...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 30, 2016

             கேடேர் சீரமைப்பு  நிர்வாக ஆயுதமா ?
           ஆ (யு )யத்தமா ?
 கேடேர் சீரமைப்பு ஆலோசனைக்கூட்டத்தில் நடந்த விவரங்கள் 
தமிழ் மாநில நிர்வாகத்தின் சார்பாக ஊழியர் சங்கங்களிடம் கேட்கப்பட்ட ஆலோசனைகளுக்கு மாநில சங்கம் சார்பாக கொடுக்கப்போகும் ஆலோசனைகளை இறுதி செய்ய நடந்த கோட்ட செயலர்கள் கூட்டத்தில் 46 செயலர்கள் கலந்து கொன்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள் .
பெரும்பாலான செயலர்கள்  கருத்துப்படி இந்த பதவி உயர்வின் மூலம் தொலை தூர  இடங்களுக்கு  ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படும் வாய்ப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது .மண்டல அளவிலான மாறுதல் என்றால் கண்டம் விட்டு கண்டம் ஊழியர்களை பந்தாடவும் சில அதிகாரிகள் துடித்து கொண்டு இருப்பார்கள் .என்று பலரும் தங்கள் நியாமான ஐயப்பாட்டை விளக்கினார்கள் .இறுதியாக கீழ்கண்ட அடிப்படியில் மீண்டும் மாநில நிர்வாகத்தை அனுகுவது என்று முடிவெடுக்கப்பட்டது .
1.03.10.2016 குள் நமது முடிவுகளை தெரிவிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிப்பது 
2.LSG பதவிகள் புதிதாக 1039 பதவிகளை உருவாக்க மாநில நிர்வாகம் திணறி கொண்டிருப்பது உண்மை .அதனால் தான் அந்த பொறுப்பை சங்கங்களிடம் தள்ளி உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது .இருந்தாலும் நமது தரப்பு ஆலோசனைகளாக அக்கௌன்டன்ட் ,CPC ,BPC,ME,சிஸ்டம் மேனேஜர் பிரிவுகளில் LSG  பதவிகளை உருவாக்குவது (  எப்படித்தான் இருந்தாலும் புதிதாக Norms இல்லாமல் 1000 LSG பதவிகளை உருவாக்குவது சாத்தியமா ?)
துக்ளக் அமைச்சரைவையில் 546 அமைச்சர்களும் துணை பிரதமர் என்பதைப்போல தலைமை அஞ்சலக எழுத்தர்கள் எல்லோரும் LSG என்ற நிலைகூட வரும் போலும் .
3.பதவி உயர்வை மறுக்கும் போது நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் .குறிப்பாக மெடிக்கல் ,பணி ஓய்வு காலங்கள் ,MACP III ஊழியர்கள்  பதவி உயர்வை மறுத்தால் நிர்வாகம் அதை ஏற்று கொள்ள வேண்டும் .
4.HSG II .HSG I பதவிகளை நிரப்ப ONE TIME MEASURE ஆக LSG கிடைத்த    உடனேயே பதவி உயர்வுகள் வழங்க மத்திய சங்கத்தை அணுக வேண்டும் .
  சராசரி ஊழியர்களின் கவலை தேவையில்லாமல் இடமாற்றங்களை தவிர்க்க வேண்டும் /அவர்கள் நலன் பாதுகாக்க படவேண்டும் என்பதை மிகவும் அழுத்தமாக வலியுறுத்தினோம் .ஆனால் சில தலைவர்கள் 
கேடேர் சீரமைப்பின் விளம்பர தூதுவர்கள் போல பதவி உயர்வு என்றால் கஷடங்களை ஏற்று கொள்ளவேண்டும் என்று எதார்த்தத்தை மறந்து தத்துவத்தை உதிர்த்ததை யாரும் ஏற்று கொள்ள வில்லை என்பது உண்மை .
5.தற்சமயம் பணியாற்றும் LSG /HSG II ஊழியர்கள் ரெகுலர் ஆள் வரும் வரை அதே பதவியில் நீட்டிக்க அனுமதிக்க வேண்டும் .
6.2014-2015 இல் பதவி உயர்வை மறுத்த ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் ;
         சின்ன ஆறுதல் 
1.வருகிற ஏப்ரல் வரை இது நிர்வாகம் நினைத்தாலும் அமுலாக்க போவதில்லை 
2.எப்படியும் சில பேர் இந்த குளறுபடிகளை நீக்க நீதிமன்றங்களுக்கு செல்ல தயாராக இருப்பதாகவும் தகவல் .
             தீராத பிரச்சினைகளை /தீர்க்க முடியாத பிரச்சினைகளை எப்படி ஆளும் அரசு அனைத்து கட்சிகளின் கூட்டத்தை கூட்டி ஒருவர்மேல் ஒருவர் பொறுப்பை சுமத்த நினைத்தார்களோ அந்த அடிப்படையில் அகில இந்திய சங்கமா ?மாநிலசங்கமா ?என்ற விவாதத்தையும் கேட்ட முடிந்தது .
 நமது கூட்டத்திற்கு பிறகு மாநில நிர்வாகத்தின் துரித நடவடிக்கையினை பாரீர் 

A POSITIVE STEP BY OUR CPMG, TN - AS PER DISCUSSIONS HELD WITH THE STAFF SIDE ON 20.9.2016,NOW INFORMATION IS CALLED BY ADMN ON CADRE RESTRUCTURING OF GR. C EMPLOYEES

   

0 comments:

Post a Comment