அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் .
அஞ்சல் சேமிப்பு பிரிவில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு அன்றாடம் நடைமுறை ரீதியாக ஏற்படுகின்ற சந்தேகங்களை தீர்க்கின்ற வகையில் கீழ்கண்ட இரண்டு POSB உத்தரவுகள் 34/2021& 3/2021மூலம் விளக்கங்கள் வந்துள்ளன .அதன் முக்கிய அம்சங்களை உங்கள் பார்வைக்கு தருகிறோம்
*POSB உத்தரவு 34/2021--யின் படி அஞ்சலக முகவர்களுக்கு தனியாக நமது வேலை நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி முகவர்க்ளுக்கான பரிவர்த்தனையை அந்தந்த அலுவலக வசதிப்படி போஸ்ட்மாஸ்டர் அனுமதிக்கவேண்டும் .
இருந்தாலும் குறிப்பிட்ட அந்த வேலைநேரம் முடிந்துவிட்டது என்பதனை காரணம் காட்டி முகவர்களின் பரிவர்த்தனையை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கக் கூடாது .மேலும் முகவர்களும் அஞ்சலக ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் எனவும் அவர்களுக்கான ஒதுக்கப்பட்ட நேரத்தில் முகவர்களை வாடிக்கையாளர்கள் இருக்கின்ற பகுதிவரை அனுமதிக்கவும் முகவர்களை மரியாதையோடும் நடத்திடவும் இந்த விளக்க ஆணை கூறுகிறது .
POSB உத்தரவு 35/2021
* FPB யை பொறுத்தவரை கனக்கு இருக்கின்ற அலுவலகத்தில் தான் கொடுக்கவேண்டும் என்றில்லாமல் இனி எல்லா CBS அலுவலகங்களிலும் FPB வழங்கலாம்
*.எழுதப்படிக்க தெரியாதவர்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இரண்டு அல்லது மூன்று பேரும் சேர்ந்து கூட்டு கணக்கு தொடங்கலாம் .அதே போல எழுதப்படிக்க தெரியாதவர்கள் மற்றவர்களோடு இணைந்தும் கூட்டு கணக்கு தொடங்கலாம் என விளக்கப்பட்டுள்ளது
* அவ்வாறு எழுதப்படிக்க தெரியாதவர்கள் மற்றவர்களோடு இணைந்தும் கூட்டு கணக்கு CHEQUE வசதியுடன் தொடங்கவும் அதில் JOINT-B கணக்கில் முதல் கணக்கு தாரருக்கு CHEQUE வழங்கலாம்
*0 கையிருப்பில் BASIC கனக்குதொடங்கிட அந்த நபருக்கு ஏற்கனவே சேமிப்பு கணக்குதனியாக இருந்தாலும் தொடங்கலாம்
*கிளை அஞ்சலகங்களில் வரவு செலவு வைத்திட ரூபாய் 50000 என டெபாசிட்க்கு நிர்ணயம் செய்யபட்டிருந்தாலும் ADJUSTMENT யை பொறுத்தவரை 50000 என்கின்ற வரையறை கிடையாது
*புதிய கணக்குதொடங்கிட கணக்குதாரர் கட்டாயம் அஞ்சலகத்திற்கு வரவேண்டும்என்பதில் மாற்றம் இல்லை .நமது ஊழியர்கள் கேன்வாஸ் செய்து பிடித்துத்தருகின்ற கணக்குகளுக்கு கணக்குதாரர்கள் வரவேண்டிய அவசியம் இல்லை .அதேபோல் முகவர்கள் மூலம் தொடங்கப்படுகிற கணக்கிற்கும் கணக்குதாரர்கள்வரவேண்டிய அவசியம் இல்லை
*MINOR கணக்குகளுக்கு நியமிக்கப்படும் பாதுகாவலரை எந்த சூழ்நிலையிலும் மாற்றக்கூடாது .ஒன்று GURDIAN இறந்துபோனாலோ அல்லது நீதிமன்ற ஆணை இருந்தால் மட்டுமே பாதுகாவலரை மாற்றிடமுடியும்
*தனி கணக்கினை கூட்டுக்கணக்காகமாற்றிட முடியாது .கூட்டு கணக்கிலும் ஒருவரை மாற்றமுடியாது .வேறு ஒருவரை சேர்க்கமுடியாது .முதல் நபர் மற்றும் இரண்டாம் நபர் என்ற வரிசையையும் மாற்றிடமுடியாது
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment