அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
நமது நெல்லை கோட்ட அஞ்சல் நான்கின் செயற்குழு கூட்டம் 23.11.2021அன்று பாளையம்கோட்டையில் கோட்ட தலைவர் தோழர் A .சீனிவாச சொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது . ஈராண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கை செயற்குழுவால் ஒப்புதல் பெறப்பட்டது .பிறகு மாநாடு குறித்து தோழர்கள் தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
மாநாட்டில் நமது முன்னாள் கோட்ட செயலரும் மாநில உதவி தலைவருமான தோழர் SK .பாட்சா அவர்களுக்கு பணிஓய்வு பாராட்டுவிழா மற்றும் பளுதூக்கும் போட்டியில் ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் G.சிவராமலிங்கம் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது .
மேலும் வருகிற 01.12.2021அன்று நமது உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து நன்கொடை பெறவும் முடிவெடுக்கப்பட்டது .மாநாட்டில் நமது தோழர்களுக்கு 05.12.2021காலை சிற்றுண்டி மற்றும் மதியம் அறுசுவை உணவு வழங்கிடவும் முடிவெடுக்கப்பட்டது .உணவு சம்பந்தமான பொறுப்புகளை தோழர் E.அருண்குமார் தபால் காரர் பாளை அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது .மாநாட்டில் எடுக்கவேண்டிய தீர்மானங்கள் குறித்து 03.12.2021க்குள் கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் முடிவெடுக்கப்பட்டது .தோழர் உதயகுமார் நன்றி தெரிவிக்க செயற்குழு இனிதே முடிவுற்றது .
நேற்றைய மாநாட்டு நன்கொடையாளர்கள் அருண்குமார்-500 கங்காதாரன்- 500 நிஷாகர் -500 மகேஸ்வரன் -500 பகவதி -500 முத்துலட்சுமிபாளை -500 அருணாச்சலம் -500 இசக்கி தச்சநல்லூர் -500 உதயகுமார் -500
நன்றி மாநாட்டு வாழ்த்துக்களுடன் T.புஷ்பாகரன் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment