...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 9, 2016

அரசுத்துறை என்னும் முகமூடிக்குள் தனியார் துறை 
அரசுத்துறை நிறுவனங்கள்/ பொதுத்துறைநிறுவனங்கள் தனியார் நிறுவனங்களோடு போட்டிபோட வேண்டிய கட்டாயம் --BSNL நிலைகளை பாரீர் !
செய்தி சென்னை : ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி இன்டர்நெட் வழங்கும் திட்டம் நாளை முதல் அறிமுகப்படுத்தபடும் என்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த வாரம் வியாழன்கிழமை ரூ.50-க்கு ஒரு ஜி.பி 4ஜி டேட்டாவை அறிவித்தது. இந்த நிலையில், அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஒரு ஜி.பி. இண்டர்நெட்டுக்கு ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும் புதிய பிராட்பேண்ட் சலுகை திட்டத்தை நாளை முதல் அறிமுகப்படுத்த உள்ளது.
 எப்படி LIC பெயரில் HOUSING  FINANCE இயங்குகிறதோ ,
எப்படி   ,SBI பெயரில் SBI LIFE INSURANCE  தன் முகத்தை மறைத்து இயங்குகிறதோ , அதே நிலைதான் போஸ்டல் முகமூடியில் POST BANK  இன் உண்மை முகம் புதைந்திருக்கிறது .
அன்று  கிராமத்தில் யாராவது ஒருவர் வீட்டில் தொலைபேசி இருப்பது அதிசயம் --தொலைபேசி மணி ஆலயமணியோசையாக இருந்த காலமும் உண்டு .
STD இல்லாத காலங்களில் அஞ்சலகத்தில் காத்திருந்து  ட்ருங்க கால் புக்பண்ணி காத்திருந்த காலங்களும்  உண்டுகால்களும் உண்டு  .STD விரிவு படுத்தியபிறகு முக்குக்கு முக்கு ஏன் பெட்டிக்கடைகளில் PCO வந்ததையும் பார்த்திருக்கிறோம் .பிறகு வீட்டுக்கு ஒரு Landline பெருகி BSNL  நாவரத்தினமாக ஒளிர தொடங்கிய காலத்தில் cell phone அறிமுகம் .பிறகு  ஆளுக்கு ஒரு போன் இப்பொழுது ஒரு போனில் பல இணைப்புகள் --இதில் தனியார் கம்பெனிகளின்    அசுர வளர்ச்சிக்கு முன்னாள் BSNL தன் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டிய கால கட்டாயம் இது .அன்று   வானொலியில் ஆகாஷ்வாணி செய்திகள் மட்டும் தான் கேட்க முடிந்தது நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 3 முறை செய்திகள் வரும் .பிறகு ;தூர்தர்சன் --செய்தி ஒளிபரப்பில் தனியார் நுழைந்தபிறகு இன்று 24 மணி நேரமும் செய்திகள் 
சில செய்தி நிறுவனங்கள்  News என்பதை தன்னுடைய Views ஆகவும் தன்னுடைய  Views யை News ஆகவும் துணிச்சலாக வெளியிட துவங்கி விட்டன .
 இதே நிலைதான் அஞ்சலகங்களில் நிலைய துடிக்கும்  போஸ்ட் வங்கி 
           இதை வரவேற்பதா ?  வழியனுப்புவதா ? 
             தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 

0 comments:

Post a Comment