...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, July 9, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                    08.07.2021 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் நாம் விவாதிக்கப்போகும் பிரச்சினைகளை நேற்று பதிவிட்டிருந்தோம் .இன்று அதன்மீது எடுக்கப்பட்ட முடிவுகள் உங்கள் பார்வைக்கு தருகிறோம் .

1.LSG ஊழியர்களின் இடமாற்றம் குறித்து விரிவாக பேசப்பட்டது .அதில் அடுத்த LSG பதவி உயர்வு பட்டியல் வந்தவுடன் முதலில் ஏற்கனவே LSG பதவி உயர்வு பெற்று வெளியிடங்களுக்கு சென்றுள்ள ஊழியர்களின் இடமாறுதல்கள் பரீசிலிக்கப்பட்டு அதாவது முறையாக விருப்பமனுக்கள் கோரப்பட்டு அவர்களின் இடமாறுதல்கள் வழங்கப்படும் என்கின்ற உறுதிமொழி தரப்பட்டது .

2.பாளையம்கோட்டை தலைமைஅஞ்சலகத்திற்கு 62.05 KV ஜெனெரேட்டர் வாங்கிட ,மண்டல அலுவகத்தில் இருந்து உத்தரவு பெறப்பட்டுவிட்டது என்றும் AE சிவில் அவர்களின் ஆய்வுக்குப்பிறகு இடம் உள்ளிட்ட  கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் .

3.திசையன்விளையில் கூடுதலாக ஒரு எழுத்தர் விரைவில் நியமிக்கப்படுவார்கள் 

4.அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலத்திற்கு அக்கௌன்டன்ட்  விருப்பமனுக்கள் கோரப்படும் 

5.தோழர் ஆசைத்தம்பி அவர்களின் PTC பயிற்சிகால TA பில் மீண்டும் பரிசீலிக்கப்படும் 

6.காவல்கிணறு அலுவலக நெட்ஒர்க் குறித்து CO கவனத்திற்கு கொண்டு செல்ல பட்டுள்ளது .

7.புதிதாக தபால்காரராக நியமனம் பெற்ற ஊழியர்களுக்கு பயிற்சிக்காலத்திற்கு ஊதியம் வழங்கிட நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது (தோழர் செந்தில் கிருஷ்ணன் பாளை  ,தோழர் சந்தீப் பணகுடி )

8.தோழியர் ரேணுகா தபால்காரர் வள்ளியூர் அவர்களின் CONFORMATION உத்தரவு விரைவில் அதற்கான கமிட்டி கூடி வெளியிடப்படும் 

9.PROBATION காலங்கள் முடியாத பட்சத்தில் இடமாறுதல் மறுக்கப்பட்ட தபால்கார்களின் இடமாறுதல் விண்ணப்பங்கள் மண்டல அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது .(தோழியர் பியூலா எமிலி )

10.திருநெல்வேலி தலைமை அஞ்சலத்திற்கு உடனடியாக இரண்டு மானிட்டர் வழங்கப்படும் 

11.பாளையம்கோட்டையில் 6 வது கவுன்டர் தொடர்ந்து செயல்படவேண்டிய அவசியம் மற்றும் கூடுதலாக MPCM கவுண்டர் இந்த தேர்வு கால சீசன் முடியும் வரை இயக்கப்படும் 

12.பாளையம்கோட்டை ATR பதவி விரைவில் நிரப்பிட விண்ணப்பங்கள் கோரப்படும் 

13.சமூகரெங்கபுரம் அலுவலக கட்டட பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது .சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து எந்த கடிதம் வரவில்லை என்றும் 07.07.2021 அன்றுதான் கடிதம் கிடைத்ததாகவும் தெரிவித்தார்கள் 

14.சங்கர்நகர் அஞ்சலத்திற்கு CASH COUNTING  உடனே வழங்கப்படும் .

                      தோழர்களே !நேற்றைய மாதாந்திர பேட்டியில் நமது புதிய SSP அவர்கள் எல்லா பிரச்சினைகள் குறித்தும் முழுமையான இலாகா விதிகளை கோடிட்டுக்காட்டி விவாதித்தார்கள் .மேலும் ஊழியர்கள் அலுவலக பிரச்சினைகள் குறித்து முதலில் கோட்ட நிர்வாகத்திற்கு கடிதங்கள் அனுப்பவும் அதன்பிறகு யூனியன் சப்ஜெக்ட் வைக்கவும் கேட்டுக்கொண்டார்கள் .ஆகவே நமது தோழர்கள் /தோழியர்க்ளுக்கு அலுவலக அல்லது தனிப்பட்ட கடிதங்கள் எழுதிட தங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என நினைத்தால் நிச்சயம் கோட்ட சங்கம் உங்களுக்கு உதவிட மட்டுமின்றி உங்களுக்கு தேவையான கடிதங்களை தயார்செய்து அனுப்பவும் கோட்ட சங்கம் உதவிடும் .அதற்கான தேர்ச்சிபெற்ற தோழர் /தோழியர்கள் உங்களுக்கு உதவிட காத்திருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment