...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, July 31, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                         கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைத்தது என்ன ? நடைமுறைப்படுத்தியது என்ன ? பரீசீலினையில் இருப்பது என்ன ? என்கின்ற கேள்விக்கு மாநிலங்களவையில் நமது துறையின் இணை அமைச்சர் அளித்திட்ட பதில் உங்கள் பார்வைக்கு .

1.மருத்துவ உதவி /ஹெல்த் குரூப் இன்சூரன்ஸ் /ESIC மூலம் மருத்துவ சிகிச்சை 

2.கிளை அஞ்சலகங்களுக்கு புதிய வரவு /செலவு  கணக்கீடு முறை 

3.இலாகா ஊழியர்களை போன்று 12 வருடம் ,24 வருடம் 36 வருடம் சேவை முடித்தவர்களுக்கு மூன்று கட்ட பதவி உயர்வுகள் 

4.CWF WELFARE சந்தா ரூபாய் 100 யில் இருந்து 300 ஆக உயர்த்துதல் 

5.மாநில சேம நிதியில் இருந்து வழங்கும் உதவி தொகை 10 சதம் அதிகரித்தல் 

6.கூடுதலாக WELFARE நிதி மூலம் டேபிள் செல்போன் வாங்கிட ரூபாய் 10000 கடன் 

7.குரூப் இன்சூரன்ஸ் தொகை ரூபாய் 50000 யில் இருந்து 5 லட்சமாக உயர்த்துதல் 

நிராகரிக்கப்பட்ட பரிந்துரைகள் 

1.PAID LEAVE 20 நாளில் இருந்து 30 நாட்களாக உயர்த்துதல் 

2.விடுப்புகளை 180 நாட்கள் வரை சேர்த்து பணமாக்குவது 

3.COMPOSITE அலவன்ஸ் ABPM களுக்கும் வழங்குதல் 

4.வேலை நேரத்தை 8 மணிநேரமாக உயர்த்துதல் 

5.பணிஓய்வு என்பது 65 வயதில் அந்த மாத கடைசி தேதி 

6.அனைத்து தனிநபர்  BOகளை இரண்டு நபர் அலுவலகமாக மாற்றுதல் 

தோழர்களே ! பொதுவாக ஊதியக்குழு அமுலாக்கத்தோடு நீர்த்துப்போகும் முந்தைய பரிந்துரைக்ளுக்கு மாறாக இன்னமும் கமலேஷ் சந்திரா கமிட்டியில் பரிந்துரைத்த பதவி உயர்வு .குரூப் இன்சூரன்ஸ் ரூபாய் 5 லட்சம் ESIC மூலம் மருத்துவசிகிட்சை என்ற முன்னேற்றமான கோரிக்கைகள் அரசின் பரீசீலினையில் உள்ளது முக்கியமான ஒன்று   ..இந்த கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட  மீண்டும் ஒருஒன்றுபட்ட போராட்டங்களை GDS சங்கங்கள் வேலைநிறுத்தம்  செய்தால் பழைய காலங்களில் பாராமுகமாக இருந்த சம்மேளனம் போல் இல்லாமல் தமிழக அஞ்சல் மூன்று மாநிலச்சங்கம் போல் (அன்று நான்கு நாட்கள் வேலைநிறுத்தம் )GDS ஊழியர்களுக்காக நாமும் களம் இறங்குவோம் ..கோரிக்கைகளை வெல்ல துணை நிற்போம் ..அகிலஇந்திய சங்கத்தை வலியுறுத்துவோம் 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment