அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
முக்கிய செய்திகள்
*ஜூன் மாதம் ஓய்வுபெற்றவர்களுக்கு நோஷனல் increment வழங்கிட அஞ்சல் வாரியம் 05.07.2021 வழங்கிய உத்தரவினை நமது மாநில CPMG அலுவகமும் 09.07.2021 அன்று அதை உறுதிப்படுத்தி உத்தரவினை பிறப்பித்துள்ளது .இந்த உத்தரவு 30 ஜூன் ஓய்வுபெற்ற அனைவருக்கும் பொருந்துமா ?இல்லை வழக்கம் போல் வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும் பொருந்துமா ?என்பதனை குறித்து விரைவில் தெரியவரும் .
*ஆறாவது ஊதியக்குழுவின் அடிப்படையில் வழங்கப்பட்ட MACP பதவிஉயர்வினை 01.01.2006 முதல் அமுல்ப்படுத்தவேண்டும் என்ற வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை .01.09.2008 க்கு முன்னதாக ACP பதவி உயர்வு முறை இருந்ததாகவும் அதை மாற்றித்தான் 01.09.2008 முதல் MACP என மாற்றப்பட்டது அரசின் கொள்கை முடிவென்றும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாதென்றும் வழக்கை முடித்துவைத்தது உச்சநீதிமன்றம் .
*அஞ்சலங்களில் நடைபெறும் இழப்பு மற்றும் கையாடல் சம்பந்தமான பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிடுவது சம்பந்தமாக புதிய நடைமுறையை (SOP ) அஞ்சல் வாரியம் வெளியிட்டுள்ளது .அதன்படி சேமிப்பு பத்திரங்கள் ,கணக்குகள் .இன்சூரன்ஸ் .மணியார்டர் இவைகளில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் அதற்கான CLAIM விரைந்து முடித்திட அஞ்சல் வாரியம் காலக்கெடுயையும் கொடுத்துள்ளது .அதன்படி பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பணம் கிடைக்கவில்லை என்று தெரியும் பட்சத்தில் அதற்கான படிவத்தில் இரண்டு பிரதிகள் எடுத்து ID மற்றும் ADDRESS PROFF .ஒரிஜினல் PB உடன் கொடுத்திடவேண்டும்( Dept of Posts dtd 27.05.2021)
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment