...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, September 7, 2016

  பெரியமீன்கள் சின்னமீன்களை உண்பது மச்ச நியாயம் ?
6 வது ஊதியக்குழுவில் குறைந்தபட்ச ஊதியத்திற்கு அதிகபட்ச ஊதியத்திற்கும் உள்ள இடைவெளிரூபாய்  83000 அதாவது 11.86 மடங்கு .
ஏழாவது ஊதியக்குழுவில் குறைந்தபட்ச ஊதியத்திற்கும்  அதிகபட்ச ஊதியத்திற்கும் உள்ள இடைவெளி ரூபாய் 232000  அதாவது 21.11 மடங்கு .ஆகும் .
2013 இல் அறிவிக்கப்பட்ட ஊதியக்குழு 2014 இல் நியமிக்கப்பட்டு 2015 இல் ஊதியக்குழு அறிக்கை வெளியானது .பேரணிகள் ,ஆர்ப்பாட்டங்கள் ,வேலைநிறுத்த அறிவிப்புகள் எதைக்கண்டும் அசராத மத்திய அரசு 30.06.2016அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைஅதனை தொடர்ந்து  06.07.2016அன்று உயர்மட்டக்குழு பரிசீலனை என்ற உறுதிமொழி யோடு ஊதியக்குழு அமுலானது .
         .ஊதியக்குழுவின் முடிவுகளுக்கு அடிப்படை IMMஅஹமதாபாத் என்ற நிர்வாக இயல் பரிந்துரைதான் .அரசுதுறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம்   தனியார் துறையில் வழங்கப்படுவதை விட அதிகம் .ஆனால் தனியார் துறையில் உள்ள அதிகாரிகள் பெறும் ஊதியத்தை விட அரசு துறையில் அதிகாரிகள் வாங்கும் ஊதியம் குறைவு என்ற பின்னணியில் உயர் அதிகாரிகளுக்கு 47600 முதல் 250000 வரை நிர்ணயிக்கப்பட்டது .ஆனால் சாதாரண ஊழியர்களுக்கோ அடிப்படை சம்பளத்தோடு கை வைப்பதை நிறுத்தாமல் பதவி உயர்வில் கட்டுப்படுத்த /கண்காணிக்க ஒருகுழு /அதையும் தாண்டி நாம் பெற்ற MACP க்கு Bench mark மிக நன்று என பல்வேறு நிபந்தனைகள் .மேலும்  .இருமுறை  Bench markஎட்டப்படாவிட்டால் ஆண்டு ஊதிய உயர்வு கிடையாது  போன்ற பிற்போக்கான உத்தரவுகள்           (நன்றி -கலங்கரை விளக்கம் )
            உழைப்பு சுரண்டலை தடுக்க வேண்டும் -
-தொழிலாளியின் உழைப்பில் 20 சதம் தொழிலாளி வாழ்விற்கும் 80 சதம் முதலாளிகளின் லாபத்திற்கும் செல்வதை போல சாதாரண ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உள்ள சலுகைகள் /சம்பளங்கள் இடையேயான வித்தியாசங்கள் அதிகரித்து கொண்டே போவது சாபமானது மட்டுமல்ல ,ஆபத்தானது  ஆகவே இந்த வித்தியாசங்கள்  அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது  அவசியம் ஆகும் .
           இது போன்ற அடிப்படை பிரச்சினைகளில் தலைவர்கள் முழுகவனம் செலுத்தி ஊழியர் பிரச்சினையில் தீர்வை காண முனைய வேண்டும் என சாதாரண ஊழியர்கள் எதிர்பார்க்கீறார்கள் ..
இந்த செப்டம்பர் முடிந்தது --இனி அடுத்த செப்டம்பர்   என வழக்கம் போல் காத்திருக்காமல்  பகுதி  பிரச்சினைகளை கையிலெடுத்து போராட வேண்டுகிறோம் .இது ஒரு பாமரனின் கருத்து ,சாமானியனின்  கனவு 
ஊழியர்களின் ஏக்கம்  ,ஒற்றுமையின் தாக்கம் .களத்தை கையில் எடுங்கள் !காலத்தை சிறை பிடியுங்கள் !
                            வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 

0 comments:

Post a Comment