...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, July 3, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                                     வணக்கம் .முக்கிய செய்திகள் .

         நமது கோட்டத்தில்   புதிய SSP ஆக பொறுப்பேற்றுள்ள திரு .சிவாஜி கணேஷ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம் .இதில் 

1.நமது கோட்டத்தில் PA INDUCTION பயிற்சிகளை ஊழியர்களின் இல்லங்களில் இருந்தே ஆ ன்லைன் வகுப்புகளில் பங்கேற்றிட கேட்டுக்கொண்டோம் .அதற்கு அவர்கள் முந்தைய SSP ஒருவர் போட்ட உத்தரவை உடனே மாற்றுவது சரியான நிலைப்பாடாக இருக்காது .இனி வரும் காலங்களில் இதுகுறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார்கள் .

2.பாளையம்கோட்டையில் புதிதாக நேரடி நியமனத்தில் தபால்காரராக பணியில் சேர்ந்த தோழர் செந்தில் கிருஷ்ணன் அவர்களுக்கு பயிற்சிக்காலத்தில் ஊதியம் வாழங்கப்படாதது குறித்து பேசினோம் .

3.நமது கோட்டத்தில் சுமார் 25 GDS ஊழியர்களுக்கு மேலாக ரெகுலர் உத்தரவுகள் வழங்கப்படாதது குறித்தும் ,இதனால் இடமாறுதல் மற்றும் போனஸ் கிடைக்காமல் போவது குறித்தும் எடுத்துரைத்தோம் ..

மேலும் இதர பிரச்சினைகள் குறித்து ASP (HOS) அவர்களிடம் பேசியவைகள்  

 . 1.அதிக கிளை அஞ்சலகங்களை கொண்ட அதாவது 9 கிளை அஞ்சலகங்களை கொண்ட மானுர் மற்றும் காலியாகவுள்ள அனைத்து LSG பதவிகளை விருப்பமனுக்கள் பெற்று உடனடியாக நிரப்பிடவும் வலியுறுத்தப்பட்டது 

2. LRPA களை வைத்துக்கொண்டே இதர PA களை டெபுடேஷன் அனுப்புவது குறித்து இனி தவிர்க்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது .

3.தோழர் ஹரி ராமகிருஷ்ணன் அவர்களின் RELIEF குறித்தும் பேசப்பட்டது

       மற்ற  பிரச்சினைகள் குறித்து வருகிற 08.07.2021 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்படும் .ஆகவே தோழர்கள் தங்கள் பகுதி பிரச்சினைகளை 03.07.2021 இன்று மாலைக்குள் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் S.K.ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை  

                                  

0 comments:

Post a Comment