...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, July 20, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                         இன்றைய  செய்திகள் 

*நமது கோட்டத்திற்கு தற்காலிக இடமாறுதலில் வருகைதரும் தோழியர் நிஷா பாத்திமா (QUALIFIED ACCOUNTANT) பொள்ளாச்சி கோட்டம் @ PA முனைஞ்சிப்பட்டி அவர்களை NELLAI -NFPE வாழ்த்திவரவேற்கிறது .

*2019 ஆண்டிற்கான கருணை அடிப்படையிலான பணியில் தபால்காரராக தேர்வுசெய்யப்பட்டுள்ள தோழர் P .மானிக்க பார்த்திபன் விருதுநகர் அவர்களுக்கும் NELLAI -NFPE யின் வாழ்த்துக்கள் 

*நமது SSP அவர்களுடனான மாதாந்திர பேட்டி வருகிற 12.08.2021 அன்று நடைபெறுகிறது .நமது பிரச்சினைகளை வருகிற 06.08.2021 குள் கோட்ட அலுவகத்திற்கு அனுப்பவேண்டும் .நாம் ஏற்கனவே தெரிவித்தபடி கடைசி நேரத்தில் இந்த பிரச்சினையை சேர்த்துக்கொள்ளுங்கள் என்பதை விட இன்றிலிருந்தே பேட்டியில் சேர்த்து விவாதிக்க வேண்டிய பிரச்சினைகளை தெரிவித்தால் சம்பந்தப்பட்ட அலுவலகம் மூலம் கடிதங்கள் எழுதிட கோட்ட சங்கம் உங்களுக்கு வழிகாட்டும் .உதவிகள் செய்திடும் .....

*நமது இயக்கத்தின் தென்பகுதியின் உறுதிமிக்க தோழர் கோபாலன் அவர்களின் மகள் பூப்புனித நீராட்டுவிழா நாளை 21.07.2021 அன்று திருக்குறுங்குடியில் நடைபெறுகிறது .தோழரின் அன்பு புதல்விக்கு NELLAI -NFPE யின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ..

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment