...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 24, 2016

MINUTES OF THE MEETING WITH THE STAFF SIDE DT 20.9.2016 BY THE CPMG,TN ON CADRE RESTRUCTURING

                                                    மாநில சங்க தகவல் 

கடந்த 20.9.2016 அன்று ஊழியர் தரப்புடன்  நடைபெற்ற கேடர்  சீரமைப்பு குறித்த ஆலோசனைக்கு கூட்டத்தின்  அதிகார பூர்வ  பதிவு  ( MINUTES) தற்போது  CPMG அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது. இதில் பல பிரச்சினைகள் பேசப்பட்டாலும் , சில முக்கிய பிரச்சினைகளுக்கு நம்முடைய அஞ்சல் மூன்று சங்கத்தின் ஆலோசனை தெளிவாக அளிக்கப்பட்டுள்ளது .

 

குறிப்பாக  ACCOUNTANT, SYSTEM ADMINISTRATOR , CPC , BPC, ANNA  ROAD,  CHENNAI GPO, FOREIGN  POST பகுதிகளில்  LSG  பதவிகள்  அளிப்பது   குறித்த  ஆலோசனை  ஏற்கப்பட  உள்ளது .  இது  நிச்சயம்  ஒரு பெரிய  முன்னேற்றமாகும் .  SYSTEM ADMINISTRATOR  பதவிகளில்  பதவி உயர்வு வாய்ப்பு என்பது இதுவரை எந்த  அஞ்சல் வட்டத்திலும் ஏற்கப்படவில்லை. இது  CPMG  அவர்களால் ஏற்கப்பட்டால் , நம்முடைய காலத்தில் இந்த  மாநிலச்  சங்கம்  பெற்ற  மிகப்பெரிய  வெற்றி ஆகும் இது .

MINUTES  எப்படி இருந்தாலும்  இது முழுமையானதோ  அல்லது முடிவானதோ  அல்ல  .  இது  நல்ல  ஆலோசனை  வேண்டிய ஒரு தொடக்கமே . மீண்டும்  பல்வேறு தீர்க்கப்படாத  கோணங்களில் இந்தப் பிரச்சினை  குறித்து  ஊழியர்  தரப்பு  ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும் என்று CPMG  அவர்கள் உறுதி  அளித்து அதற்கான அவகாசமும் அளித்துள்ளார்.   அவருக்கு நம்முடைய பாராட்டுக்கள் .நிச்சயமாக  நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச்   சங்கம், தெளிவான  முடிவுகளை   தெரிவிக்கும். தற்போது MINUTES நகலை கீழே பார்க்கவும். 



0 comments:

Post a Comment