அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
*GDS TO போஸ்ட்மேன் தேர்வு முடிவுகள் குறித்த கமிட்டி கூடுவது குறித்து நேற்றுவரை தகவல் இல்லை .நிதியாண்டின் இறுதியென்பதால் ஏப்ரல் 1 ம் தேதிக்கு பிறகு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .நமது கோட்டத்தில் காலியிடங்கள் GDS TO POSTMAN -- UR 4 SC -1 MTS TO POSTMAN --VACANCY --3
*GDS TO PA 20.12.2020 மற்றும் 28.03.2020 தேர்வில் நிரப்பப்படாத ST பிரிவு காலியிடங்கள் 13 பதவிகள் நிரப்பிட அதற்கான செலெக்ஷன் உத்தரவுகள் வந்துள்ளன .இவைகள் எல்லாம் கடந்தகாலங்களில் கனவிலும் எவரும் கண்டிராத காட்சிகள் ..நமது தொழிற்சங்கத்தின் தொடர்முயற்சியால் தமிழகம் முழுவதும் உள்ள PA /SA மற்றும் போஸ்ட்மேன் /MTSபதவிகள் நிரப்பட்டுவருகின்றன என்பதனை நாம் பெருமையோடு சொல்லிக்கொள்வோம்
*நமது கோட்ட சங்கத்தின் தொடர் வற்புறுத்தல் கோட்ட நிர்வாகத்தின் உடனடி தலையீடு காரணமாக முனைஞ்சிப்பட்டி SO NET ஒர்க் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது ..இதுவரை பொறுமை காத்த அண்ணன் ரகுமாதவன் அவர்களுக்கு கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
*நாளை பணிஓய்வு பெறுகின்ற தோழர் தங்கமணி SPM முன்னீர் பள்ளம் அவர்களுக்கு NELLAI NFPE யின் சார்பாக வாழ்த்துக்கள் ..
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment