...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 10, 2016

                                          நெல்லை கோட்ட செய்திகள் 
   வீகே புரம் தபால் காரர் குறைப்பை கண்டித்து கோட்டசங்கங்கள் சார்பாக கொடுக்கப்பட்ட கோரிக்கைமனு மீது நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ,மண்டல அலுவலகத்திற்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன .இருந்தாலும் மண்டல அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் வரும்வரை ,தேங்கிக்கிடக்கும் தபால்களை பட்டுவாடா செய்யவும் ,தபால்காரர்கள் பணிச்சுமையை குறைக்கவும் .நாம் வைத்த கோரிக்கையான வெளியாட்கள் மூலமாக தேங்கிக்கிடக்கும் தபால்களை பட்டுவாடா செய்ய வழங்கப்பட்ட உத்தரவு துரதிஷ்ட்டமாக   வி கே புரத்தில் சாத்தியப்படவில்லை .இது குறித்து மீண்டும் 09..09.2016 அன்று கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து ஊழியர்களின் மனநிலையை .விரிவாக எடுத்துரைத்து பேசியதன் விளைவாக மீண்டும் ஒரு ஈமெயில் விகே புரம் அஞ்சலகத்திற்கு நேற்று மாலை 6 மணிக்கு கொடுக்கப்பட்டுள்ளது .அதில்உள்ள  பழைய நிபந்தனைகள் களையப்பட்டு ,காலக்கெடு ஏதும் நிர்ணயிக்காமல் 
பழைய தபால்களை பட்டுவாடா செய்ய குறைந்தபட்ச கூலி வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .மேலும் அம்பை உப கோட்ட அதிகாரி மற்றும்   மெயில்ஓவர்சியர்  ஆகியோர் சென்று அதை ஒழுங்கு படுத்தவும் நேற்றைய ஈமெயில்யில்  கொடுக்கப்பட்டுள்ளது .இருந்தாலும் மண்டல அலுவலக ஒப்புதல் கிடைக்கும் வரை  GDSMC யை GDSMD யாக அனுமதிப்பதே தற்காலிக சின்ன தீர்வாகும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் .
                                                    GDS போனஸ்   
2014-15 ஆம் ஆண்டுமுதல் உயர்த்தப்பட்ட போனஸ் உயர்வுதொகை GDS ஊழியர்களுக்கு வழங்கப்படாததை நாம் வேதனையோடு பார்க்கிறோம் .இது குறித்து GDS சங்க தலைவர்கள் நேற்று நமது அமைச்சர் அவர்களை சந்தித்து பேசியுள்ளார் .நமது இலாகா முதல்வருக்கும் GDS ஊழியர்களுக்கும் அந்த உயர்த்தப்பட்ட  போனஸ் வழங்கப்பட வேண்டும் என பல வழிகளில் வலியுறுத்து வருகின்றனர் .மீண்டும் GDS ஊழியர்களுக்கு  இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு போராட தயாராகுவோம் .
                                                            வருந்துகிறோம் 
தோழர் கிருஷ்ணன் GDSMD சூரங்குடி /நாங்குநேரி  அவர்கள் 09.09.2016 அன்று  மரணமடைந்தார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .
            அஞ்சலக ஆய்வாளர் தேர்வு தள்ளிவைப்பு 
  அஞ்சலக ஆய்வாளர் தேர்வு  அக்டோபர் 22 மற்றும் 23 தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது 

                               தோழமையுடன்  SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 
                                                     

0 comments:

Post a Comment