...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, July 31, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                         கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைத்தது என்ன ? நடைமுறைப்படுத்தியது என்ன ? பரீசீலினையில் இருப்பது என்ன ? என்கின்ற கேள்விக்கு மாநிலங்களவையில் நமது துறையின் இணை அமைச்சர் அளித்திட்ட பதில் உங்கள் பார்வைக்கு .

1.மருத்துவ உதவி /ஹெல்த் குரூப் இன்சூரன்ஸ் /ESIC மூலம் மருத்துவ சிகிச்சை 

2.கிளை அஞ்சலகங்களுக்கு புதிய வரவு /செலவு  கணக்கீடு முறை 

3.இலாகா ஊழியர்களை போன்று 12 வருடம் ,24 வருடம் 36 வருடம் சேவை முடித்தவர்களுக்கு மூன்று கட்ட பதவி உயர்வுகள் 

4.CWF WELFARE சந்தா ரூபாய் 100 யில் இருந்து 300 ஆக உயர்த்துதல் 

5.மாநில சேம நிதியில் இருந்து வழங்கும் உதவி தொகை 10 சதம் அதிகரித்தல் 

6.கூடுதலாக WELFARE நிதி மூலம் டேபிள் செல்போன் வாங்கிட ரூபாய் 10000 கடன் 

7.குரூப் இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 50000 யில் இருந்து 5 லட்சமாக உயர்த்துதல் 

நிராகரிக்கப்பட்ட பரிந்துரைகள் 

1.PAID LEAVE 20 நாளில் இருந்து 30 நாட்களாக உயர்த்துதல் 

2.விடுப்புகளை 180 நாட்கள் வரை சேர்த்து பணமாக்குவது 

3.COMPOSITE அலவன்ஸ் ABPM களுக்கும் வழங்குதல் 

4.வேலை நேரத்தை 8 மணிநேரமாக உயர்த்துதல் 

5.பணிஓய்வு என்பது 65 வயதில் அந்த மாத கடைசி தேதி 

6.அனைத்து தனிநபர்  BOகளை இரண்டு நபர் அலுவலகமாக மாற்றுதல் 

தோழர்களே ! பொதுவாக ஊதியக்குழு அமுலாக்கத்தோடு நீர்த்துப்போகும் முந்தைய பரிந்துரைக்ளுக்கு மாறாக இன்னமும் கமலேஷ் சந்திரா கமிட்டியில் பரிந்துரைத்த பதவி உயர்வு .குரூப் இன்சூரன்ஸ் ரூபாய் 5 லட்சம் ESIC மூலம் மருத்துவசிகிட்சை என்ற முன்னேற்றமான கோரிக்கைகள் அரசின் பரீசீலினையில் உள்ளது முக்கியமான ஒன்று   ..இந்த கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட  மீண்டும் ஒருஒன்றுபட்ட போராட்டங்களை GDS சங்கங்கள் வேலைநிறுத்தம்  செய்தால் பழைய காலங்களில் பாராமுகமாக இருந்த சம்மேளனம் போல் இல்லாமல் தமிழக அஞ்சல் மூன்று மாநிலச்சங்கம் போல் (அன்று நான்கு நாட்கள் வேலைநிறுத்தம் )GDS ஊழியர்களுக்காக நாமும் களம் இறங்குவோம் ..கோரிக்கைகளை வெல்ல துணை நிற்போம் ..அகிலஇந்திய சங்கத்தை வலியுறுத்துவோம் 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, July 30, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                              அஞ்சல் வாரியம் அறிவிக்கும் ஒவ்வொரு லாகின் நாளும் அதையொட்டி கோட்ட அளவில்  அரங்கேறும் அச்சுறுத்தல்களும் ---

                                கடந்த சிலநாட்களாக நமது கோட்ட அலுவலகத்தில் இருந்து நமது SPM தோழர்களுக்கு பல்வேறு விளக்க கடிதங்கள் கேட்கப்பட்டுவருகின்றன .குறிப்பாக 22.07.2021  தேதியை மையமாக வைத்துக்கொண்டு அன்றைய தினம் உங்கள் அலுவலகங்களில் ஆதார் ஏன் எடுக்கவில்லை என்றும் அதற்கான விளக்கத்தை ஓரிருநாட்களில் அளிக்கவேண்டும் என்றும் ஊழியர்களை அச்சுறுத்தும்  போக்குகள் நடைபெற்றுவருகின்றன .அதில் பல அலுவலகங்கள் B கிளாஸ் ஆக இருந்தாலும் ஒருவர் மட்டுமே பணியாற்றிவருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .நமது CPMG அலுவலக 26.06.2018 தேதியிட்ட கடிதத்தில் B கிளாஸ் அலுவகத்தில் தனி நபர் மட்டும் பணியாற்றினால் என்னசெய்யவேண்டும் என மிக அருமையாக அறிவுறுத்த பட்டுள்ளது .அதேபோல் விளக்கம் கேட்ட ஊழியர்களில் சிலருக்கு ஆதார் சேவைக்கான ID இல்லை சிலருக்கு ஆபரேட்டர் மட்டுமே உள்ளது .ஆக இவைகளை குறித்து சிறிதும் கவலைப்படாமல் பொத்தாம் பொதுவாக விளக்கங்களை கேட்டிருப்பது ஊழியர்கள் மத்தியில் கடும் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது .நமது ஊழியர்களின் உணர்வினை ஏற்று நமது கோட்ட சங்கம் சார்பாக நமது புதிய SSP அவர்களுக்கு இன்று விரிவான கடிதம் கொடுக்கவுள்ளோம் .அதன் நகல் உங்கள் பார்வைக்கும் தரப்பட்டுள்ளது .நாடு கொரானா மூன்றாம் அலையினை குறித்தும் டெல்டா தாக்குதலை குறித்தும் பெரும் பீதியில் இருக்கும் நேரத்தில் நமது அஞ்சல்  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு மெகா லாகின் நடத்த அழைத்துக்கொண்டிருக்கிறது ..ஆகவே தோழர்கள் அச்சமின்றியும் மன உளைச்சலும் இன்றி பணியாற்றிட கோட்ட நிர்வாகம் தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் .இயக்குனரகத்தின் இந்த புதிய தாக்குதல்களை நமது மாநில சங்கத்தின் மூலம் அகிலஇந்திய சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வோம் ..

நன்றி ..தோழமையுடன் S.K .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

NFPE 

ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP ‘C’ UNION,

TIRUNELVELI DIVISION,

TIRUNELVELI-627002.

-------------------------------------------------------------------------------------------------

No P3-ORG   at  Tirunelveli  627 002   the  30.07.2021

To

The Sr. Superintendent of  Post offices,

Tirunelveli Division,

Tirunelveli 627 002

Sub:- Memorandum on burning issues of Tirunelveli Division - reg   

             This union put forth the following towards the functioning of Adhar and CSC Centres  at all POs . Here it is discussed purely with an intention to  carry out the instructions from the Administration more effectively without pushing down the employees under stress and mental agony.

            Aggrieved officials have approached this Union citing that Explanation letters  were issued to many officials who have not performed Adhar operations on a particular day . Notices have been issued without analyzing the ground difficulties and reasons behind it. For example

1., The  B Class offices like Ravanasamudram  SO , Papanasam Mills SO and Pottalpudur SO were managed Singled handedly on that day.

2.Adhar Operative IDs are available for none at Kilambur SO.

3.At Mulaikaraipatti SO,  on that particular day , SPM was on leave and the PA was officiating as SPM in addition while the other PA has not  completed Induction Training.

4.Only operator ID was available  with Mukkudal  SPM.

5.Some officials reported that it was not able to do Adhar transactions because of  non –syncronisation

Whereas Adhar operations are being carried out in a steady manner at all other offices wherever feasible and such centres  may be identified and well equipped  so that such offices may be able to manage the transactions which are expected from the offices where there is no such feasibility. At the outset the Divisional Administration must also understand that our officials are risking their lives in obeying the orders of Administration. On one hand, instructions are being issued to curtail the expenditure allotted in the Budget allotment by the apex authorities, on the other hand stringent instructions are being thrown on the officials to achieve the targets

       Instructions are also being received towards CSC operations at all offices.  This union is much happy and invites this scheme which paves  ample scope for rendering variety of services to the public. But it is disheartened that our faculties are not yet provided proper training and  awareness about the services covered under this scheme. Training so far imparted have not drawn a clear picture too. Even the type of services which can be rendered under this platform is not clearly defined.  While around 90 services are announced to be provided under CSC only four or five types of services can be done across counters. This was also reiterated in the recent online CSC workshop given by RO.

Also sufficient infrastructure and advertisement is also not yet provided.  It is pertinent to mention here that CSC operations can be carried out only if the Speed of Network is good and so many single handed offices find it difficult to complete a transaction as they are not even able to sign in and it happens sometimes at HOs and HSG / LSG offices too. Since the public is not aware  of such services being rendered here, we do have only little customers who approach us. Hence Administration should be open minded  to understand the actual ground position and come out with shrewd planning towards proper implementation of this scheme among staff and public.

With a hope that the above problems will be settled by the Divisional Administration to avoid industrial unrest.

 

   Yours faithfully,  

S.K.JACOBRAJ ,

Thursday, July 29, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                                            நமது நீண்ட நாள் தொடர் முயற்சிக்கு பிறகு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலத்திற்கு  ரூபாய் 5.5 லட்சத்திற்கு 63 KV ஜெனெரேட்டர் வாங்கிட ஒப்புதல் கிடைத்துள்ளது .மேலும் அதை இன்ஸ்டால் செய்வதற்கும் ரூபாய் 5.5 லட்சம் அனுமதிக்கப்ட்டுள்ளது .மண்டல அலுவகம் அதை நிறுவதற்கான் கட்டமைப்புகள் குறித்த தகவல்களும் நமது கோட்ட அலுவலகத்தால் அனுப்பப்பட்டு ஒரு மாதம் முடியப்போகிறது .இந்த காலதாமத்தை நிவிர்த்திசெய்திட AE (E ) யை விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில சங்கத்திற்கு நாம் எழுதிய கடிதம் ...உங்கள் பார்வைக்கு ...

NFPE

     ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                        TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.P3-ORG / dated at Tirunelveli 627002 the 29.07.2021

To

Com.A.Veeramani

Circle Secretary

AIPEU GR –C

@Anna Road Chennai-600002

Dear  Comrade  ,Vanakkam

            Sub: Earlier Installation of  Genset for Palayankottai HO-- reg.

                      After having undergone a prolonged struggle , a Genset with the capacity of 63  KV costs Rs 5.5 lakh was approved by PMG SR , Madurai quite well before two months. Also another sum of Rs. 5.5 lakh was also sanctioned by the R.O towards the costs of Installation. All the details called for by AE, Electricals from Civil wing, Madurai  like the power point access for Change over switches,   bed on which the Genset has to be installed ,  were all sent to AE, Electricals,  as directed . But the Installation works  are not yet started.  We face frequent power cuts and our staffs suffer because of inadequate lights and fans  and sometimes even there's is problem with UPS . So     the Civil wing @ RO has to be  pulled up to carry out the work early . Kindly   catalyse this task.

                                           Thanking you

                         Yours Comradely

 

[S.K.JACOBRAJ]

 

 

 


Wednesday, July 28, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                           முக்கிய செய்திகள் 

புதிதாக தபால்காரராக நேரடி நியமனம் பெற்ற  தோழர் செந்தில் கிருஷ்ணன் போஸ்ட்மேன் பாளையம்கோட்டை   அவர்களுக்கு  பயிற்சிகாலத்தில்  ஊதியம் வழங்கிட மறுக்கப்பட்டதை நாம் கடந்த மாதாந்திர பேட்டியில் வைத்துவிவாதித்தோம் .அதை ஏற்றுக்கொண்ட நமது SSP அவர்கள் பயிற்சிக்காலத்தில் ஊதியம் உண்டு அதை வழங்கிட  உத்தரவிட்டுள்ளார்..அதன்படி  .தோழர் சந்தீப் போஸ்ட்மேன் பணகுடி தோழர் செந்தில் கிருஷ்ணன் போஸ்ட்மேன் பாளையம்கோட்டை  ஆகிய இருவருக்கும் இந்த மாத சம்பளத்தோடு சேர்த்து வழங்கப்படும் .இந்த பிரச்சனையில் உடனடி நடவடிக்கை எடுத்த நமது கோட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ...

*மீண்டும் ஆதார் ,CSC பணிகளை முடுக்கிடும் வகையில் கோட்ட அலுவலகம் வாட்ஸாப்ப் மூலம் ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுப்பது கவலை அளிக்கிறது ..எல்லா நேரமும் ஊழியர்கள் வாட்ஸாப்ப் பார்த்துக்கொண்டே இருக்கமுடியுமா ?இதுகுறித்து நாளை விளக்கமான கடிதத்தை நமது கோட்ட சங்கம் சார்பாக கோட்ட நிர்வாகத்திற்கு கொடுக்கவுள்ளோம் .இதுகுறித்து யார்யாருக்கு விளக்கக்கடிதங்கள் கேட்டு வந்துள்ளதோ அதன் விவரங்களை கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி ..தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

 

பொருள் --மாதாந்திர பேட்டி சம்பந்தமாக ---

கீழ்கண்ட பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் மாதாந்திர பேட்டியில் விவாதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .

.1.தபால்காரராக நேரடியாக நியமனம் பெற்ற ஊழியர்களுக்கு பயிற்சிக்காலத்திற்கான ஊதியம் வழங்கிடவேண்டும்  (உதா )a .சந்திப் போஸ்ட்மேன் பணகுடி b .செந்தில் கிருஷ்ணன் போஸ்ட்மேன் பாளை 

2.பணி இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்திருக்கும் ஊழியர்களுக்கு விரைந்து இடமாறுதல் உத்தரவுகளை வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் 

                          கீழ்கண்ட நிர்வாகிகள் மாதாந்திர பேட்டியில் கலந்து கொள்வார்கள் 

T.புஷ்பாகரன் CO பாளையம்கோட்டை 

V.தங்கராஜ் போஸ்ட்மேன் ரவன சமுத்திரம் 

                                                                    நன்றி

                                                                                            தங்கள் உண்மையுள்ள 

                                                                                              

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 

                                          கடந்த சனிக்கிழமை (24.07.2021)ஏற்பட்ட நெட்ஒர்க் பிரச்சினைகள் குறித்து நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக ஒருகடிதமும் ,பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் சார்பாக போடப்பட்ட Error Entry நகலும் கோட்ட சங்கத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டது .எத்தனை தோழர்கள் நாம் கேட்டுக்கொண்டபடி Error Entry அனுப்பினார்கள் என்று தெரியவில்லை .அப்படி யாரும் நமது குறைகளை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லவில்லை என்றால் நிர்வாகத்திற்கு மகிழ்ச்சி தான் .எப்பொழுது நமது குறைகளை வெறும் குமுறல்களாக மட்டுமே முடித்துவிடாமல் அதை கோரிக்கையாக எழுத்துவடிவில் கொடுக்க தொடங்குகிறோமோ நாம் நிச்சயம் ஒருபடி முன்னேறியிருக்கிறோம் என்று அர்த்தம் ...

             அப்படி தான் இன்று நெட்ஒர்க் சம்பந்தமாக கடிதத்தை கொடுத்தவுடன் வழக்கம்போல் நிர்வாகம் இது All INDIA  பிரச்சினையல்லவா ?நாங்கள் என்ன  செய்ய முடியும் என்றார்கள் .நாமும் நீங்கள் இந்த தகவல்களை உங்கள் மேல்மட்ட அதிகாரிகளுக்கு தெரிவியுங்கள் போதும் என்றோம் .காரணம் பல கூட்டங்களில் நிர்வாகத்திடம் இதுகுறித்து மத்திய சங்கம் பேசினால் எந்த மாநிலத்தில் இருந்தும் புகார் இல்லை என்கிறார்கள் .மாநில சங்கம் CPMG அவர்களிடம் விவாதித்தால் எந்த கோட்டத்தில் இருந்தும் புகார் வரவில்லை என்கிறார்கள் .ஆகவே நிர்வாகத்தின் இந்த  நழுவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் நாங்கள் இந்த கடிதத்தை கொடுத்திருக்கிறோம் எங்கள் கடிதத்தை நீங்கள் அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டுவந்தோம் .

                             வேலைநேரம் முடிந்து பலமணிநேரம் கழித்து தான் தோழர்கள் தோழியர்கள் வீட்டிற்கு செல்லவேண்டிய இழிநிலையை ஒவ்வொரு கோட்ட செயலர்களும் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் .ஒரு 10 நிமிடம் தாமதமாகவோ அல்லது ஒரு 10 நிமிடம்  முன் ன தாகவோ அலுவகத்தை விட்டு சென்றுவிட்டால் நம்மிடம் எத்தனை விளக்கங்கள் எத்தனை கேள்விகள் எத்தனை வசவுகள் நாம் எதிர்கொள்ளவேண்டியதிருக்கிறது .

                         அதேபோல் நெட்ஒர்க் தொடர்பாக நிர்வாகம் யாருடன் ஒப்பந்தம் போட்டால் நமக்கென ?எத்தனை கோடியில் இருந்தாலும் நமக்கென்ன ? அந்த நிறுவனத்தை தட்டிக்கேட்கும் உரிமை கடமை நிர்வாகத்திற்கு இல்லாதபோதுதான் நாம் தலையிட வேண்டிய அவசியம் வருகிறது .

                              MICRATION ஞாயிறு அல்லது விடுமுறை நாட்களில் வைத்திட அகிலஇந்திய சங்கத்தை வலியுத்தவேண்டிய அவசியம் நமது மாநில சங்கத்திற்கு மட்டுமே இருக்கிறது என்பதுதான் இன்றைய அகிலஇந்திய சங்கத்தின் உண்மை நிலை 

                           CEPT என்பது நமது CPMG யின் வரையறைக்குள் இல்லை .அதற்கென்றே தனி CPMG என நேரடி இயக்குனர்க கட்டுப்பாட்டில் இருக்கிறது .இன்னும் நாடுமுழுவதிலும் சுமார் 1000 க்கு மேல் அலுவலகங்கள்  MICRATION செய்யப்படவேண்டியதுள்ளது ..குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் .கொல்கத்தா  ,அசாம் என ஏராளம் இருக்கின்றன .MICRATION தேதி குறிப்பதும்  CEPT  கையில் தான் இருக்கிறது ..  MICRATION காலையில் தொடங்கினாலும் மாலைக்குள் முடியாத எதார்த்தைதை நிர்வாகத்தின் கவணத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் .மேலும் எப்படி பராமரிப்பு என்று மின்வாரியம் மின்தடையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறதோ அதேபோல்  MICRATION நாளில் அதிகாரப்பூர்வமான NON -BUSINESS  DAY என அறிவித்துவிட்டால் பொதுமக்களும் நம்மிடம் கோபப்படமாட்டார்கள் நாமும் இழவு காத்த கிளியாக காத்திருக்க வேண்டியதில்லை 

                     ஆகவே இந்த செயற்கையான நெட்ஒர்க் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வழக்கம் போல் நமது மாநிலச்சங்கம் முன்கையெடுத்து மத்திய சங்கத்தை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் ஏனென்றல் நெட்ஒர்க் விசயத்தில் நமது தமிழ்மாநில சங்கத்தின் பங்கு என்பது 26 3.2015 ல் தமிழ் மாநில வேலை நிறுத்தம் முதல் இன்றுவரை தொடர்கிறது  குறிப்பாக    2.8 2017 ல் மீண்டும் ஒரு தமிழ்் மாநில வேலை நிறுத்த நோட்டீஸ். தொடர் போராட்டம். முடிவில் தொழிலாளர் நல ஆணையர் தலையீட்டினால் CPMG நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி எழுத்து பூர்வமான Minutes கொடுத்ததின் அடிப்படையில் வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது.  தமிழகம் முழுவதும் Band width உயர்த்த உத்திரவு, 2560 புதிய கணினிகள், ஆயிரத்திற்கு  மேல்  Printer கள், UPS, Battery, Generator கள் ஆகியவை மாற்றப்பட்டன    

                        தோழர்களே ! உங்கள் அலுவலக பிரச்சினைகளை தயவு செய்து நிர்வாகத்தின் கவன த்திற்கு எழுத்து பூர்வமாக கொண்டுசெல்ல தயங்காதீர் !..நமது இயக்கத்தின் வரலாறு அப்படிப்பட்டது .நமது நிறுவனத்தலைவர் தோழர் பாபு தாரா பாதா அவர்களின் முதல்முழகத்தில் தொழிலார்கள் பிச்சைக்காரர்கள் அல்ல ..கொடுப்பதை பெற்றுக்கொள்ள !  இந்த வரிக்கு சொந்தம் கொண்டாடும் ஒரே இயக்கம் நமது NFPE பேரியக்கம் என்பதனை மட்டுமே நினைவில் கொள்ளுங்கள் 

நன்றி தோழமையுடன் SK  .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, July 23, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                       முக்கிய செய்திகள் 

சமீபத்திய சேமிப்பு வங்கி உத்தரவுகளின் சாராம்சங்கள் 

SB உத்தரவு 21/2021dtd 21.07.2021 

கிளை அஞ்சலகங்களில் சேமிப்பு  கணக்குகள் தொடங்குவதற்காக இதுகாறும் பராமரிக்கப்பட்ட SETTLEMENT  ACCOUNT (SOL ID+0339) என்பது  01.08.2021 முதல் முடக்கப்பட்டு அந்த கிளை அஞ்சலகத்தில் இருந்து RICT மூலம் புதிய கணக்குகளை தொடங்கி கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது  .அவ்வாறு கிளை அஞ்சலகங்களில் தொடங்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு அனைத்து வசதிகளும் குறிப்பாக மொபைல் பேங்கிங் .e பேங்கிங் ATM செக் புக் வசதிகளும் செய்துகொடுக்கப்படும் .கிளை அஞ்சலக அதிகாரி மேற்கொண்டு சேவைகோரும் வாடிக்கையாளர்களிடமிருந்து விண்ணப்பபடிவம் மற்றும் சேமிப்பு புத்தகத்தை SO விற்கு அனுப்பிவைத்தால் போதும் 

SB உத்தரவு 22/2021  dtd 22.07.2021 

சேமிப்பு பத்திரங்கள் 01.07.2016 க்கு முந்தைய தேதிகளில் வாங்கியவர்கள் அந்த பத்திரங்கள் தொலைந்தால் டூப்ளிகேட் பத்திரம் பெறுவதற்கு கொடுக்கப்படும் பிணையத்திற்கு  தீர்வாக ஈட்டுறுதி (INDEMNITY) திருப்தி இல்லை என்றால் 

1.மாநில /மத்திய அரசு ஊழியர்/,உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் பொதுத்துறை ஊழியர்கள் RESERVE வங்கி ஊழியர்களுக்கான  ஊதிய சான்றிதழ் 

2.சென்ற நிதியாண்டில் தாக்கல் செய்த வருமான வரி  

3.சென்ற ஆண்டிற்கான வருமான சான்றிதழ் 

4.வருவாய் துறை அதிகாரிகள் வழங்கிடும் SOLVENCY செர்டிபிகேட் இவைகளில் ஒன்றினை பெற்றுக்கொண்டு டூப்ளிகேட் CERTIFICATE வழங்கலாம் 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டச்செயலர்  நெல்லை 



Tuesday, July 20, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                         இன்றைய  செய்திகள் 

*நமது கோட்டத்திற்கு தற்காலிக இடமாறுதலில் வருகைதரும் தோழியர் நிஷா பாத்திமா (QUALIFIED ACCOUNTANT) பொள்ளாச்சி கோட்டம் @ PA முனைஞ்சிப்பட்டி அவர்களை NELLAI -NFPE வாழ்த்திவரவேற்கிறது .

*2019 ஆண்டிற்கான கருணை அடிப்படையிலான பணியில் தபால்காரராக தேர்வுசெய்யப்பட்டுள்ள தோழர் P .மானிக்க பார்த்திபன் விருதுநகர் அவர்களுக்கும் NELLAI -NFPE யின் வாழ்த்துக்கள் 

*நமது SSP அவர்களுடனான மாதாந்திர பேட்டி வருகிற 12.08.2021 அன்று நடைபெறுகிறது .நமது பிரச்சினைகளை வருகிற 06.08.2021 குள் கோட்ட அலுவகத்திற்கு அனுப்பவேண்டும் .நாம் ஏற்கனவே தெரிவித்தபடி கடைசி நேரத்தில் இந்த பிரச்சினையை சேர்த்துக்கொள்ளுங்கள் என்பதை விட இன்றிலிருந்தே பேட்டியில் சேர்த்து விவாதிக்க வேண்டிய பிரச்சினைகளை தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அலுவலகம் மூலம் கடிதங்கள் எழுதிட கோட்ட சங்கம் உங்களுக்கு வழிகாட்டும் .உதவிகள் செய்திடும் .....

*நமது இயக்கத்தின் தென்பகுதியின் உறுதிமிக்க தோழர் கோபாலன் அவர்களின் மகள் பூப்புனித நீராட்டுவிழா நாளை 21.07.2021 அன்று திருக்குறுங்குடியில் நடைபெறுகிறது .தோழரின் அன்பு புதல்விக்கு NELLAI -NFPE யின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ..

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர் நெல்லை 

Monday, July 19, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                        முக்கிய செய்திகள் 

* தலைமை அஞ்சலகங்களில் CTS  CHEQUES CLEAANCE சம்பந்தமாக அஞ்சல் வாரியம் 15.07.2021 அன்று வெளியிட்டுள்ள கடிதத்தில் என்றைக்கு CHEQUE CLEAR ஆகிறதோ அன்றைய தினமே அதை கணக்கில் கொண்டுவரவேண்டும் .பலமாநிலங்களில் இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் வருவதால் அன்றைய தினமே சேமிப்புக்கணக்குகளில் கிரெடிட்  செய்வதாக இருந்தாலும் மற்றும்  புதிய கணக்குகளை தொடங்குவதாக இருந்தாலும் DATE OF CLEARANCE அன்றே கணக்கில் கொண்டுவரவேண்டும்என அறிவுறுத்தியுள்ளது . 

*GDS ஊழியர்களின் இடமாறுதல் சம்பந்தமாக புதிய உத்தரவினை  நமது இலாகா வெளியிட்டுள்ளது .ஆகவே நமது தோழர்கள் தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் நமது GDS ஊழியர்களுக்கு புதிய இடமாறுதல் குறித்த தகவல்களை தெரிவிக்கவும் 

           நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Saturday, July 17, 2021

   அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                        முக்கிய செய்திகள் 

*ஜூன் மாதம் ஓய்வுபெற்றவர்களுக்கு நோஷனல் increment வழங்கிட அஞ்சல் வாரியம் 05.07.2021 வழங்கிய உத்தரவினை நமது மாநில CPMG அலுவகமும் 09.07.2021 அன்று அதை உறுதிப்படுத்தி உத்தரவினை பிறப்பித்துள்ளது .இந்த உத்தரவு 30 ஜூன் ஓய்வுபெற்ற அனைவருக்கும் பொருந்துமா ?இல்லை வழக்கம் போல் வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும் பொருந்துமா ?என்பதனை குறித்து  விரைவில் தெரியவரும் .

*ஆறாவது ஊதியக்குழுவின் அடிப்படையில் வழங்கப்பட்ட MACP பதவிஉயர்வினை 01.01.2006 முதல் அமுல்ப்படுத்தவேண்டும் என்ற வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை .01.09.2008  க்கு முன்னதாக ACP பதவி உயர்வு முறை இருந்ததாகவும் அதை மாற்றித்தான் 01.09.2008 முதல் MACP என மாற்றப்பட்டது அரசின் கொள்கை முடிவென்றும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாதென்றும் வழக்கை முடித்துவைத்தது உச்சநீதிமன்றம் .

*அஞ்சலங்களில் நடைபெறும் இழப்பு மற்றும் கையாடல் சம்பந்தமான பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிடுவது சம்பந்தமாக புதிய நடைமுறையை (SOP )  அஞ்சல் வாரியம் வெளியிட்டுள்ளது .அதன்படி சேமிப்பு பத்திரங்கள் ,கணக்குகள் .இன்சூரன்ஸ் .மணியார்டர் இவைகளில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் அதற்கான CLAIM விரைந்து முடித்திட அஞ்சல் வாரியம் காலக்கெடுயையும்  கொடுத்துள்ளது .அதன்படி பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பணம் கிடைக்கவில்லை என்று தெரியும் பட்சத்தில் அதற்கான படிவத்தில் இரண்டு பிரதிகள் எடுத்து ID மற்றும் ADDRESS PROFF .ஒரிஜினல் PB உடன் கொடுத்திடவேண்டும்( Dept of Posts dtd 27.05.2021)

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, July 15, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 
                                        பஞ்சப்படி அறிவிப்பும்! --அதன் பின்னணியும் !                     
நிறுத்திவைக்கப்பட்ட பஞ்சப்படியை மத்திய அரசு ஊழியர்களுக்கும் ,ஓய்வூதியர்களுக்கும் வழங்கிட நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது .நாட்டிலே முதன்முதலாக ஊழியர்களின் பஞ்சபடியை 18 மாதங்கள் முடக்கிவைத்திட பெருமை இந்த அரசை சாரும் .
        இந்த அறிவிப்பு வந்தவுடன் பல்வேறு ஊடகங்களில் ஒவ்வொரு ஊழியருக்கும் எவ்வளவு தொகை உயருகிறது என பட்டியல் போட்டு காட்டுகிறார்கள் .ஆனால் யாராவது இந்த 18 மாதஙக்ளில் ஒவ்வொரு ஊழியரும் ,ஓய்வூதியரும் எவ்வளவு இழப்பை சந்தித்தார்கள்  என்பதனை யாரும் அறிந்திடவில்லை .
                                  முடக்கப்பட்ட மூன்று தவணை பஞ்சபடியால் மத்திய அரசு ஊழியர்கள் ரூபாய் 37,530கோடியும்   மாநில அரசு ஊழியர்கள்  ரூபாய்  கோடியும் கொரானா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள் என்பதனை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும் .
                                      கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற NJCM கூட்டத்தில் கூட வருகிற ஜூலை 15 குள் பஞ்சப்படி குறித்த அறிவிப்புகள் வரவில்லை என்றால் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஊழியர்கள் செல்வார்கள் என அறிவித்திருந்தையும் நினைவில் கொள்ளவேண்டும் 
                                       மேலும் பொருளாதார வல்லுனர்கள் குழுவும்  நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை சீர்படுத்த நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரித்திட முடக்கப்பட்ட பஞ்சபடியை கொடுத்திடவேண்டும் என அறிவித்திருந்தது .
                                      ஒருபக்கம் ஊழியர்களின் கோபம் ,மறுபக்கம் பொருளாதார முடக்கம் என்கின்ற பின்னணியில் தான் பஞ்சப்படி குறித்தான அறிவிப்பை அரசு வெளியிட்டடுள்ளது . இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் நடத்திய இயக்கங்கள் ,NJCM கொடுத்த அழுத்தங்கள் ,மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்த போராட்டங்கள் என அனைத்திலும் அஞ்சல் ஊழியர்கள் என்ற முறையில் மட்டுமல்ல NFPE பேரியக்கத்தின் உறுப்பினர்கள் என்கின்ற முறையில் நமக்கும் அதில் பெரும்பங்கு உண்டு என்பதனை பெருமையோடு சொல்லிக்கொள்வோம் ..
                                தொடர்ந்து ஏழாவது ஊதியக்குழுவின் அடிப்படையில் 25 சத பஞ்சப்படி உயர்வினால் மாறவேண்டிய வீட்டுவாடகை படி ,போக்குவரத்து படி இவைகளை விரைந்து பெற்றிட  வலியுறுத்துவோம் ! வலியுறுத்துவோம் !
                                    ஒரு போராட்டத்தின் முடிவில் கிடைக்கின்ற வெற்றியின் சுவையை  அந்த போராட்டத்தில் பங்கேற்ற  நமது NFPE உறுப்பினர்களை தவிர   வேறெவரும் சுவைத்திட வாய்ப்பில்லை !வழியில்லை !
                                     தொடரட்டும் நம் பயணம் ...
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்  கோட்ட செயலர் நெல்லை 
                                
                               










Friday, July 9, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                    08.07.2021 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் நாம் விவாதிக்கப்போகும் பிரச்சினைகளை நேற்று பதிவிட்டிருந்தோம் .இன்று அதன்மீது எடுக்கப்பட்ட முடிவுகள் உங்கள் பார்வைக்கு தருகிறோம் .

1.LSG ஊழியர்களின் இடமாற்றம் குறித்து விரிவாக பேசப்பட்டது .அதில் அடுத்த LSG பதவி உயர்வு பட்டியல் வந்தவுடன் முதலில் ஏற்கனவே LSG பதவி உயர்வு பெற்று வெளியிடங்களுக்கு சென்றுள்ள ஊழியர்களின் இடமாறுதல்கள் பரீசிலிக்கப்பட்டு அதாவது முறையாக விருப்பமனுக்கள் கோரப்பட்டு அவர்களின் இடமாறுதல்கள் வழங்கப்படும் என்கின்ற உறுதிமொழி தரப்பட்டது .

2.பாளையம்கோட்டை தலைமைஅஞ்சலகத்திற்கு 62.05 KV ஜெனெரேட்டர் வாங்கிட ,மண்டல அலுவகத்தில் இருந்து உத்தரவு பெறப்பட்டுவிட்டது என்றும் AE சிவில் அவர்களின் ஆய்வுக்குப்பிறகு இடம் உள்ளிட்ட  கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் .

3.திசையன்விளையில் கூடுதலாக ஒரு எழுத்தர் விரைவில் நியமிக்கப்படுவார்கள் 

4.அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலத்திற்கு அக்கௌன்டன்ட்  விருப்பமனுக்கள் கோரப்படும் 

5.தோழர் ஆசைத்தம்பி அவர்களின் PTC பயிற்சிகால TA பில் மீண்டும் பரிசீலிக்கப்படும் 

6.காவல்கிணறு அலுவலக நெட்ஒர்க் குறித்து CO கவனத்திற்கு கொண்டு செல்ல பட்டுள்ளது .

7.புதிதாக தபால்காரராக நியமனம் பெற்ற ஊழியர்களுக்கு பயிற்சிக்காலத்திற்கு ஊதியம் வழங்கிட நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது (தோழர் செந்தில் கிருஷ்ணன் பாளை  ,தோழர் சந்தீப் பணகுடி )

8.தோழியர் ரேணுகா தபால்காரர் வள்ளியூர் அவர்களின் CONFORMATION உத்தரவு விரைவில் அதற்கான கமிட்டி கூடி வெளியிடப்படும் 

9.PROBATION காலங்கள் முடியாத பட்சத்தில் இடமாறுதல் மறுக்கப்பட்ட தபால்கார்களின் இடமாறுதல் விண்ணப்பங்கள் மண்டல அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது .(தோழியர் பியூலா எமிலி )

10.திருநெல்வேலி தலைமை அஞ்சலத்திற்கு உடனடியாக இரண்டு மானிட்டர் வழங்கப்படும் 

11.பாளையம்கோட்டையில் 6 வது கவுன்டர் தொடர்ந்து செயல்படவேண்டிய அவசியம் மற்றும் கூடுதலாக MPCM கவுண்டர் இந்த தேர்வு கால சீசன் முடியும் வரை இயக்கப்படும் 

12.பாளையம்கோட்டை ATR பதவி விரைவில் நிரப்பிட விண்ணப்பங்கள் கோரப்படும் 

13.சமூகரெங்கபுரம் அலுவலக கட்டட பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது .சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து எந்த கடிதம் வரவில்லை என்றும் 07.07.2021 அன்றுதான் கடிதம் கிடைத்ததாகவும் தெரிவித்தார்கள் 

14.சங்கர்நகர் அஞ்சலத்திற்கு CASH COUNTING  உடனே வழங்கப்படும் .

                      தோழர்களே !நேற்றைய மாதாந்திர பேட்டியில் நமது புதிய SSP அவர்கள் எல்லா பிரச்சினைகள் குறித்தும் முழுமையான இலாகா விதிகளை கோடிட்டுக்காட்டி விவாதித்தார்கள் .மேலும் ஊழியர்கள் அலுவலக பிரச்சினைகள் குறித்து முதலில் கோட்ட நிர்வாகத்திற்கு கடிதங்கள் அனுப்பவும் அதன்பிறகு யூனியன் சப்ஜெக்ட் வைக்கவும் கேட்டுக்கொண்டார்கள் .ஆகவே நமது தோழர்கள் /தோழியர்க்ளுக்கு அலுவலக அல்லது தனிப்பட்ட கடிதங்கள் எழுதிட தங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என நினைத்தால் நிச்சயம் கோட்ட சங்கம் உங்களுக்கு உதவிட மட்டுமின்றி உங்களுக்கு தேவையான கடிதங்களை தயார்செய்து அனுப்பவும் கோட்ட சங்கம் உதவிடும் .அதற்கான தேர்ச்சிபெற்ற தோழர் /தோழியர்கள் உங்களுக்கு உதவிட காத்திருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, July 8, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                     இன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் நாம் விவாதிக்க கொடுத்திருக்கும் பிரச்சினைகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .

NFPE

                    ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                 TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.P3-MM/ dated at Torunelveli 627002 the 05.07.2021

To

The Sr.Supdt. of Post Offices,

Tirunelveli Division

Tirunelveli-627002

Sir,

            Sub:    Subjects for monthly meeting -reg

*****

              The following subjects may kindly be included for discussion during the monthly meeting.

1.Supply of four monitors to Tirunelveli HO.

2. Supply of Cash counting machine to Sankarnagar SO.

3.Considering the Request of LSG officials for transfers as there are so many vacancies are in and around  city area .

4.Early filling up of  the vacant post of ATR,  Palayamkottai HO.

5.Supply of 3 Steel cupboards for SB branch,  Palayamkottai HO.

6.Request  to  remind RO for the supply of 15 kv Genset immediately,  which was approved by RO quite Six months back.

7. Maintain minimal staff strength of Tisayanvilai as 1+4 .

8. Request  to reconsider the already sanctioned TA bill dtd 03.10.2019 of   sri .M .Asai Thambi PA Panagudi 

9.Request to modify the maximum minimum cash balance of Mukkudal and Agasthiyarpatti. S.O.s Since the present balance is not sufficient to manage the office.The statistics were already submitted by the SPMs.

10.Request to modify the present working hours of Ravanasamudram S.O  from 0900 to 1700  to 08.30 to 1630.

11.Request to fillup the vacant PA posts of the following offices

1.PA Papanasam Mills

2.LSGPA Kadayam

3.PA Ravanansamudram.

4.PA Munanjipatti

12.Request to fill up the vacant post of Accountant, Ambasamudram HO on deputation basis.

13. Request to resolve the network issues at Kavalkinaru.

14. Request to either repair or dequarterize the SPM's quarters of Samugarengapuram SO.

15. Permission to attend  online PA Induction training from their residences itself as the trainees attend the classes only through their mobiles since only one PC is available at WPCTC .

16. Request for the supply of one System and it's peripherals to the Counter 6 of Palayamkottai HO as it is already marked for condemnation .

The following officials will attend the meeting.

1.      S.K.Jacobraj  Divisional Secretary &LSG PA Tirunelveli HO

2.       R.V.Thiyagarajapandian Branch Secretary &SPM Alwarkurichi

             

                         Yours faithfully  

[S.K.JACOBRAJ]

 

 

 


Wednesday, July 7, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                                  மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் /நமது NFPE சம்மேளனம் அறைகூவலினை ஏற்று வருகிற  08.07.2021 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .தோழர்கள் அனைவரும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் 

 இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 

நாள்      08.07.2021 வியாழன்  நேரம் -மாலை 6 மணி 

கோரிக்கைகள் --1.போராடும் பாதுகாப்பு துறை ஊழியர்களை பாதுகாப்போம் 

                                    2.ஊழியர்களின் போராட்டங்களுக்கு எதிராக கொண்டுவரும் அவசர சட்டத்தை EDSO (ESEENTISAL SERVICE DEFENCE ORDINANCE --2021 சட்டத்தை திரும்பப்பெறு 

                                    3. NJCM கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விரைந்து அமுல்படுத்து (பஞ்சப்படி வழங்குதல் ,ஜூன் 30 யில் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஒரு  INCREMENT வழங்குதல் உள்ளிட்ட )

                                     தோழர்களே ! மத்திய அரசு நமது நாட்டில் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் 41 நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை எதிர்த்து DEFENCE CIVILEMPLOYEES  ஊழியர்களின் மூன்று சங்கங்கள் இணைந்து வருகிற ஜூலை 26 ம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் செல்ல முடிவெடுத்துள்ளார் .அவர்களது போராட்டத்தை ஒடுக்கிட மத்தியஅரசு கொண்டுவரும் அவசர சட்டத்தை EDSO (ESEENTISAL SERVICE DEFENCE ORDINANCE --2021 எதிர்த்து போராடவேண்டிய கடமை நமக்கும் உண்டு .ஆக போராடும் தொழிலாளர்கள் ,விவசாயிகள் என எவரையும் கண்டுகொள்ளாத மத்திய அரசிற்கு மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம்  சார்பாக நமது கண்டனத்தை தெரிவிப்போம் .போராடும் பாதுகாப்பு துறை ஊழியர்களை பாதுகாப்போம் .

                                   நன்றி --போராட்ட வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் -- கோட்ட செயலர் நெல்லை 

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                                  மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் /நமது NFPE சம்மேளனம் அறைகூவலினை ஏற்று வருகிற  08.07.2021 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .தோழர்கள் அனைவரும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் 

 இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 

நாள்      08.07.2021 வியாழன்  நேரம் -மாலை 6 மணி 

கோரிக்கைகள் --1.போராடும் பாதுகாப்பு துறை ஊழியர்களை பாதுகாப்போம் 

                                    2.ஊழியர்களின் போராட்டங்களுக்கு எதிராக கொண்டுவரும் அவசர சட்டத்தை EDSO (ESEENTISAL SERVICE DEFENCE ORDINANCE --2021 சட்டத்தை திரும்பப்பெறு 

                                    3. NJCM கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விரைந்து அமுல்படுத்து (பஞ்சப்படி வழங்குதல் ,ஜூன் 30 யில் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஒரு  INCREMENT வழங்குதல் உள்ளிட்ட )

                                     தோழர்களே ! மத்திய அரசு நமது நாட்டில் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் 41 நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை எதிர்த்து DEFENCE CIVILEMPLOYEES  ஊழியர்களின் மூன்று சங்கங்கள் இணைந்து வருகிற ஜூலை 26 ம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் செல்ல முடிவெடுத்துள்ளார் .அவர்களது போராட்டத்தை ஒடுக்கிட மத்தியஅரசு கொண்டுவரும் அவசர சட்டத்தை EDSO (ESEENTISAL SERVICE DEFENCE ORDINANCE --2021 எதிர்த்து போராடவேண்டிய கடமை நமக்கும் உண்டு .ஆக போராடும் தொழிலாளர்கள் ,விவசாயிகள் என எவரையும் கண்டுகொள்ளாத மத்திய அரசிற்கு மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம்  சார்பாக நமது கண்டனத்தை தெரிவிப்போம் .போராடும் பாதுகாப்பு துறை ஊழியர்களை பாதுகாப்போம் .

                                   நன்றி --போராட்ட வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, July 3, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                                     வணக்கம் .முக்கிய செய்திகள் .

         நமது கோட்டத்தில்   புதிய SSP ஆக பொறுப்பேற்றுள்ள திரு .சிவாஜி கணேஷ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம் .இதில் 

1.நமது கோட்டத்தில் PA INDUCTION பயிற்சிகளை ஊழியர்களின் இல்லங்களில் இருந்தே ஆ ன்லைன் வகுப்புகளில் பங்கேற்றிட கேட்டுக்கொண்டோம் .அதற்கு அவர்கள் முந்தைய SSP ஒருவர் போட்ட உத்தரவை உடனே மாற்றுவது சரியான நிலைப்பாடாக இருக்காது .இனி வரும் காலங்களில் இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார்கள் .

2.பாளையம்கோட்டையில் புதிதாக நேரடி நியமனத்தில் தபால்காரராக பணியில் சேர்ந்த தோழர் செந்தில் கிருஷ்ணன் அவர்களுக்கு பயிற்சிக்காலத்தில் ஊதியம் வாழங்கப்படாதது குறித்து பேசினோம் .

3.நமது கோட்டத்தில் சுமார் 25 GDS ஊழியர்களுக்கு மேலாக ரெகுலர் உத்தரவுகள் வழங்கப்படாதது குறித்தும் ,இதனால் இடமாறுதல் மற்றும் போனஸ் கிடைக்காமல் போவது குறித்தும் எடுத்துரைத்தோம் ..

மேலும் இதர பிரச்சினைகள் குறித்து ASP (HOS) அவர்களிடம் பேசியவைகள்  

 . 1.அதிக கிளை அஞ்சலகங்களை கொண்ட அதாவது 9 கிளை அஞ்சலகங்களை கொண்ட மானுர் மற்றும் காலியாகவுள்ள அனைத்து LSG பதவிகளை விருப்பமனுக்கள் பெற்று உடனடியாக நிரப்பிடவும் வலியுறுத்தப்பட்டது 

2. LRPA களை வைத்துக்கொண்டே இதர PA களை டெபுடேஷன் அனுப்புவது குறித்து இனி தவிர்க்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது .

3.தோழர் ஹரி ராமகிருஷ்ணன் அவர்களின் RELIEF குறித்தும் பேசப்பட்டது

       மற்ற  பிரச்சினைகள் குறித்து வருகிற 08.07.2021 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்படும் .ஆகவே தோழர்கள் தங்கள் பகுதி பிரச்சினைகளை 03.07.2021 இன்று மாலைக்குள் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் S.K.ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை  

                                  

Thursday, July 1, 2021

                                                      அறிவிப்பு 

சேமிப்பு கணக்குகளில் பணம் எடுக்க மெசெஞ்சர் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது .வாடிக்கையாளர்கள் நேரடியாக வந்து தங்கள் கணக்குகளில் பணத்தை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

                                                                உத்தரவு --POSB 15/2021 

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !  வணக்கம் .

                                                               முக்கிய செய்திகள் 

    சமீபத்திய POSB உத்தரவு படி அஞ்சலகங்களில் SB 7 படிவம் மூலம் வித்ட்ராவல் கோரும் வாடிக்கையாளர்களுக்கு இனி மேசெஞ்சர் மூலம் பணம் எடுக்க முடியாது .ஆகவே நமது ஊழியர்கள் இதை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டுகிறோம் . இதனால் இனி வாடிக்கையாளர்களுக்கு POSB செக் குறித்தான தேவைகள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

                    .*சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் வருகிற செப்டம்பர் வரை மாற்றங்கள் ஏதும் இல்லை என்றும் நடப்பு வட்டி விகிதங்களே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

                       *நமது கோட்டத்திற்கு இன்று புதிய SSP திரு .சிவாஜி கணேஷ் அவர்கள் பொறுப்பேற்கிறார்கள் .அவர்களை NELLAI -NFPE வாழ்த்தி வரவேற்கிறது ..

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை