அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
பஞ்சப்படி அறிவிப்பும்! --அதன் பின்னணியும் !
நிறுத்திவைக்கப்பட்ட பஞ்சப்படியை மத்திய அரசு ஊழியர்களுக்கும் ,ஓய்வூதியர்களுக்கும் வழங்கிட நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது .நாட்டிலே முதன்முதலாக ஊழியர்களின் பஞ்சபடியை 18 மாதங்கள் முடக்கிவைத்திட பெருமை இந்த அரசை சாரும் .
இந்த அறிவிப்பு வந்தவுடன் பல்வேறு ஊடகங்களில் ஒவ்வொரு ஊழியருக்கும் எவ்வளவு தொகை உயருகிறது என பட்டியல் போட்டு காட்டுகிறார்கள் .ஆனால் யாராவது இந்த 18 மாதஙக்ளில் ஒவ்வொரு ஊழியரும் ,ஓய்வூதியரும் எவ்வளவு இழப்பை சந்தித்தார்கள் என்பதனை யாரும் அறிந்திடவில்லை .
முடக்கப்பட்ட மூன்று தவணை பஞ்சபடியால் மத்திய அரசு ஊழியர்கள் ரூபாய் 37,530கோடியும் மாநில அரசு ஊழியர்கள் ரூபாய் கோடியும் கொரானா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள் என்பதனை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும் .
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற NJCM கூட்டத்தில் கூட வருகிற ஜூலை 15 குள் பஞ்சப்படி குறித்த அறிவிப்புகள் வரவில்லை என்றால் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஊழியர்கள் செல்வார்கள் என அறிவித்திருந்தையும் நினைவில் கொள்ளவேண்டும்
மேலும் பொருளாதார வல்லுனர்கள் குழுவும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை சீர்படுத்த நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரித்திட முடக்கப்பட்ட பஞ்சபடியை கொடுத்திடவேண்டும் என அறிவித்திருந்தது .
ஒருபக்கம் ஊழியர்களின் கோபம் ,மறுபக்கம் பொருளாதார முடக்கம் என்கின்ற பின்னணியில் தான் பஞ்சப்படி குறித்தான அறிவிப்பை அரசு வெளியிட்டடுள்ளது . இந்த இடைப்பட்ட காலத்தில் நாம் நடத்திய இயக்கங்கள் ,NJCM கொடுத்த அழுத்தங்கள் ,மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்த போராட்டங்கள் என அனைத்திலும் அஞ்சல் ஊழியர்கள் என்ற முறையில் மட்டுமல்ல NFPE பேரியக்கத்தின் உறுப்பினர்கள் என்கின்ற முறையில் நமக்கும் அதில் பெரும்பங்கு உண்டு என்பதனை பெருமையோடு சொல்லிக்கொள்வோம் ..
தொடர்ந்து ஏழாவது ஊதியக்குழுவின் அடிப்படையில் 25 சத பஞ்சப்படி உயர்வினால் மாறவேண்டிய வீட்டுவாடகை படி ,போக்குவரத்து படி இவைகளை விரைந்து பெற்றிட வலியுறுத்துவோம் ! வலியுறுத்துவோம் !
ஒரு போராட்டத்தின் முடிவில் கிடைக்கின்ற வெற்றியின் சுவையை அந்த போராட்டத்தில் பங்கேற்ற நமது NFPE உறுப்பினர்களை தவிர வேறெவரும் சுவைத்திட வாய்ப்பில்லை !வழியில்லை !
தொடரட்டும் நம் பயணம் ...
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
Sir
ReplyDeleteExcellent 🙏