அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் /நமது NFPE சம்மேளனம் அறைகூவலினை ஏற்று வருகிற 08.07.2021 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .தோழர்கள் அனைவரும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்
இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம்
நாள் 08.07.2021 வியாழன் நேரம் -மாலை 6 மணி
கோரிக்கைகள் --1.போராடும் பாதுகாப்பு துறை ஊழியர்களை பாதுகாப்போம்
2.ஊழியர்களின் போராட்டங்களுக்கு எதிராக கொண்டுவரும் அவசர சட்டத்தை EDSO (ESEENTISAL SERVICE DEFENCE ORDINANCE --2021 சட்டத்தை திரும்பப்பெறு
3. NJCM கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விரைந்து அமுல்படுத்து (பஞ்சப்படி வழங்குதல் ,ஜூன் 30 யில் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு ஒரு INCREMENT வழங்குதல் உள்ளிட்ட )
தோழர்களே ! மத்திய அரசு நமது நாட்டில் பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் 41 நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை எதிர்த்து DEFENCE CIVILEMPLOYEES ஊழியர்களின் மூன்று சங்கங்கள் இணைந்து வருகிற ஜூலை 26 ம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் செல்ல முடிவெடுத்துள்ளார் .அவர்களது போராட்டத்தை ஒடுக்கிட மத்தியஅரசு கொண்டுவரும் அவசர சட்டத்தை EDSO (ESEENTISAL SERVICE DEFENCE ORDINANCE --2021 எதிர்த்து போராடவேண்டிய கடமை நமக்கும் உண்டு .ஆக போராடும் தொழிலாளர்கள் ,விவசாயிகள் என எவரையும் கண்டுகொள்ளாத மத்திய அரசிற்கு மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் சார்பாக நமது கண்டனத்தை தெரிவிப்போம் .போராடும் பாதுகாப்பு துறை ஊழியர்களை பாதுகாப்போம் .
நன்றி --போராட்ட வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் -- கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment