அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
முக்கிய செய்திகள்
புதிதாக தபால்காரராக நேரடி நியமனம் பெற்ற தோழர் செந்தில் கிருஷ்ணன் போஸ்ட்மேன் பாளையம்கோட்டை அவர்களுக்கு பயிற்சிகாலத்தில் ஊதியம் வழங்கிட மறுக்கப்பட்டதை நாம் கடந்த மாதாந்திர பேட்டியில் வைத்துவிவாதித்தோம் .அதை ஏற்றுக்கொண்ட நமது SSP அவர்கள் பயிற்சிக்காலத்தில் ஊதியம் உண்டு அதை வழங்கிட உத்தரவிட்டுள்ளார்..அதன்படி .தோழர் சந்தீப் போஸ்ட்மேன் பணகுடி தோழர் செந்தில் கிருஷ்ணன் போஸ்ட்மேன் பாளையம்கோட்டை ஆகிய இருவருக்கும் இந்த மாத சம்பளத்தோடு சேர்த்து வழங்கப்படும் .இந்த பிரச்சனையில் உடனடி நடவடிக்கை எடுத்த நமது கோட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ...
*மீண்டும் ஆதார் ,CSC பணிகளை முடுக்கிடும் வகையில் கோட்ட அலுவலகம் வாட்ஸாப்ப் மூலம் ஊழியர்களுக்கு நெருக்கடி கொடுப்பது கவலை அளிக்கிறது ..எல்லா நேரமும் ஊழியர்கள் வாட்ஸாப்ப் பார்த்துக்கொண்டே இருக்கமுடியுமா ?இதுகுறித்து நாளை விளக்கமான கடிதத்தை நமது கோட்ட சங்கம் சார்பாக கோட்ட நிர்வாகத்திற்கு கொடுக்கவுள்ளோம் .இதுகுறித்து யார்யாருக்கு விளக்கக்கடிதங்கள் கேட்டு வந்துள்ளதோ அதன் விவரங்களை கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி ..தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment