...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, November 30, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

இன்று திருநெல்வேலி உபகோட்ட அதிகாரி திருமதி K .சண்முக பிரியா அவர்க்ளின் ஊழியர் நலனுக்கு எதிரான செயல் /மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் இவைகளை கண்டித்து நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டம் வெற்றிபெறட்டும் ...

நாள் 30.11.2021   பாளையம்கோட்டை HO  மாலை 05.45 

மழை வந்தால் என்ன ?மனம் கலங்காதீர் !தவறாது ஆர்பாட்டத்தில் பங்கேற்பீர் !

நேற்று மாலை நமது SSP அவர்களை சந்தித்து நமது ஆர்ப்பாட்டம் குறித்த நோட்டீஸ் மற்றும் அம்மையாரின் நடவடிக்கைகள் குறித்த கடிதம் ஒன்றும் கொடுக்கப்பட்டது .

சுமார் 15நிமிடங்களில் SSP அவர்கள் நம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு ASP அவர்களிடம் இது குறித்து பேசிய சில விஷயங்களை பேசினார்கள் 

*அலுவலக நேரம் முடிந்தும் ஆய்வு என்கின்ற பெயரில் SPM ஊழியர்களை பலமணிநேரம் காக்க வைத்தது குறித்து ...ASPதரப்பில் ஒரு SO வில் ஸ்டாம்ப் 90ரூபாய் TALLYஆகவில்லை அதான் நேரம் ஆகிவிட்து என்றாராம் .இவர் இந்தக்கோட்டத்திற்கு வந்து மூன்று ஆண்டுகள் முடியப்போகிறது .ஆய்வு செய்த அத்தனை அலுவலகங்களிலும் ஊழியர்களை பணிநேரம் முடிந்தபிறகும் SPMதோழர்களை காக்கவைத்திருக்கிறார் அப்படி என்றால் கோளாறு எங்கே ?எல்லா அலுவலகத்திலும் TALLYஆகவில்லையா ? இது அவரது வாடிக்கை என பதில் சொன்னோம் .

*ஆய்வை அந்தந்த் கிளை அஞ்சலகங்களில் மேற்கொள்ளாமல் கிளை அஞ்சலக RECORDS அனைத்தையும் தனது அலுவலகத்திற்கு கொண்டுவரச்சொல்லி ஆய்வு நடத்தியை மறுக்கமுடியாது ஏன் மறைக்கவும் முடியாது 

*ஒவ்வொரு OUTSIDER யும் கட்டாயம் RPLI ரூபாய் 5லட்சம் பாலிசி போடப்பட்டுள்ளது .கொடுமையல்லவா  ?OUTSIDER க்ளின் வறுமையை பயன்படுத்திதான் இலக்கை எட்டியதாக வாழ்த்து பெறவேண்டுமா ?

*சம்பந்தப்பட்ட SPMஊழியர்களுக்கு கூட தெரிவிக்காமல் OUTSIDER ARRANGEMENT யை மாற்றுவதும் யார் யார் கிளை அஞ்சலகங்களில் பணியாற்றுவது என்பது கூட SPMஊழியர்களுக்கு தெரிவிக்காமல் தனி அரசாட்சி நடத்துவதை சகிப்பதா ?

*பணியில் இறந்த ஊழியர்களின் பிள்ளைகளுக்கு தற்காலிக பணி வழங்கக்கூட 5லட்சம் பாலிசி போடச்சொல்லி துன்புறுத்துவது ஏற்புடையது தானா ?

*OFFICIATING பார்க்க வேண்டுமா ?நான் சொல்லும் நூறு கணக்கை பிடி இல்லையென்றால் உனது BOவிற்கு செல் என்பெதெல்லாம் முறையாகுமா ?

*ஊழியர்கள் தங்கள் குறைகளை நிர்வாகிகளிடம் சொன்னால் உடனே அந்த ஊழியரின் மேல் ஏதாவது குற்றம் கண்டுபிடிக்கவேண்டும் அவரை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிவது ஒரு ASPஇக்கு அழகா ?

இதுபோன்று இன்னும் பல்வேறு இம்சைகளை நமது ஊழியர்கள் தாங்கிக்கொண்டு மனதளவில் பொறுமிக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள் .இன்று நாம் ஆர்ப்பாட்டம் என்றவுடன் மனம் திறந்து திருநெல்வேலி உபகோட்ட ஊழியர்கள் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை நம்மிடம் தெரிவிக்கிறார்கள் 

ஆகவே இந்த கொடுமைக்கு முடிவுகட்ட ,அஞ்சல் துறையில் பணியாற்றும் இலாகா ஊழியர்கள் GDS மற்றும் OUTSIDER யாரும் யாருக்கும்  அடிமை அல்ல --இனியும் அடிமை வாழ்வை வாழ நாம் யாரையும் அனுமதிக்கப்போவதில்லை என்பதனை உணர்த்திடுவோம் 

அதேபோல் தபால் காரர் தோழர்களுக்கு ---நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்காமல் யார் விடுப்பு என்றாலும் உடனே COMBINED DUTYஎன்கின்ற வழக்கத்தை உடைத்து மண்டல /கோட்ட நிர்வாக வழிகாட்டுதல் படி OUTSIDER அனுமதிக்கப்படவேண்டும் மேலும் உபகோட்டம் விட்டு உபகோட்டம் விருப்பப்படும் ஊழியர்களை OFFICIATING பார்க்க அனுமதிக்கவேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் பங்கேற்றுடுமாறு மீண்டும் அழைக்கின்றோம் 

போராட்ட வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கன்வீனர் கூட்டு போராட்ட குழு --நெல்லை 

Monday, November 29, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 

நெல்லை கோட்டத்தில் மீண்டும் ஒரு உபகோட்ட அதிகாரியின் ஊழியர் விரோத போக்கு /இலாகா விதிமீறல்/ மற்றும் கண்காணிப்பாளரின் உத்தரவை காலில் போட்டு மிதிக்கும் செயல் தொடர்வது கண்டிக்கத்தக்கது .

*வேலை நேரம் முடிந்தபிறகும் ஆய்வு எனற பெயரில் இரவு 8.30 மணி வரை துணை அஞ்சலக ஊழியர்களை அலுவலகத்தில் இருக்க வைத்த கொடுமை 

*கிளை அஞ்சலகங்களுக்கு செல்லாமலே கிளை அஞ்சலக பதிவேடுகளை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு வரச்சொல்லி ஆய்வு மேற்கொள்ளும் பித்தலாட்டம் 

* சொந்த வாகனத்தில் செல்லாமல் அடுத்தவர் வாகனத்தில் சென்றுகொண்டு மயிலேஜ் விண்ணப்பிக்கும் தவறான செயல் 

*GDS  ஊழியர்களுக்கு OFFICIATING பார்க்கவிடாமல் உப்புசப்பு காரணங்களை சொல்லி கிளை அஞ்சலகங்களுக்கு விரட்டிவிடும் ஆணவ போக்கு 

*OUTSIDER களை கூட பந்தாடும் அதிகார திமிர் 

இதுபோன்ற அத்துமீறல்களை தடுத்து நிறுத்திட  பாதிக்கப்பட்ட  தோழர்களின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்திட அந்தந்த பகுதி ஊழியர்கள் உங்கள் அலுவலகத்தில் நடைபெற்ற இதுபோன்ற முறைகேடுகளை /அத்துமீறல்களை கோட்ட சங்கத்திற்கு அனுப்பிவைக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் 

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Saturday, November 27, 2021

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

                  *சென்றவாரம் ஒரிசா (பூரி)யில் நடைபெற்ற நமது அகில  மத்திய  செயற்குழுவில்  அகில இந்திய .மாநாடு பஞ்சாப் (சண்டிகர்)ல் நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது . .நமது பொதுச்செயலர் மூன்றுமாத கால அவகாசம் கேட்டுள்ளார் .ஆகவே மார்ச் மாதம் மாநாடு நடக்க அதிக வாய்ப்பு உள்ளது 

                                        இனிவரும் நாட்களில் நமது இயக்க மாநாடுகள் 

28.11.2021--சங்கரன்கோவில் அஞ்சல் மூன்று &அஞ்சல் நான்கு இணைந்த மாநாடு 

05.12.2021-- நெல்லை அஞ்சல் நான்கின் கோட்ட மாநாடு 

11.12.2021--சனிக்கிழமை மாலை ராஜாபாளையம் அஞ்சல் மூன்று மாநாடு 

12.12.2021--கன்னியாகுமரி அஞ்சல் மூன்று மாநாடு 

அனைத்து மாநாடுகளும் சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது 

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

அன்பார்ந்த GDS தோழர்களே !

28.11.2021 ஞாயிறு  தேர்விற்கு மதுரைக்கு செல்ல நாம் ஏற்பாடு செய்யப்பட்ட வேன் சரியாக காலை 5 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் இருந்துகிளம்புகிறது ...

பாளையம்கோட்டையில் இருந்து கிளம்புகிறவர்கள் 

1.ஐயப்பன் 2.ஆனந்த பாபு 3.பூபதி 4.பிச்சையா 5.செல்வ லக்ஷ்மணன் 6.ராதிகா 7.சந்தானமாரி 8.செல்வி 9.கிருஷ்ணவேணி 10.மகேஸ்வரி 11.மாடசாமி 12.புஷபவள்ளி 

புதிய பேருந்துநிலையம் --பிக் பஜார் 

13.சிவலிங்கம் 14.முத்துலெட்சுமி 15.சத்யா 16.சிவசங்கரி 17.காந்திமதி 18.செந்தூர்கனி 

வண்ணாரப்பேட்டை -சிவகாமி ஜூவல்லரி முன்பு 

19.கவிதா 

சங்கர்நகர் ---மதுரை பஸ்ஸ்டாண்ட் 

20.சரஸ்வதி

மொத்தம் 22 பேர் செல்லலாம் ...

நன்றி .இதில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அவசியம் தெரிவிக்கவும் 

தேர்வில் வெற்றிபெற அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் 

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் NFPE -P3 கோட்ட செயலர் நெல்லை 

Friday, November 26, 2021

அன்பார்ந்த GDS தோழர்களே !

வருகிற 28.11.2021 அன்று தபால்காரர் தேர்வெழுத தயாராகிக்கொண்டிருக்கும் உங்கள்  அனைவருக்கும் NELLAI -NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் 

VACANCY யை பொறுத்தவரை அறிவிக்கப்பட்ட காலியிடங்கள் = 8 UR -3 SC -2 OBC--2   EWS---1 அதுபோக MTSக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் மற்றும் சீனியாரிட்டி மூலம் தபால்காரர்கள்  செல்லாத இடங்கள் இவைகளெல்லாம் கூடுதல் VACANCY யில் சேரும் .ஆகவே கிட்டத்தட்ட   15 க்கும் குறையாமல் VACANCY வரும் ....ஆகவே தேர்வுக்கு நம்பிக்கையுடன் தயாராகுங்கள் ..வெற்றி நமதே !

தேர்வுக்கு வேன் மூலம் செல்ல இதுவரை சிவலிங்கம் ,ராமராஜா ,சந்தானமாரி ,செல்வ லட்சுமணன் ,பூபதி ,கிருஷ்ணவேணி ,செல்வி சிவசங்கரி ,காந்திமதி ,ஆனந்த பாபு பிச்சையா ,ஐயப்பன் மாடசாமி ,மகேஸ்வரி ,செந்தூர்கனி ,முத்துலட்சுமி ,சீதாலட்சுமி ,புஷ்பவள்ளி சரஸ்வதி ராதிகா  கவிதா சத்யா என22  பேர் பதிவு செய்துள்ளார்கள் ..

வேன் காலை 5 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் இருந்து புறப்படும் ...புதிய பேருந்து வண்ணாரப்பேட்டை வழியாக செல்கிறது .ஆகவே பெயர் கொடுத்தவர்கள் எங்கிருந்து நீங்கள் புறப்பட வசதி என்பதை தெரிவிக்கவும் .

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை அஞ்சல் மூன்று 

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

இந்த ஆண்டிற்க்கான  RULE 38 யின் இடமாறுதல்கள் மாநில நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது .எழுத்தர் பிரிவில் நமது கோட்டத்தில் இருந்து தோழியர்கள் சிவலட்சுமி ACCOUNTANT அம்பை---CHENNAI CITY SOUTH கோட்டத்திற்கு செல்கிறார்கள் . ,ப்ரீத்தா சலோமி PA PLC --COIMBATORE   பபிதா PA அம்பை -தூத்துக்குடி கோட்டத்திற்கும் செல்கிறார்கள் .அதேபோல் CHENNAI CITY SOUTH கோட்டத்தில் இருந்து தோழர் சுரேஷ் பாபு அவர்களும் அரக்கோணம் கோட்டத்தில் இருந்து தோழியர் உமா சங்கர்(தற்சமயம் PA சேரன்மகாதேவி ) அவர்களும் நமது கோட்டத்திற்கு வருகிறார்கள் 

அதேபோல் தபால்காரர் பிரிவில் தோழர் சரவணன் சங்கர்நகர் ,C.குத்தாலிங்கம் காந்திநகர் இருவரும் கோவில்பட்டி கோட்டத்திற்கு செல்கிறார்கள் .தாம்பரம் கோட்டத்தில் இருந்து தோழியர் தாயம்மாள் அவர்களும் செங்கல்பட்டு கோட்டத்தில் இருந்து தோழர் அறிவழகன் ஆகியோரும் நமது கோட்டத்திக்கு வருகிறார்கள் .

அனைவருக்கும் நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் 

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, November 25, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

நமது நெல்லை அஞ்சல் நான்கின் கோட்ட மாநாட்டு பணிகள் உங்களின் ஆதரவோடு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது .மேலும் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் நமது அஞ்சல் நான்கு உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு ஒன்றினை வழங்கவும் ஆலோசித்து வருகிறோம் 

நமது மாநாட்டிற்கு நேற்றைய நன்கொடையாளர்கள் தோழர் S .கனகசபாபதி PRI பாளை ரூபாய் 500 G.சிவராமலிங்கம் MO.பாளை -500 AM .சரவணன் போஸ்ட்மேன் வண்ணாரப்பேட்டை ரூபாய் -500 தோழர் I.ஞான பாலசிங் கோட்டசெயலர் AIGDSU நெல்லை ரூபாய் 500.அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

நன்றி ..தோழமை வாழ்த்துக்களுடன் T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 

 அன்பார்ந்த  GDS சொந்தங்களே ! 

வருகிற 28.11.2021அன்று மதுரையில் நடைபெறும் தபால்காரர் தேர்வுக்கு   நமது கோட்ட தோழர்கள் சென்றுவர வேன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது .

இதுவரை சிவலிங்கம் ,ராமராஜா ,சந்தானமாரி ,செல்வ லட்சுமணன் ,பூபதி ,கிருஷ்ணவேணி ,செல்வி சிவசங்கரி ,காந்திமதி ,ஆனந்த பாபு பிச்சையா ,ஐயப்பன் மாடசாமி ,மகேஸ்வரி ,செந்தூர்கனி ,முத்துலட்சுமி ,சீதாலட்சுமி ,புஷ்பவள்ளி சரஸ்வதி ராதிகா  என20  பேர் பதிவு செய்துள்ளார்கள் .மேலும் வரவிரும்புகிறவர்கள் விரைவில் தங்கள் வருகையை உறுதி படுத்தவும் ..

வேன் சரியாக ஞாயிறு காலை 05.15 முதல் 05.30 மணிக்குள்  பாளை புதிய பேருந்துநிலையம் எதிரே உள்ள ஹோட்டல் உமா சங்கர் முன்பிருந்து புறப்படும் வண்ணார்பேட்டையில் இருந்து ஏறுகிறவர்கள் சிவகாமி .ஜூவல்லரி முன் நிற்கவும் .யார் யார் எங்கிருந்து ஏறுகிறீர்கள்  என்கின்ற விவரத்தை வெள்ளிக்கிழமை மாலை தெரிவிக்கவும் 

வேன் சம்பந்தமாக தொடர்புக்கு SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் NFPE நெல்லை --94421-2341 

Wednesday, November 24, 2021

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

நமது நெல்லை கோட்ட அஞ்சல் நான்கின் செயற்குழு கூட்டம் 23.11.2021அன்று பாளையம்கோட்டையில் கோட்ட தலைவர் தோழர் A .சீனிவாச சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது . ஈராண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கை செயற்குழுவால் ஒப்புதல் பெறப்பட்டது .பிறகு மாநாடு குறித்து தோழர்கள் தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது .

மாநாட்டில் நமது முன்னாள் கோட்ட செயலரும் மாநில உதவி தலைவருமான தோழர் SK .பாட்சா அவர்களுக்கு பணிஓய்வு பாராட்டுவிழா மற்றும் பளுதூக்கும் போட்டியில் ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் G.சிவராமலிங்கம் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது .

மேலும் வருகிற 01.12.2021அன்று நமது உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து நன்கொடை பெறவும் முடிவெடுக்கப்பட்டது .மாநாட்டில் நமது தோழர்களுக்கு 05.12.2021காலை சிற்றுண்டி மற்றும் மதியம் அறுசுவை உணவு வழங்கிடவும் முடிவெடுக்கப்பட்டது .உணவு சம்பந்தமான பொறுப்புகளை தோழர் E.அருண்குமார் தபால் காரர் பாளை அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது .மாநாட்டில் எடுக்கவேண்டிய தீர்மானங்கள் குறித்து 03.12.2021க்குள் கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் முடிவெடுக்கப்பட்டது .தோழர் உதயகுமார் நன்றி தெரிவிக்க செயற்குழு இனிதே முடிவுற்றது .

நேற்றைய மாநாட்டு நன்கொடையாளர்கள் அருண்குமார்-500 கங்காதாரன்- 500 நிஷாகர் -500 மகேஸ்வரன் -500 பகவதி -500 முத்துலட்சுமிபாளை -500 அருணாச்சலம் -500 இசக்கி தச்சநல்லூர் -500 உதயகுமார் -500 

நன்றி மாநாட்டு வாழ்த்துக்களுடன் T.புஷ்பாகரன் கோட்ட செயலர் நெல்லை 

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

                       நவம்பர் 24 ------நமது சம்மேளனம் உதயமான நாள் -

நாடு சுதந்திரத்தின் வாசல் பக்கம் வந்திருந்த சமயம் அதாவது ஆகஸ்ட் 1947 யில் தபால் தந்தி துறையில் உள்ள பல்வேறு சங்கங்கள் ஒன்றுகூடி உருவானதே நமது தாய் இயக்கம் UPTW (UNION OF POST & TELEGRAPH WORKERS ) ..இதன் முதல் அகிலஇந்திய மாநாடு சென்னையில் 1948 மே 24-27வரை நடைபெற்றது .நாடு சுதந்திரம் பெற்றபின் முதல் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுத்த பெருமை நமது சங்கத்திற்கு தான் உண்டு .ஆம் 1949மார்ச் 9 ம் தேதி வேலைநிறுத்தத்தை தொடங்குவதாக அறிவித்தது .நமது தலைவர்கள் OP .குப்தா தாதா கோஷ் ,KG.போஸ் ,மணி போஸ் உள்ளிட்ட தலைவர்கள் இந்திய தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தேசிய சேவைகள் பாதுகாப்பு சட்டம் என்பதின் கீழ் கைதுசெய்யப்பட்டு 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் ..

              ஒரு துறைக்கு ஒரு சங்கம் என்ற அன்றைய மத்திய அமைச்சர் திரு .ஜெகஜீவன் ராம் முன்மொழிந்த வரைவு திட்டத்தின் படி UPTW சங்கம் சம்மேளனம் என வரையறைக்குள் வர முடிவெடுத்தது .குறிப்பாக கீழ்மட்டத்தில் இருந்து பிரதிநிதிகள் (DELEGATES )ஊழியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அகிலஇந்தியஅளவில் கூடி புதிய சங்கத்தையும் சம்மேளனத்தையும் அமைப்பது எனவும் ஒவ்வொரு சங்கமும் சுய நிர்ணய உரிமை (AUTONAMOUS UNION )தனி சட்ட விதிகள் (CONSTITUTION )மற்றும் மத்திய அமைப்பு ,மாநில அமைப்பு ,கோட்டம் ,கிளை அமைப்பு என இயங்கும் என்கின்ற அடிப்படையில் ஒன்பது சங்கங்கள் (P3 P4 R3 R4 T3 T4 E3 E4 மற்றும் நிர்வாகப்பிரிவு )சேர்ந்து தேசிய தபால் ஊழியர் சம்மேளனம் (NFPTE )என்ற பொது ஸ்தாபனத்தை அமைக்க  முடிவெடுக்கப்பட்டது

 .அதன்படி 1954 நவம்பர் 24 ம்தேதி NFPTE சம்மேளனம் உருவாக்கப்பட்டது .இதன் தலைவராக தோழர் VG.டால்வி அவர்களும் தாதாகோஷ் முதல் பொது செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .நமது தமிழகத்தை சார்ந்த தோழர் A.S .ராஜன் அஞ்சல் மூன்றின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டர் .தோழர் A.S .ராஜன் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களைப்போல் சிறந்த ஆங்கிலபுலமை மிக்கவர் என்பது நமக்கு கூடுதல்  பெருமையே .அவரை தொடர்ந்து  நமது தமிழக தலைவர்கள் D.ஞானையா ,A.பிரேம நாதன் ,LA .பிரசாத் ,NJ.அய்யர் தலைவர் NCA போன்ற தலைவர்கள் ஆளுமை செலுத்தினார்கள் .அதேபோல்  அண்ணன் KVS அவர்களும் 2006  முதல் இன்றுவரை அகிலஇந்திய அளவில் ஒரு மாபெரும் சக்தியாக மிளிர்கிறார் என்பதுவும் எவராலும் மறுக்கமுடியாத உண்மை .

இந்த இயக்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் வானவில்லை போல் பல வண்ணங்களை தாங்கி நின்றாலும்  அரசியல் கலப்பற்ற இயக்கமாக தன்னை முன்னிறுத்தியதன் விளைவாக கிட்டத்தட்ட 80 சதம் ஊழியர்கள் நம் NFPTE சம்மேளனத்தை ஏற்றுக்கொண்டு பயணிக்க தொடங்கினார்கள் என்பது உண்மை .

இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகள் சலுகைகள் கடையில் வாங்கிய சரக்கு அல்ல .கருணையால் விண்ணப்பித்து கிடைத்த சலுகையும் அல்ல ..தியாகம் உயிர் பலி ,தண்டனைகள் ,சிறை கொடுமைகள் ,சமபள வெட்டு ,இட மாறுதல்கள் ,பணி நீக்கம் என இழப்புகளுக்கு பின் கிடைத்த பரிசுதான் இன்று நாம் அனுபவிக்கும் சலுகையும் --உரிமையும் ..

1985 டிசம்பரில் தபால் தந்தி துறை இரண்டாக பிரிக்கப்பட்டபின்னணியில் (அஞ்சல் DOP என்றும் தொலை தொடர்பு DOT என்றும் ) நமது NFPTE சம்மேளனமும் அஞ்சல் பகுதியில் NFPE என்றும் தொலைதொடர்பில் NFTE என்றும் பிரிந்து செயல்பட தொடங்கின .

இவ்வாறு அரசியல் சார்பற்ற இயக்கமாக மட்டுமல்ல ,அதிகாரிகளின் தயவாலோ ,அமைச்சர்களின் ஆசியலோ அங்கீகாரம் பெறாமல் அடிமட்ட ஊழியர்களின் அங்கீகாரத்தால் மட்டுமே இன்று நமது இயக்கம் தொடங்கி 67ஆண்டுகள் கடந்தாலும்  அதே துடிப்போடு ,போராட்ட குணம் மாறாமல் பயணிக்கிறது என்பது ஒரு வரலாற்று சாதனைதான் .நாம் ஒவ்வொருவரும்  NFPE பேரியக்கத்தின் உறுப்பினர்கள் என்ற முறையில்  பெருமை கொள்வோம் !வாழ்க NFPTE வெல்க NFPE 

நம்மை ஒடுக்க நினைத்தவர்கள் 

ஒடுங்கி போனார்கள் 

அடக்க நினைத்தவர்க்ளும் 

அடங்கி போனார்கள் 

தடுக்க நினைத்தவர்கள் 

தடு(டம் )மாறி போனார்கள் --இன்று 

முடக்க நினைப்பவர்களும் --நாளை 

முடங்கி தான் போவார்கள் 

என்பது சர்வ நிச்சயம் ...

தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                   

Tuesday, November 23, 2021

 அன்பார்ந்த GDSசொந்தங்களே ! 

வருகிற 28.11.2021அன்று மதுரையில் நடைபெறும் தபால்காரர் தேர்வுக்கு வழக்கம் போல் நமது கோட்ட தோழர்கள் சென்றுவர வேன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது .வரவிரும்புகிறவர்கள் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்துடுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

இதுவரை சிவலிங்கம் ,ராமராஜா ,சந்தானமாரி ,செல்வ லட்சுமணன் ,பூபதி ,கிருஷ்ணவேணி ,செல்வி சிவசங்கரி ,காந்திமதி ,ஆனந்த பாபு பிச்சையா ,ஐயப்பன் மாடசாமி ,மகேஸ்வரி என 14 பேர் பதிவு செய்துள்ளார்கள் .மேலும் வரவிரும்புகிறவர்கள் விரைவில் தங்கள் வருகையை உறுதி படுத்தவும் ..

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடத்தில தேர்வு நடைபெறும் .ஹால் டிக்கெட் அதே ஹால் டிக்கெட் தான் .

வேன் சம்பந்தமாக தொடர்புக்கு SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் NFPE நெல்லை --94421-23416

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

இன்று  23..11.2021  மாலை 6 மணிக்கு பாளை தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் அஞ்சல் நான்கின் கோட்ட செயற்குழு கூட்டத்தில் அஞ்சல் நான்கின் தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் 

*05.12.2021 நமது கோட்ட சங்க மாநாட்டை நடத்துவது குறித்து தங்களது ஆலோசனைகள் அவசியம் தேவை 

*நன்கொடை பிரிக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களையும் நேரடியாக சந்திப்பது தொடர்பாக நமது பயண திட்டங்கள் 

*கோட்ட மாநாட்டில் இயற்றப்படும் கோரிக்கைகளை தயாரிப்பது 

உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுத்திட அனைவரும் பங்கேற்போம் 

தோழமையுடன் T .புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு நெல்லை 


 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

                                                                          முக்கிய செய்திகள்

SB உத்தரவு 37 தேதி 22.11.2021யின் சாராம்சம்-SCSS கணக்குகளில் வரி பிடித்தம் சம்பந்தமாக நாம் ஒவ்வொருவரும் தெரிந்திருக்கவேண்டிய உத்தரவு இது 

*SCSS கணக்கு வைத்திருப்பவர்  ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும் 60வயதிற்கு கீழ்உள்ளோர்  15Gபடிவமும்  60வயதிற்கு மேல் உள்ளோர்  15H படிவமும் கொடுக்க வேண்டும் 

* இதை CBS அலுவலகம் CIF மற்றும் கணக்கில் seed செய்ய வேண்டும் .

*அவ்வாறு CIF யில் UPDATE செய்யும் பொழுது VALID PAN பதியவேண்டும் 

*CIF லெவலில் .NOTAX என்பதற்கு பதிலாக  TDSNR /TDSNS என்றிருக்கவேண்டும் .

*15G/15H கொடுத்திருந்தால்  மட்டுமே வரி விலக்கு வரும் 

*NOTAX /TDSNR என்பது கணக்குதாரர் 60வயதை கடக்கும் பொழுது தானாகவே TDSNS என மாறிவிடும் 

*15G/15H படிவத்தை கணக்கு தொடங்கும்போதே கொடுத்து அதை CSCAM யில் VERIFY செய்திடவேண்டும் 

* முதல்கணக்குதாரர்   60 வயது குறைவானவர்களுக்கு ரூபாய் 40000 க்கு மேல் நிதியாண்டில் வட்டி வந்தால் அவர்களுக்கு வரி பிடிக்கப்படும் 15G  படிவம் கொடுத்தால் TDSNR NOTAX ஆகிவிடும் . அவர்கள் 15G படிவம் கொடுக்காவிட்டால் 10சதம் வரி அவர்கள் PAN கார்டு கொடுக்கவில்லை என்றாலோ அல்லது கொடுத்த PAN INVALID என்றாலோ 20சதம் வரி பிடிக்கப்படும் 

*முதல்கணக்குதாரர்   60 வயதினை தாண்டியிருந்தால்  ரூபாய் 50000 க்கு மேல் நிதியாண்டில் வட்டி வந்தால் அவர்களுக்கு வரி பிடிக்கப்படும் 15 H படிவம் கொடுத்தால் TDSNS -NOTAX ஆகிவிடும் .அவர்கள் 15H படிவம் கொடுக்காவிட்டால் 10சதம் வரி அவர்கள் PAN கார்டு கொடுக்கவில்லை என்றாலோ அல்லது கொடுத்த PAN INVALID என்றாலோ 20சதம் வரி பிடிக்கப்படும் 

*ஆகவே இனி NON-CBS மற்றும்  CBS அலுவலகங்களில் 15G/15H கொடுப்பதும் சரியான PAN எண்ணை சரிபார்த்து UPDATE செய்வதும் முக்கியமான பணி ஆகும் .சேமிப்பு பிரிவுகளில் பணியாற்றும் எழுத்தர்கள் /SPMமற்றும் SUPERVISOR தோழர்கள் இதில் முழுக்கவனம் செலுத்தி பணியாற்றிடவேண்டும் 



Thursday, November 18, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 

                                               முக்கிய செய்திகள் --

குரூப் C ,குரூப் B (NON -GAZATEED )மற்றும் ASP கேடர்களுக்கு விதி 38 யின் கீழ் இடமாறுதல் வழங்குவதில் பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல் உத்தரவு 17.11.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது .அதன்படி 

1.விதி 38யின் கீழ் இடமாறுதல் பெற ஒரு ஆண்டு சேவை முடித்திருந்தால் போதுமானது .அதிலும் கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்கள் ,மாற்று திறனாளிகள் மற்றும் கடைசிகட்ட நோய் தருவாயில் உள்ள குடும்பஉறுப்பினர்கள் இருந்தால் ஒரு வருட சேவை என்பதும் பொருந்தாது .

2.இடமாறுதல் என்பது அந்த கோட்டத்தில் 66.66 சதத்திற்கு மேல்அந்த கேடரில்  பற்றாக்குறை இல்லை என்றால் இடமாறுதலை மறுக்கக்கூடாது 

3.மாநிலங்களுக்கிடையே மற்றும் மாநிலங்களுக்குக்குள் ஒரு ஊழியர் தனது சேவைக்காலத்தில் இரண்டு முறை இடமாறுதல் பெறலாம் .அதே கேடரில் அடுத்த இடமாறுதலுக்கு இடையே குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் இருக்கவேண்டும் .அதில் மாநிலக்களுக்கிடையே இடமாறுதல் பெற்றவர்கள் அந்த மாநிலங்களுக்குள் இடமாறுதல் பெற மூன்று ஆண்டுகள் இடைவெளி தேவை என்பது கிடையாது 

4.GPO மற்றும் தனி யூனிட் கிளாஸ்- 1 அலுவகங்களில் பணியாற்றும் எழுத்தர்களுக்கு அந்த யூனிட் அமைந்திருக்கும் இடத்தில உள்ள அஞ்சல் கோட்டங்களுக்கு சுழல் மாறுதலில் சேர்த்து இடமாறுதல் கொடுக்கவேண்டும்(மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுக்கு மிகாமல்  )..அவ்வாறு இந்த யூனிட் யில் இருந்து செல்லும் ஊழியர்க்ளுக்கு பதிலாக அந்த அஞ்சல் கோட்டங்களில் உள்ள ஊழியர்களை இந்த யூனிட் அலுவலகங்களுக்கு இடமாறுதல் கொடுக்கலாம் 

5.MTSயை பொறுத்தவரையில் 16.11.2021உத்தரவு படி MTS ஊழியர்கள் இனி RMS--MMS--CO /RO போன்ற இடங்களுக்கும் இடமாறுதல் பெறலாம் 

6.GDS ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையில் ஒன்றான செக்யூரிட்டி பாண்ட் குறித்து 17.11.2021தேதியிட்ட உத்தரவு படி 

*இனி புதிதாக பணிக்கு சேரும் GDSஊழியர்க்ளுக்கு செக்யூரிட்டி பாண்ட்இக்கான பணம் பிடித்திட தேவையில்லை 

*    பணியில்  உள்ள ஊழியர்களுக்கு ஏற்கனவே நடப்பில் உள்ள செக்யூரிட்டி பாண்ட்காலம் முடிந்தபின் அதை புதுப்பிக்கவேண்டியதில்லை 

*விஜிலென்ஸ் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு செக்யூரிட்டி பாண்ட்VALID ஆக இருக்கும்பொழுதே RECOVERYசெய்திடவேண்டும் 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, November 17, 2021

 அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் --தபால்காரர் மற்றும் MTS

திருநெல்வேலி கோட்டம் --திருநெல்வேலி 627002

                               கோட்ட சங்க செயற்குழு 

நாள் --23.11.2021  செவ்வாய் கிழமை மாலை 6 மணி

இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 

தலைமை --தோழர் A.சீனிவாச சொக்கலிங்கம் கோட்ட தலைவர் 

பொருள் --1.ஈராண்டறிக்கை சமர்ப்பித்தலும் --ஒப்புதலும்

                     2.தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கை                                                          சமர்ப்பித்தலும் -- ஒப்புதலும்  

                    3.மாநாடு சம்பந்தமான ஏனைய ஏற்பாடுகள் 

                   4. இன்னும் பிற தலைவர் அனுமதியுடன் 

மாநாட்டு நன்கொடை ரூபாய் 500 கொடுக்கிறவர்கள் நேரிலும் அல்லது நமது POSB கணக்கு 4783768287 கில் செலுத்திவிட்டு தகவல் தெரிவிக்கவும் .நேற்றைய நன்கொடை T.புஷ்பாகரன் --500 K.இசக்கியம்மாள் பாளை 500 N.வெங்கடாச்சலம் பாளை 500.ஏற்கனவே POSB யில் செலுத்திய சங்கர்நகர் தோழர்கள் இருவருக்கும் நேற்று தபாலில் ரசீது அனுப்பப்பட்டுள்ளது .நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் T.புஷ்பாகரன் கோட்ட செயலர் நெல்லை 


அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

வணக்கம் .நாம் ஏற்கனவே அறிவித்தபடி இந்த மாத மாதாந்திர பேட்டியில் கலந்துகொள்ள இரண்டு புதிய தோழர்களை அழைத்துள்ளோம் .அஞ்சல் மூன்றின் சார்பாக தோழர்கள் SK .ஜேக்கப் ராஜ் A .நியூட்டன் PA வள்ளியூர் P .சுப்ரமணியன் அம்பை ஆகியோர்களும் அஞ்சல் நான்கின் சார்பாக தோழர்கள் T .புஷ்பாகரன் ,S .மோகன் கலெக்ட்ரேட் மற்றும் V.தங்கராஜ் அம்பை கிளை ஆகியோர்களும் கலந்துகொள்கிறார்கள் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T .புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


Tuesday, November 16, 2021

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

நமது அஞ்சல் மூன்று மத்திய சங்கத்தின் செயற்குழு வருகிற 21.11.2021அன்று ஒடிசா மாநிலம் பூரி புனித நகரில் நடைபெறுகிறது .நமது அகில இந்திய மாநாடு குறித்து அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது .

*கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நமது மாநில சங்கத்தின் மூலம் காலண்டர் வெளிடப்படுகிறது .நமது தோழர்கள் பணியாற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களிலும் இந்த காலண்டர்  விநியோகிக்கப்படும் ..

*இந்த மாதத்திற்கான மாதாந்திர பேட்டியில் விவாதிக்கவேண்டிய பிரச்சினைகள் இருப்பின் இன்று மதியத்திற்குள் அனுப்பிவைக்கவும் .

*LSG  பதவி உயர்வை ஏற்க மறுப்பவர்கள் மற்றும் RE ALLOTEMNT கேட்கிறவர்கள் விரைந்து தங்கள் கடிதங்களை அனுப்பிடுமாறு மீண்டும் நினைவூட்டுகிறோம் 

*  05.12.2021 அன்று நடைபெரும் நமது அஞ்சல் நான்கின் மாநாட்டிற்குஇதுவரை நண்கொடை கொடுத்தவர்கள் தோழர். முருகேசன் பாளை ரூபாய் 500  2.பெருமாள் மெயில் ஓவர்சியர் பாளை 500  3.தோழர் மோகன் collectrate மூலம் வரவு ரூபாய் 2000  4.தோழர் சரவணன் sankarnagar 500  5.தோழியர் கிருஷ்ணவேணி சங்கர்நகர்  ரூபாய் 500

நன்கொடை அனுப்பிக்கிறார்கள் POSB  4783768287  (புஷ்பாகரன் &இசக்கி )கணக்கில் செலுத்திவிட்டு தகவல் தெரிவிக்கவும் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை தேதி  16.11.2021 







Friday, November 12, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

NELLAI --NFPE தொழிற்சங்க வரலாற்றில் மற்றுமொரு சாதனை மகுடம் ---தோழர் வெண்ணிக்குமார் SPM வடக்கன்குளம் அவர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கிட உத்தரவு 

நமது கோட்டத்தில் 1992 முதல் 1997 வரை EDDA ஆக கோலியன்குளம் கிளை அஞ்சலகத்தில் பணியாற்றி 1997 யில் APS க்கு டெபுடேஷன் சென்றுவிட்டு 2017 யில் மீண்டும் PA ஆக   நெல்லைக்கு வந்தபின்னும் அவருக்கு புதிய பென்ஷன் பிடித்தம் செய்யப்பட்டிருந்தது .இதுகுறித்து 2018யில் தோழர் வெண்ணிக்குமார் அவர்கள் நமது கோட்ட சங்கத்தை அனுகியவுடன் அந்த மாத மாதாந்திர பேட்டியில் பிரச்சினை எடுக்கப்பட்டு நமது கோட்ட நிர்வாகம் மூலம் இயக்குனரகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது .அவர் 1997 யில் TECNICAL பதிவுயர்வு GROUD -D  ஆக பெற்றிருந்தாலும் 2005யில் தான் தபால்காரராக தேர்ச்சிபெற்றார் ஆகவே அவர் புதிய பென்ஷன் திட்டத்தில் தான் சேருவர் என பதில் வந்தது .ஆனால் இன்று தோழர்  வெண்ணிக்குமார் அவர்களுக்கு பழைய பென்ஷன் உண்டு என நல்லதொரு செய்தி கிடைத்துள்ளது இது அவருக்கு மட்டுமல்ல அவருடன் தேர்வான தமிழக APSதோழர்கள் 36பேர் பயன்பெறுகிறார்கள் ..

தொழிற்சங்கம் என்பது தலையாட்டும் பொம்மையல்ல ..நிர்வாகம் தருகின்ற பதில்களை கேட்டு தலையாட்டி கொண்டு செல்வதற்கு ..தொழிற்சங்கம் தோழர்களின் குறை தீர்க்கும் பேரமைப்பாகும் ..அதிலும் NFPE என்பது இதுபோன்ற தத்தளித்துகொண்டிருக்கும் தனிப்பட்ட ஊழியர்களின் கோரிக்கைகளையும் கடைசிவரை தயங்காமல் தளராமல் வாதாடி போராடி பெற்றுத்தரும் பேரியக்கம் என்பதை நினைவில் கொள்வோம் ...ஆம் நாம் NFPE உறுப்பினர் என்பதில் பெருமை கொள்வோம் பெருமிதம் அடைவோம் .

தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, November 9, 2021

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

 நெல்லைக்கு வருகை தரும் நமது தென்மண்டல இயக்குனர் உயர்திரு ரவீந்திரன் IPS   அவர்களை NELLAI -NFPE  சார்பாக வாழ்த்தி    வரவேற்கிறோம்  ...

                          தான் பணிசெய்த அத்தனை இடங்களிலும் மிக சீரிய பணியாற்றியவர் ..குறிப்பாக ஊழியர் நலன் பேணுபவர் ...நேர்மையான அதிகாரிகளின் வரிசையில் முக்கிய இடம் பிடித்தவர் ..பழகுவதில் இனியவர் --பண்பாளர் --தன்னால் தனது அதிகாரவரம்பிற்குள் செய்யமுடிகின்ற காரியங்களை விரைந்து செய்து முடிக்கக்கூடியவர் என அவருடன் பழகிய பணியற்றிய நமது மூத்த தோழர்கள் தெரிவித்த கருத்துக்கள் தான் இவைகள் ...தென்மண்டலம் மீண்டும் ஒரு மனிதாபிமானமுள்ள PMG அவர்களை மட்டுமல்ல மற்றுமொரு இயக்குனர் அவர்களையும் பெற்றிருப்பது நமக்கு மகிழ்ச்சியே ! தொடரட்டும் தங்கள் சேவை !வாழ்த்தி வரவேற்கிறோம்..

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

NFPE

ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                

               TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.P3-ORG dated at Palayankottai- 627002 the 09.11.2021

To

The Director Of Postal Services

Southern Region (TN)

Madurai-625002 - On Camp at : Tirunelveli

Respected Sir,

               Warm Greetings. We take this as an auspicious opportunity to  welcome you Sir , and ofcourse we are much delighted to  meet you and have a healthy discussion.

                 We would like to bring the following issues for your gentle notice . Since these cases are pending over a long time,  we had brought them to your benign notice,  inorder to obtain earliest solutions .

                 1. After a long and consistent struggle by this Union , we got an approval for the supply of 65 KVA Genset for Palayankottai HO. The cost of Genset along with its installation costs were also get sanctioned.  AE, Electricals  had visited the venue and took preliminary activities for installation quite two months back itself. But it is disgusting to disclose that further steps towards  installation has not yet been initiated . In this rainy season,  we are facing frequent power cuts resulting in poor power backups which subsequently disturbs counter operations. Hence your kind intervention is solicited in this regard for hastening the installation process.( Discussed in monthly meeting with SSPOs on 08.07.21)

                   2. The Tirunelveli  HO is functioning two blocks and in one  amongst them , there is no toilet facilities for lady faculties in the ground floor . So they have to rush up either to the first floor of that block or to the other block. Nowadays it  has become a quite common scenario that ladies strength is more in all our Post Offices and in such a situation,  it is highly essential  to facilitate them atleast with such basic infrastructure..( Discussed in monthly meeting with SSPOs on 25.08.21)

                       3. As the prices of petrol and diesel has hit the century, the petrol allowance for the delivery staff at NDC, Palayankottai may be raised from Rs.100 to Rs.150 per day as it is undoubtable that the average distance traversed by them per day is around 60to 80 km

                    Thanking you with keen regards.                         Yours faithfully

[S.K.JACOBRAJ]


Monday, November 8, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் .

மருத்துவ சான்றிதழ் கொடுத்து விடுப்பு எடுக்கின்ற ஊழியர்களுக்கு கோட்ட நிர்வாகம் அரசு மருத்துவரிடம் தான் மருத்துவ சான்றிதழ் பெறவேண்டும் என நிர்பந்தித்து வருவதாகவும் அவ்வாறு மருத்துவ சான்றிதழ் பெறாத ஊழியர்களிடம் அரசு மருத்துவரிடம் மருத்துவ சான்றிதழ் பெற்றதால் தான் மருத்துவவிடுப்பு வழங்கப்படும் என்கின்ற கோட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கைகளை குறித்து நமது கோட்ட சங்கம் எழுதியுள்ள கடிதம் 

        NFPE

ALL INDIA POSTAL EMPLOYEES UNION

TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.P3 –org   / dated at Tirunelveli - 627002 the  08.11..2021 

To

The Sr. Supdt. of Post Offices,

Tirunelveli Division

Tirunelveli-627002

Sir,

     Sub: Grant of leave on medical certificate - Indifferent action of D.O - reg.

It is brought to the notice of this union that the leave request submitted by the officials on medical certificate are turned down with an oral instruction to produce MC from a Govt.Doctor.

This union felt that it is not a fair dealings on the part of the administration by giving oral instruction. It is the privilege of the D.O to reject the leave on medical certificate by citing the violation of rules, if any.

In this connection, we wish to bring the content of Rule 19(1)(ii) of CCS (Leave) Rules, 1972 and the 'NOTE' below that, a non-gazetted Govt. Servant can produce medical certificate from CGHS Dispensary or Govt. Hospital or an AMA or Authorised Doctor of Private Hospital or RMP. Further, as per the 'Note' below the ibid rule, a non-gazetted Govt Servant can also produce MC from a registered ayurvedic, unani or homeopathic medical practitioner or a Dentist or an honorary medical officer.

Hence, the action of the D.O is arbitrary and without support of any rules or instructions and it is requested to issue suitable instructions to all concerned to avoid harassment of staff in this regard.

                                                          Thanking you Sir

                                                                                                                        Yours faithfully

                                                                                                            /S.K.JACOB RAJ/

 


Saturday, November 6, 2021

அன்பார்ந்த  தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் .

அஞ்சல் சேமிப்பு பிரிவில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு அன்றாடம் நடைமுறை ரீதியாக ஏற்படுகின்ற சந்தேகங்களை தீர்க்கின்ற வகையில் கீழ்கண்ட இரண்டு POSB உத்தரவுகள் 34/2021& 3/2021மூலம் விளக்கங்கள் வந்துள்ளன .அதன் முக்கிய அம்சங்களை உங்கள் பார்வைக்கு தருகிறோம் 

*POSB உத்தரவு 34/2021--யின் படி அஞ்சலக முகவர்களுக்கு தனியாக நமது வேலை  நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி முகவர்க்ளுக்கான பரிவர்த்தனையை அந்தந்த அலுவலக வசதிப்படி போஸ்ட்மாஸ்டர் அனுமதிக்கவேண்டும் .

இருந்தாலும் குறிப்பிட்ட அந்த வேலைநேரம் முடிந்துவிட்டது என்பதனை  காரணம் காட்டி முகவர்களின் பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கக் கூடாது .மேலும் முகவர்களும் அஞ்சலக ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் எனவும் அவர்களுக்கான ஒதுக்கப்பட்ட நேரத்தில் முகவர்களை வாடிக்கையாளர்கள் இருக்கின்ற   பகுதிவரை அனுமதிக்கவும் முகவர்களை மரியாதையோடும் நடத்திடவும் இந்த விளக்க ஆணை கூறுகிறது .

POSB உத்தரவு 35/2021

* FPB   யை பொறுத்தவரை கனக்கு இருக்கின்ற அலுவலகத்தில் தான்  கொடுக்கவேண்டும் என்றில்லாமல் இனி எல்லா CBS அலுவலகங்களிலும்  FPB வழங்கலாம்  

*.எழுதப்படிக்க தெரியாதவர்கள்  மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இரண்டு அல்லது மூன்று பேரும் சேர்ந்து கூட்டு கணக்கு தொடங்கலாம் .அதே போல எழுதப்படிக்க தெரியாதவர்கள் மற்றவர்களோடு இணைந்தும் கூட்டு கணக்கு தொடங்கலாம் என விளக்கப்பட்டுள்ளது 

* அவ்வாறு எழுதப்படிக்க தெரியாதவர்கள் மற்றவர்களோடு இணைந்தும் கூட்டு கணக்கு CHEQUE வசதியுடன் தொடங்கவும் அதில் JOINT-B கணக்கில் முதல் கணக்கு தாரருக்கு CHEQUE வழங்கலாம் 

*0 கையிருப்பில் BASIC கனக்குதொடங்கிட அந்த நபருக்கு ஏற்கனவே சேமிப்பு கணக்குதனியாக இருந்தாலும் தொடங்கலாம் 

*கிளை அஞ்சலகங்களில் வரவு செலவு வைத்திட ரூபாய் 50000 என டெபாசிட்க்கு நிர்ணயம் செய்யபட்டிருந்தாலும் ADJUSTMENT யை பொறுத்தவரை  50000 என்கின்ற வரையறை கிடையாது 

*புதிய கணக்குதொடங்கிட கணக்குதாரர் கட்டாயம் அஞ்சலகத்திற்கு வரவேண்டும்என்பதில் மாற்றம் இல்லை .நமது ஊழியர்கள் கேன்வாஸ் செய்து பிடித்துத்தருகின்ற கணக்குகளுக்கு கணக்குதாரர்கள் வரவேண்டிய அவசியம் இல்லை .அதேபோல் முகவர்கள் மூலம் தொடங்கப்படுகிற கணக்கிற்கும் கணக்குதாரர்கள்வரவேண்டிய அவசியம் இல்லை 

*MINOR கணக்குகளுக்கு நியமிக்கப்படும் பாதுகாவலரை எந்த சூழ்நிலையிலும் மாற்றக்கூடாது .ஒன்று GURDIAN இறந்துபோனாலோ அல்லது நீதிமன்ற ஆணை இருந்தால் மட்டுமே பாதுகாவலரை மாற்றிடமுடியும் 

*தனி கணக்கினை கூட்டுக்கணக்காகமாற்றிட முடியாது .கூட்டு கணக்கிலும் ஒருவரை மாற்றமுடியாது .வேறு ஒருவரை சேர்க்கமுடியாது .முதல் நபர் மற்றும் இரண்டாம் நபர் என்ற வரிசையையும் மாற்றிடமுடியாது 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, November 5, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

LSG  பதவியுயர்வு அதனை தொடர்ந்து பரிசீலிக்கப்பட்ட GENERAL TRANSFER யில் நமது தோழர்கள் தியாகராஜபாண்டியன் (கடையம்0 தோழர் கந்தசாமி (சேரன்மகாதேவி0 மற்றும் தோழர் ரகுமாதவன் (கீழநத்தம் )என ஐந்தில் மூன்று தோழர்களுக்கு இடமாறுதல் கிடைத்துள்ளது மகிழ்ச்சியே .ஆனாலும் LSG PA மேலப்பாளையம் பதவிக்கு கோட்ட நிர்வாகம் எடுத்திட்ட நிலைகுறித்து நமது தோழர்கள் தங்களின் அதிருப்தியை உத்தரவு வந்த நாள் அன்றே தொலைபேசியில் என்னிடம் தெரிவித்துக்கொண்டார்கள் .இப்படி நகரப்பகுதியில் வருகின்ற காலியிடங்கள் எல்லாம் சீனியர் என்கின்ற முறையில் தொடர்ந்து ஒருசிலரே பெற்றுக்கொண்டால் LSG பதவி உயர்வில் வெளியிடஙக்ளுக்கு சென்ற எங்களால் எப்பொழுது தான் நகர் பகுதிக்கு இடமாறுதல் பெற முடியும் என ஆதங்கப்பட்டு கேட்டார்கள்  .தோழர்களின் நியாமான கேள்விகளின் அடிப்படையில் இன்று நமது SSP அவர்களை சந்தித்து முறையிடவுள்ளோம் .நேற்றே இதுகுறித்து நமது மண்டலச்செயலர் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடமும் பேசியிருக்கிறோம் .இடமாறுதலை பொறுத்தவரை யாருக்கும் கொடுக்கவேண்டாம் என்பது நமது நிலைப்பாடல்ல !அதேநேரம் ஒரு இடத்திற்கு பழைய விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கும் பொழுது அதையும் மீறி நிர்வாகம் எடுக்கின்ற முடிவுகளை நம்மால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை ...அதுமட்டுமல்லாமல் இந்த LSG உத்தரவுகளினால் ஏற்பட்ட காலியிடங்களை குறிப்பாக முனைஞ்சிப்பட்டி போன்ற அலுவலகங்களுக்கு நமது மூத்த LSG ஊழியர்களின் மனுக்களை பரிசீலிக்காமல் இருப்பது ஏன் ? நிர்வாகம் அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு ..இன்று மாலை SSP அவர்களின் சந்திப்பிற்கு பின் உங்களை மீண்டும் சந்திக்கின்றேன் .நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை