கருணை அடிப்படையிலான வேலை வழங்குவதில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மெரிட் குறித்து எழுப்பப்பட்ட பல சந்தேகங்களுக்கு அஞ்சல் வாரியம் 03.03.2021 அன்று சில விளக்கங்களை வழங்கியுள்ளது
*இதற்கு முந்தைய செலெக்ஷன் கமிட்டி (CRC) NOT RECOMMENDED என முடிவெடுத்த மனுவையும் 30.05.2013 கடிதத்தின் அடிப்படையில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம்
*.PA /SA பதவிகளுக்கு VACANCY இல்லை என்று REJECT செய்யப்பட்டவர்களுக்கு போஸ்ட்மேன் மட்டுமல்ல GROUP C பதவிகளில் ஒன்றான MTS பதவிக்கு கூட பரிசீலிக்கலாம்
*.பழைய CRC யில் அடுத்த கமிட்டிக்கு பரிந்துரைக்கு அனுப்பட்ட மனுவினை புதிய RMPS அடிப்படையில் (01.10.2020-பிறகு CRC யில் பரிசீலிக்கலாம்
*பழைய கமிட்டிகளில் NOT -RECOMMENDED மனுவினை மீண்டும் பரிசீலினைக்கு எடுத்துக்கொள்ளலாம் .இருந்தாலும் ரிஜெக்ட் செய்யப்பட்ட மனுவினை மீண்டும் ரிசீலினைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது
*ரூபாய் 9000இக்கும் குறைவான குடும்ப ஓய்வூதியம் பெறும் மனுதாரருக்கு மெரிட் புள்ளியில் முழுமையான 20 பாயிண்ட் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்
*ஊழியரின் இறந்த தேதி அடிப்படையில் தான் மனுக்கள் கமிட்டிக்கு அனுப்பப்படும்
*மாநில கமிட்டியில் நிராகரிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவினால் பரிசீலனைக்கு எடுக்கப்படும் மனுக்கள் புதிய 01.10.2020 வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் பரிசீலிக்கப்படும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment