அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
பஞ்சப்படி முடக்கமும் ---ஊழியர்களின் மௌனமும்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு முடக்கப்பட்ட பஞ்சப்படி நிலைகுறித்து மாநிலங்களவையில் நேற்று குஜராத் மாநிலத்தை சார்ந்த ராஜ்யசபா உறுப்பினர் மாண்புமிகு நரன்பாய் J.ரத்வா அவர்களின் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகத்தின் பதில் ..அரசு எப்பொழுது பஞ்சபடியை கொடுக்கலாம் என முடிவெடுக்கிறதோ அப்பொழுது பஞ்சப்படி வழங்கப்படும் என்று எழுத்துபூர்வமான பதிலை தந்துள்ளது ...அவ்வளவுதான் நமது ஊழியர்கள் அனைவரும் ஜூலையில் பஞ்சப்படி அரசு கொடுத்துவிடும் என்ற முழு நம்பிக்கையோடு செய்திகளை படுவேகமாக பகிர்ந்துகொண்டுவருகிறார்கள் .சென்றமாதம் நமது NJCM தலைவர்கள் நிதிச்செயலரை சந்தித்து கோரிக்கைமனு கொடுத்திட்டபோது பஞ்சபடி முடக்கம் என்பதை மேலும் நீட்டிக்கப்படுமா என்று அரசு இன்றளவு முடிவெடுத்திடவில்லை என்று கூறியிருக்கிறார்
பஞ்சப்படி முடக்கத்தால் அரசுக்கு 37530.08 கோடி மிச்சமாக கிடைத்திருக்கிறது என்றால் இங்கே ஒவ்வொரு ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் 1 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை நாம் கூட உணர்ந்ததாக தெரியவில்லை .இந்த இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் பாதிப்பு இதைவிட அதிகம் .
மூன்று தவணை பஞ்சப்படி கொடுக்கப்பட்டிருந்தால் இன்று நாம் 28 சதம் பஞ்சப்படி உயர்வினை பெற்றிருப்போம் (4+3+4).ஆனால் இன்று வெறும் 18 சதம் பஞ்சபடியோடு நிற்கின்றோம் .பஞ்சப்படி முடக்கம் கூட ஏனைய பொதுத்துறை ஊழியர்களுக்கு இல்லை என்பதும் மத்தியஅரசு ஊழியர்களுக்கு மட்டுமே என்பதும் ஒரு கசப்பான உண்மைதான் ..
தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா ? என்ற வரிகள் எவ்வளவு உண்மை .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment