அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
கடந்த சனிக்கிழமை (24.07.2021)ஏற்பட்ட நெட்ஒர்க் பிரச்சினைகள் குறித்து நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக ஒருகடிதமும் ,பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் சார்பாக போடப்பட்ட Error Entry நகலும் கோட்ட சங்கத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டது .எத்தனை தோழர்கள் நாம் கேட்டுக்கொண்டபடி Error Entry அனுப்பினார்கள் என்று தெரியவில்லை .அப்படி யாரும் நமது குறைகளை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லவில்லை என்றால் நிர்வாகத்திற்கு மகிழ்ச்சி தான் .எப்பொழுது நமது குறைகளை வெறும் குமுறல்களாக மட்டுமே முடித்துவிடாமல் அதை கோரிக்கையாக எழுத்துவடிவில் கொடுக்க தொடங்குகிறோமோ நாம் நிச்சயம் ஒருபடி முன்னேறியிருக்கிறோம் என்று அர்த்தம் ...
அப்படி தான் இன்று நெட்ஒர்க் சம்பந்தமாக கடிதத்தை கொடுத்தவுடன் வழக்கம்போல் நிர்வாகம் இது All INDIA பிரச்சினையல்லவா ?நாங்கள் என்ன செய்ய முடியும் என்றார்கள் .நாமும் நீங்கள் இந்த தகவல்களை உங்கள் மேல்மட்ட அதிகாரிகளுக்கு தெரிவியுங்கள் போதும் என்றோம் .காரணம் பல கூட்டங்களில் நிர்வாகத்திடம் இதுகுறித்து மத்திய சங்கம் பேசினால் எந்த மாநிலத்தில் இருந்தும் புகார் இல்லை என்கிறார்கள் .மாநில சங்கம் CPMG அவர்களிடம் விவாதித்தால் எந்த கோட்டத்தில் இருந்தும் புகார் வரவில்லை என்கிறார்கள் .ஆகவே நிர்வாகத்தின் இந்த நழுவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் நாங்கள் இந்த கடிதத்தை கொடுத்திருக்கிறோம் எங்கள் கடிதத்தை நீங்கள் அனுப்புங்கள் என்று சொல்லிவிட்டுவந்தோம் .
வேலைநேரம் முடிந்து பலமணிநேரம் கழித்து தான் தோழர்கள் தோழியர்கள் வீட்டிற்கு செல்லவேண்டிய இழிநிலையை ஒவ்வொரு கோட்ட செயலர்களும் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் .ஒரு 10 நிமிடம் தாமதமாகவோ அல்லது ஒரு 10 நிமிடம் முன் ன தாகவோ அலுவகத்தை விட்டு சென்றுவிட்டால் நம்மிடம் எத்தனை விளக்கங்கள் எத்தனை கேள்விகள் எத்தனை வசவுகள் நாம் எதிர்கொள்ளவேண்டியதிருக்கிறது .
அதேபோல் நெட்ஒர்க் தொடர்பாக நிர்வாகம் யாருடன் ஒப்பந்தம் போட்டால் நமக்கென ?எத்தனை கோடியில் இருந்தாலும் நமக்கென்ன ? அந்த நிறுவனத்தை தட்டிக்கேட்கும் உரிமை கடமை நிர்வாகத்திற்கு இல்லாதபோதுதான் நாம் தலையிட வேண்டிய அவசியம் வருகிறது .
MICRATION ஞாயிறு அல்லது விடுமுறை நாட்களில் வைத்திட அகிலஇந்திய சங்கத்தை வலியுத்தவேண்டிய அவசியம் நமது மாநில சங்கத்திற்கு மட்டுமே இருக்கிறது என்பதுதான் இன்றைய அகிலஇந்திய சங்கத்தின் உண்மை நிலை
CEPT என்பது நமது CPMG யின் வரையறைக்குள் இல்லை .அதற்கென்றே தனி CPMG என நேரடி இயக்குனர்க கட்டுப்பாட்டில் இருக்கிறது .இன்னும் நாடுமுழுவதிலும் சுமார் 1000 க்கு மேல் அலுவலகங்கள் MICRATION செய்யப்படவேண்டியதுள்ளது ..குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் .கொல்கத்தா ,அசாம் என ஏராளம் இருக்கின்றன .MICRATION தேதி குறிப்பதும் CEPT கையில் தான் இருக்கிறது .. MICRATION காலையில் தொடங்கினாலும் மாலைக்குள் முடியாத எதார்த்தைதை நிர்வாகத்தின் கவணத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் .மேலும் எப்படி பராமரிப்பு என்று மின்வாரியம் மின்தடையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறதோ அதேபோல் MICRATION நாளில் அதிகாரப்பூர்வமான NON -BUSINESS DAY என அறிவித்துவிட்டால் பொதுமக்களும் நம்மிடம் கோபப்படமாட்டார்கள் நாமும் இழவு காத்த கிளியாக காத்திருக்க வேண்டியதில்லை
ஆகவே இந்த செயற்கையான நெட்ஒர்க் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வழக்கம் போல் நமது மாநிலச்சங்கம் முன்கையெடுத்து மத்திய சங்கத்தை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் ஏனென்றல் நெட்ஒர்க் விசயத்தில் நமது தமிழ்மாநில சங்கத்தின் பங்கு என்பது 26 3.2015 ல் தமிழ் மாநில வேலை நிறுத்தம் முதல் இன்றுவரை தொடர்கிறது குறிப்பாக 2.8 2017 ல் மீண்டும் ஒரு தமிழ்் மாநில வேலை நிறுத்த நோட்டீஸ். தொடர் போராட்டம். முடிவில் தொழிலாளர் நல ஆணையர் தலையீட்டினால் CPMG நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி எழுத்து பூர்வமான Minutes கொடுத்ததின் அடிப்படையில் வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது. தமிழகம் முழுவதும் Band width உயர்த்த உத்திரவு, 2560 புதிய கணினிகள், ஆயிரத்திற்கு மேல் Printer கள், UPS, Battery, Generator கள் ஆகியவை மாற்றப்பட்டன
தோழர்களே ! உங்கள் அலுவலக பிரச்சினைகளை தயவு செய்து நிர்வாகத்தின் கவன த்திற்கு எழுத்து பூர்வமாக கொண்டுசெல்ல தயங்காதீர் !..நமது இயக்கத்தின் வரலாறு அப்படிப்பட்டது .நமது நிறுவனத்தலைவர் தோழர் பாபு தாரா பாதா அவர்களின் முதல்முழகத்தில் தொழிலார்கள் பிச்சைக்காரர்கள் அல்ல ..கொடுப்பதை பெற்றுக்கொள்ள ! இந்த வரிக்கு சொந்தம் கொண்டாடும் ஒரே இயக்கம் நமது NFPE பேரியக்கம் என்பதனை மட்டுமே நினைவில் கொள்ளுங்கள்
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
Have a good day.
ReplyDeleteError entry is only safe gaurd for our comrades.within eighteen months period one sub office building repair work done for FOUR LAKSH RUPEES.2004-2005.In this period morethan 100 error entries sent by me to HO/DO/AND the error copies are save our job.And generator shifted from inside near SPM.seat to on other room within three days.2015. (Because generator smoke SPOIL HEALTH OF SPM.A small mistake find In B.O.-OR S.O.OR H.O.Please make error entry.Error entry is not against any our co.worker.It is convey that we find the mistake and information our staff to rectifying it.Because it is a caution to our higher official they give guide to the broblem not change big mistake .
In this blog at sixth para from last line to third line please correct ELAVU-kattha kili-NOT EZHAVU-kattha kili.
This is for information .comarade Jacobraj.If you feel wrong please ignore it.
K.Ponnuraj.
Ex EDDA/MC
SANKARNAGAR.
29/7/21