...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, November 24, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

                       நவம்பர் 24 ------நமது சம்மேளனம் உதயமான நாள் -

நாடு சுதந்திரத்தின் வாசல் பக்கம் வந்திருந்த சமயம் அதாவது ஆகஸ்ட் 1947 யில் தபால் தந்தி துறையில் உள்ள பல்வேறு சங்கங்கள் ஒன்றுகூடி உருவானதே நமது தாய் இயக்கம் UPTW (UNION OF POST & TELEGRAPH WORKERS ) ..இதன் முதல் அகிலஇந்திய மாநாடு சென்னையில் 1948 மே 24-27வரை நடைபெற்றது .நாடு சுதந்திரம் பெற்றபின் முதல் வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுத்த பெருமை நமது சங்கத்திற்கு தான் உண்டு .ஆம் 1949மார்ச் 9 ம் தேதி வேலைநிறுத்தத்தை தொடங்குவதாக அறிவித்தது .நமது தலைவர்கள் OP .குப்தா தாதா கோஷ் ,KG.போஸ் ,மணி போஸ் உள்ளிட்ட தலைவர்கள் இந்திய தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் தேசிய சேவைகள் பாதுகாப்பு சட்டம் என்பதின் கீழ் கைதுசெய்யப்பட்டு 14 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் ..

              ஒரு துறைக்கு ஒரு சங்கம் என்ற அன்றைய மத்திய அமைச்சர் திரு .ஜெகஜீவன் ராம் முன்மொழிந்த வரைவு திட்டத்தின் படி UPTW சங்கம் சம்மேளனம் என வரையறைக்குள் வர முடிவெடுத்தது .குறிப்பாக கீழ்மட்டத்தில் இருந்து பிரதிநிதிகள் (DELEGATES )ஊழியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அகிலஇந்தியஅளவில் கூடி புதிய சங்கத்தையும் சம்மேளனத்தையும் அமைப்பது எனவும் ஒவ்வொரு சங்கமும் சுய நிர்ணய உரிமை (AUTONAMOUS UNION )தனி சட்ட விதிகள் (CONSTITUTION )மற்றும் மத்திய அமைப்பு ,மாநில அமைப்பு ,கோட்டம் ,கிளை அமைப்பு என இயங்கும் என்கின்ற அடிப்படையில் ஒன்பது சங்கங்கள் (P3 P4 R3 R4 T3 T4 E3 E4 மற்றும் நிர்வாகப்பிரிவு )சேர்ந்து தேசிய தபால் ஊழியர் சம்மேளனம் (NFPTE )என்ற பொது ஸ்தாபனத்தை அமைக்க  முடிவெடுக்கப்பட்டது

 .அதன்படி 1954 நவம்பர் 24 ம்தேதி NFPTE சம்மேளனம் உருவாக்கப்பட்டது .இதன் தலைவராக தோழர் VG.டால்வி அவர்களும் தாதாகோஷ் முதல் பொது செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .நமது தமிழகத்தை சார்ந்த தோழர் A.S .ராஜன் அஞ்சல் மூன்றின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டர் .தோழர் A.S .ராஜன் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களைப்போல் சிறந்த ஆங்கிலபுலமை மிக்கவர் என்பது நமக்கு கூடுதல்  பெருமையே .அவரை தொடர்ந்து  நமது தமிழக தலைவர்கள் D.ஞானையா ,A.பிரேம நாதன் ,LA .பிரசாத் ,NJ.அய்யர் தலைவர் NCA போன்ற தலைவர்கள் ஆளுமை செலுத்தினார்கள் .அதேபோல்  அண்ணன் KVS அவர்களும் 2006  முதல் இன்றுவரை அகிலஇந்திய அளவில் ஒரு மாபெரும் சக்தியாக மிளிர்கிறார் என்பதுவும் எவராலும் மறுக்கமுடியாத உண்மை .

இந்த இயக்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் வானவில்லை போல் பல வண்ணங்களை தாங்கி நின்றாலும்  அரசியல் கலப்பற்ற இயக்கமாக தன்னை முன்னிறுத்தியதன் விளைவாக கிட்டத்தட்ட 80 சதம் ஊழியர்கள் நம் NFPTE சம்மேளனத்தை ஏற்றுக்கொண்டு பயணிக்க தொடங்கினார்கள் என்பது உண்மை .

இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகள் சலுகைகள் கடையில் வாங்கிய சரக்கு அல்ல .கருணையால் விண்ணப்பித்து கிடைத்த சலுகையும் அல்ல ..தியாகம் உயிர் பலி ,தண்டனைகள் ,சிறை கொடுமைகள் ,சமபள வெட்டு ,இட மாறுதல்கள் ,பணி நீக்கம் என இழப்புகளுக்கு பின் கிடைத்த பரிசுதான் இன்று நாம் அனுபவிக்கும் சலுகையும் --உரிமையும் ..

1985 டிசம்பரில் தபால் தந்தி துறை இரண்டாக பிரிக்கப்பட்டபின்னணியில் (அஞ்சல் DOP என்றும் தொலை தொடர்பு DOT என்றும் ) நமது NFPTE சம்மேளனமும் அஞ்சல் பகுதியில் NFPE என்றும் தொலைதொடர்பில் NFTE என்றும் பிரிந்து செயல்பட தொடங்கின .

இவ்வாறு அரசியல் சார்பற்ற இயக்கமாக மட்டுமல்ல ,அதிகாரிகளின் தயவாலோ ,அமைச்சர்களின் ஆசியலோ அங்கீகாரம் பெறாமல் அடிமட்ட ஊழியர்களின் அங்கீகாரத்தால் மட்டுமே இன்று நமது இயக்கம் தொடங்கி 67ஆண்டுகள் கடந்தாலும்  அதே துடிப்போடு ,போராட்ட குணம் மாறாமல் பயணிக்கிறது என்பது ஒரு வரலாற்று சாதனைதான் .நாம் ஒவ்வொருவரும்  NFPE பேரியக்கத்தின் உறுப்பினர்கள் என்ற முறையில்  பெருமை கொள்வோம் !வாழ்க NFPTE வெல்க NFPE 

நம்மை ஒடுக்க நினைத்தவர்கள் 

ஒடுங்கி போனார்கள் 

அடக்க நினைத்தவர்க்ளும் 

அடங்கி போனார்கள் 

தடுக்க நினைத்தவர்கள் 

தடு(டம் )மாறி போனார்கள் --இன்று 

முடக்க நினைப்பவர்களும் --நாளை 

முடங்கி தான் போவார்கள் 

என்பது சர்வ நிச்சயம் ...

தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                   

0 comments:

Post a Comment