிற 14.04.2021 முதல் தொடங்குகிறது .இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் தபால்காரர் /MTS தோழர்கள் தங்கள் பெயரினை பதிவுசெய்துகொள்ளும்படி மீண்டும் நினைவூட்டுகிறோம் .நெல்லையில் தொடர்புகொள்ள..SK .ஜேக்கப் ராஜ் -9442123416 .
*நமது முன்னாள் பொதுச்செயலர் அண்ணன் KVS அவர்களின் விதி அறிவோம் -அறிவு களஞ்சியம் என்ற நூல் குறித்து சில வரிகள் ...மொத்தம் 688 பக்கங்கள் ஆறு பகுதிகள் 1.STAF FRULINGS 2.ஒழுங்குநடவடிக்கைகள் 3.ஓய்வூதிய பலன்கள் 4.GDS குறித்த முழு உத்தரவுகள் 180 பக்கம் 5.இலாகா விதிகளின் தமிழாக்கம் 6.தொழிற்சங்க செய்திகள் ..நெல்லையில் முதற்கட்டமாக 50 பிரதிகள் கேட்கப்பட்டுள்ளன ..மேலும் நெல்லை மட்டுமன்றி அண்டைக்கோட்ட தோழர்களுக்கு தேவைப்பட்டாலும் எங்களை தொடர்புகொள்ளலாம் .இந்தநூல் எழுத்தர் பிரிவினருக்கு மட்டுமன்றி தேர்வுக்கு தயாராகும் அனைத்து பிரிவு குறிப்பாக தபால்காரர் /MTS மற்றும் GDS ஊழியர்க்ளுக்கும் பயன்பட தக்க வகையில் முற்றிலும் தமிழாக்கம் செய்யப்பட்ட முதலாவது மற்றும் முதன்மையான நூல் என்பது குறிப்பிடத்தக்கது ..
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment