...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, September 20, 2016

 கருணையடிப்படையிலான வேலைவாய்ப்பில் கருணை வைக்குமா அஞ்சல் துறை ?
             RNR அடிப்படையில் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த வேலைவாய்ப்புகள் சமீபத்திய விதிக்கப்பட்ட  கடுமையான  மெரிட் பாயிண்ட் அடிப்படையால்  எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன ,எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது எத்தனை  பேர் நீதிமன்றம் சென்று நிவாரணம் தேடி நிர்கதியாய் நிற்கின்றனர் என்பதை பார்க்கும் போது நமது அகில இந்திய சங்கங்கள் இந்த பிரச்சினையில் தனி கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி நமது மாநில அளவில் உள்ள நிலைகளை பாரீர் 
.எல்லா போராட்டங்களில் வைக்கப்படும் கோரிக்கைகளில் இதுவும் ஒன்று .எப்படி ED ஊழியர்களை நிரந்தரமாக்கு !காலிப்பணியிடங்களை நிரப்பு !என்ற கோரிக்கைகள் தொன்றுதொட்டு இருக்கிறதோ அந்த வரிசையில் இந்த கோரிக்கைகளும் சேர்ந்து விட கூடாது --நீர்த்து போக கூடாது என நாங்கள் விரும்புகிறோம்   
2012 இல் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 876   -வேலை கொடுக்கப்பட்டது --94 
2013 இல் பெறப்பட்ட விண்ணப்பங்கள்   96   -வேலை கொடுக்கப்பட்டது --39 
2015 இல் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 984   -வேலை கொடுக்கப்பட்டது -- 50
---------------------------------------------------------------------------------------------------------------------
2012  யில் மறுக்கப்பட்ட விண்ணப்பங்கள் 782
2013  யில் மறுக்கப்பட்ட விண்ணப்பங்கள் 57
2015  யில் மறுக்கப்பட்ட விண்ணப்பங்கள் 934
--------------------------------------------------------------------------------------------------------------------
நீதிமன்றத்திற்கு சென்ற முறையீடுகள் -204 

          தோழமையுடன்  SK .ஜேக்கப் ராஜ்  

0 comments:

Post a Comment