வருந்துகிறோம். அஞ்சலி செலுத்துகிறோம்.
திருநெல்வேலி PSD மேனேஜர்திரு சங்கரன் அவர்கள் மறைவு
திரு A.சங்கரன், அவர்கள் திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் உதவி அஞ்சலக அதிகாரியாக பணியாற்றி, தற்போது பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி PSD மேனேஜராக பணியாற்றி வந்தவர்.
நிலக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் SBCO-வில் பணிபுரியும் திருமதி சாலினி யின் தந்தையுமாவார்
அன்னாரது இறுதிச்சடங்கு நாளை 26/09/2016 காலை 10 மணியளவி்ல் (திண்டுக்கல் - நத்தம் ரோடு) மேற்கு மரியனாதபுரம், கோவில்தெரு ( சர்ச் எதிரில்) இல்லத்தில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து கொள்கிறோம்.
கோட்ட செயலர்கள் ,
திருநெல்வேலி & அஞ்சல் பொருள் கிடங்கு
திருநெல்வேலி & அஞ்சல் பொருள் கிடங்கு
வராமல் போனதேன் ?
உருவம் தான் தென்றல்
பேச்சிலோ உவமை
உடையிலோ மிடுக்கு
சிரிப்போ மத்தாப்பூ
மனமோ குழந்தை
இதயமோ பயமறியாது
சிங்கம் போல் கர்ஜிக்கும்
குரலுக்கு சொந்தக்காரர்
எங்கள் மேலாளர் என்றும் எங்கள்
இதயத்தில் நிலைத்திடும்
போராட்ட வீரரை
இழந்து நிற்கும்
PSD ஊழியர்கள் நெல்லை
ஆக்கம் --திருமதி லட்சுமி OA PSD TVL
0 comments:
Post a Comment