...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 2, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 

*நமது முன்னாள் பொதுச்செயலாளர் அண்ணன் KVS அவர்களின் தமிழில் இலாகா விதிகள்  நூல் கேட்டு இதுவரை 27 தோழர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள் .நமது கோட்ட சங்கத்தின் சார்பாக முதற்கட்டமாக 30 புத்தகங்கள் தேவை என மாநில செயலரிடம் கேட்டுள்ளோம் .இன்னும் 15 நாட்களுக்குள் புத்தகங்கள் கிடைக்கும் என மாநில செயலர் தெரிவித்துள்ளார்கள் .ஒரு புத்தகத்தின் விலை ரூபாய் 450. புத்தகம்  வேண்டி விருப்பம் தெரிவித்தவர்கள் நமது கோட்ட உதவி செயலர் தோழர் ஆனந்தராஜ் PA மஹாராஜாநகர் அவர்களின் POSB (4876043185) கணக்கில் பணத்தை செலுத்திவிட்டு கோட்ட சங்கத்திற்கு தகவல்களை தெரிவிக்கவும் .நேற்று இரண்டு தபால் காரர் தோழியர்க்ளும் புத்தகம் வேண்டி கேட்டுள்ளார்கள் .அதேபோல் அம்பை பகுதியில் இருந்து 5 புத்தகங்கள் கேட்டுள்ளார்கள் ..நாம் ஏற்கனவே தெரிவித்தபடி இது எழுத்தர்களுக்கு மட்டுமல்ல GDS முதல் MTS தபால்காரர் என அனைத்து பிரிவிற்கான உத்தரவுகளின் தமிழகத்தின் தொகுப்பு என்பதனை மீண்டும் நினைவூட்டுகிறோம் .விரைந்திடுவீர் ! உங்கள் பிரதிகளுக்கு முன் பதிவு செய்திடுங்கள் !

*அஞ்சல் நான்கின் அகில இந்திய மாநாடு --NFPE அஞ்சல் நான்கின் 28 வது அகில இந்திய மாநாடு 18.04.2021 முதல் 20.04.2021 வரை கர்நாடக மாநிலம் உடுப்பி  நகரில் நடைபெறுகிறது .நெல்லையில் இருந்து 17.04.2021 அதிகாலை 3 மணிக்கு தொடர்வண்டி மூலம் திருவனந்தபுரம் வழியாக செல்கிறோம் .பயணக்கட்டணம் நபர் ஒருவருக்கு ரூபாய் 1500.அகில இந்திய மாநாட்டிற்கு வரவிரும்பும் தோழர்கள் கோட்ட செயலரை தொடர்பு கொள்ள கேட்டு கொள்கிறோம் 

*கிளை அஞ்சலகங்களில் வித்ட்ராவல் செய்ய ரூபாய் 20000 வரை கணக்கு அலுவகத்தில் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை என SBORDER 02/2021 DTD 26.02.2021 தேதியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment