அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
முக்கிய செய்திகள் --
குரூப் C ,குரூப் B (NON -GAZATEED )மற்றும் ASP கேடர்களுக்கு விதி 38 யின் கீழ் இடமாறுதல் வழங்குவதில் பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல் உத்தரவு 17.11.2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது .அதன்படி
1.விதி 38யின் கீழ் இடமாறுதல் பெற ஒரு ஆண்டு சேவை முடித்திருந்தால் போதுமானது .அதிலும் கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்கள் ,மாற்று திறனாளிகள் மற்றும் கடைசிகட்ட நோய் தருவாயில் உள்ள குடும்பஉறுப்பினர்கள் இருந்தால் ஒரு வருட சேவை என்பதும் பொருந்தாது .
2.இடமாறுதல் என்பது அந்த கோட்டத்தில் 66.66 சதத்திற்கு மேல்அந்த கேடரில் பற்றாக்குறை இல்லை என்றால் இடமாறுதலை மறுக்கக்கூடாது
3.மாநிலங்களுக்கிடையே மற்றும் மாநிலங்களுக்குக்குள் ஒரு ஊழியர் தனது சேவைக்காலத்தில் இரண்டு முறை இடமாறுதல் பெறலாம் .அதே கேடரில் அடுத்த இடமாறுதலுக்கு இடையே குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் இருக்கவேண்டும் .அதில் மாநிலக்களுக்கிடையே இடமாறுதல் பெற்றவர்கள் அந்த மாநிலங்களுக்குள் இடமாறுதல் பெற மூன்று ஆண்டுகள் இடைவெளி தேவை என்பது கிடையாது
4.GPO மற்றும் தனி யூனிட் கிளாஸ்- 1 அலுவகங்களில் பணியாற்றும் எழுத்தர்களுக்கு அந்த யூனிட் அமைந்திருக்கும் இடத்தில உள்ள அஞ்சல் கோட்டங்களுக்கு சுழல் மாறுதலில் சேர்த்து இடமாறுதல் கொடுக்கவேண்டும்(மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுக்கு மிகாமல் )..அவ்வாறு இந்த யூனிட் யில் இருந்து செல்லும் ஊழியர்க்ளுக்கு பதிலாக அந்த அஞ்சல் கோட்டங்களில் உள்ள ஊழியர்களை இந்த யூனிட் அலுவலகங்களுக்கு இடமாறுதல் கொடுக்கலாம்
5.MTSயை பொறுத்தவரையில் 16.11.2021உத்தரவு படி MTS ஊழியர்கள் இனி RMS--MMS--CO /RO போன்ற இடங்களுக்கும் இடமாறுதல் பெறலாம்
6.GDS ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையில் ஒன்றான செக்யூரிட்டி பாண்ட் குறித்து 17.11.2021தேதியிட்ட உத்தரவு படி
*இனி புதிதாக பணிக்கு சேரும் GDSஊழியர்க்ளுக்கு செக்யூரிட்டி பாண்ட்இக்கான பணம் பிடித்திட தேவையில்லை
* பணியில் உள்ள ஊழியர்களுக்கு ஏற்கனவே நடப்பில் உள்ள செக்யூரிட்டி பாண்ட்காலம் முடிந்தபின் அதை புதுப்பிக்கவேண்டியதில்லை
*விஜிலென்ஸ் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு செக்யூரிட்டி பாண்ட்VALID ஆக இருக்கும்பொழுதே RECOVERYசெய்திடவேண்டும்
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment