...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, September 6, 2016

                                                               செய்திகள் 
01.09.2016  அன்று நடைபெற்ற ஊதியக்குழு தொடர்பான கூட்டத்தில் ஊழியர் தரப்பு சார்பாக கீழ்கண்ட கோரிக்கைகள் வலுவாக எடுத்துரைக்கப்பட்டது 
.1.புதிய அலவன்ஸ் 01.01.2016 முதல் அமுல்படுத்தப்படவேண்டும் 
2.வீட்டு வாடகைப்படி 10% 20% 30% சதம் இருக்கவேண்டும் 
3.போக்குவரத்து படி அறிவுபூர்வமாகவும் ,வருமான வரிக்கு விலக்கு அளிப்பதாகவும் இருக்கவேண்டும்  
4.CEA  உயர்கல்விக்கு விரிவு படுத்தப்படவேண்டும் வருமான வரிக்கு விலக்கு அளிப்பதாகவும் இருக்கவேண்டும்  
--------------------------------------------------------------------------------------------
.                                
                           அஞ்சலக ஆய்வாளர் தேர்வு 
      2014--2015 க்கான   IP  தேர்வுகள் எதிர்வரும் அக்டோபர் 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறுகிறது 
தேர்விற்கு தயாராகும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள் 
----------------------------------------------------------------------------------------------------------------------
                      முன்னாள் மாநில செயலர் அண்ணன் பாலு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் 23.10.2016 ( ஞாயிறு) அன்று நாகர்கோயிலில் நடைபெறுகிறது .குமரி கோட்ட தோழர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள் .நாம் ஏற்கனவே அறிவித்தபடி அண்ணன் பாலு அவர்கள் குறித்த படைப்புகள் நினைவு மலரில் வெளியிடவுள்ளோம் .ஆகவே படைப்புகளை /புகைப்படங்களை அனுப்புவோர் விரைந்து அனுப்பிடுமாறு கேட்டு கொள்கிறோம் .அனுப்பவேண்டிய முகவரி ( SK .ஜேக்கப் ராஜ்  கோட்டசெயலர்  NFPE P3 பாளையம்கோட்டை  HO )  (94421-23416)
அண்ணாசாலை ,காஞ்சிபுரம் ,விருதாச்சலம் பகுதியில் இருந்து வந்த   படைப்புகளுக்கு நன்றி .தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம் .விரைந்து அனுப்புவீர் !வரலாற்று பெட்டகத்தில் உங்கள் பெயர் இடம்பெற  இன்றே அனுப்புவீர் !
                                                                                தோழமையுடன் 
                                                        SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை 
---------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment