மாநில சங்க செய்திகள்
கேடர் சீரமைப்பு
கேடர் சீரமைப்பு உத்திரவு அஞ்சல் மூன்று ஊழியர்களுக்கு இலாக்காவால் கடந்த 27.5.2016 அன்று இடப்பட்டது. ஆனாலும் அதில் உள்ள பல குளறுபடிகளாலும், அதனை செயல்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களாலும் , இதுவரை எந்த ஒரு மாநிலத்திலும் கேடர் சீரமைப்பு அமல்படுத்தப்படவில்லை.கடந்த நான்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியின்போது எடுக்கப்பட்ட முடிவின்படி , இந்த திட்டத்தை அமல் படுத்துவதில் உள்ள சாதக பாதகங்கள் குறித்து விவாதித்திட நாளை 20.9.2016 காலை 10.30 மணியளவில் ஊழியர் தரப்பு பிரதிநிதிகளின் கூட்டம் சென்னையில் கூட்டப்பட்டுள்ளது.

இதில் நம்முடைய கருத்துக்கள் வைக்கப்படும். வைக்கப்படும் கருத்துக்கள், மற்றும் அதன் மீதான விவாதம், முடிவுகள் ஏதும் ஏற்படின் அவை குறித்து நாளை நம்முடைய வலைத்தளத்தின் மூலமும் , ஈமெயில் மூலமும் நாளை இரவு தெரிவிக்கப்படும்.
RULE 38 இட மாறுதல்கள்
கடந்த 28.7.2016 அன்று நடைபெற்ற RJCM கூட்டத்தில் எழுப்பப்பட்ட விதி 38 ன் கீழான இடமாறுதல் பரிசீலிக்கப்படவேண்டிய நமது கோரிக்கை மற்றும் CPMG அவர்களின் பதில் கீழே பார்க்க .
அதில் CPMG அவர்கள் CADRE RESTRUCTURING உத்திரவு அமல்படுத்த வேண்டியதன் காரணமாக RULE 38 முழுமையாக அளிக்க இயலாது என்று பதில் அளித்துள்ளார்.
ஆனால் இந்த நிலைப்பாடு தவறு என்று நாம் கடந்த 30.8.2016 அன்று நடைபெற்ற நான்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டியின் போது மீண்டும் சுட்டிக் காட்டி கடுமையாக விவாதித்ததன் காரணமாக, CADRE RESTRUCTURING அமல் படுத்துதலில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஊழியர் தரப்புடன் விவாதிக்க ஒரு கூட்டம் கூட்டுவதாகவும் இதனை ஒட்டி RULE 38 இடமாறுதல்கள் பரிசீலனை செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்கள்.
அதன்படி எதிர்வரும் 20.9.2016 அன்று ஊழியர் தரப்புடன் விவாதிக்க அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது . அதன் நகலை மேலே பார்க்கவும் .
எதிர்வரும் 21.9.2016 அன்று , RULE 38 குறித்து பரிசீலித்திட , அனைத்து மண்டலங்களின் AD STAFF களும் உரிய ஆவணங்களுடன் CPMG அலுவலகத்தில் ஆஜராகிட தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
0 comments:
Post a Comment