...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 28, 2019

                                                  முக்கிய செய்திகள் 
*பார்சல் நெட்ஒர்க்யின் (FNOP ) அடுத்த கட்டமாக எக்ஸ்பிரஸ் பார்சல் சேவை 18.11.2019 முதல் நிறுத்தப்படுகிறது .
* GDS TO PA மற்றும் POSTMAN TO PA  தேர்ச்சிக்கான கணினி தேர்வை ரத்து செய்திடவேண்டும் என நமது மத்திய சங்கம் 27.09.2019 அன்று அஞ்சல் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது .சென்ற முறை கணினி தேர்வை அஞ்சல் வாரியம் ரத்துசெய்திருந்தது 
*கடந்த 07.20.2019 அன்று நடைபெற்ற NJCM நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்ட முக்கிய பிரச்சினையான NPS ஊழியர்களுக்கு GPF வசதியை வழங்கிடவேண்டும் என்று மீண்டும் JCM ஊழியர்தரப்பு சார்பாக 26.09.2019 அன்று வலியுறுத்தல் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது .
* அதேபோல் கருணைஅடிப்படையிலான வேலை வழங்குவதிலும் உள்ள 5 சதம் என்பதை 10 சதமாக உயர்த்திடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது .
                                               திருநெல்வேலியில் மீண்டும் கடற்கரை 
 நமது அன்பிற்குரிய தோழர் திரு .கடற்கரையாண்டி அவர்கள் போஸ்ட்மாஸ்டர் கோவில்பட்டி நேற்று கோவில்பட்டியில் இருந்து RELIEVE ஆகிவிட்டார்கள் அவர்கள் வருகிற 01.10.2019 அன்று திருநெல்வேலி HO வில் JOIN பண்ணுகிறார்கள் .அவர்களை நெல்லை NFPE வாழ்த்தி வரவேற்கிறது 
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, September 27, 2019

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் 
   நமது கோட்ட கண்காணிப்பாளர்களுடனான மாதாந்திரபேட்டி 10.10.2019 அன்று மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது .மாதாந்திர பேட்டியில் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள் /கருத்துக்கள் /ஆலோசனைகள் இருந்தால் 30.09.2019 குள் கோட்ட செயலர்களுக்கு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
   * மாவடி SO விற்கு டெபுடேஷன் செல்ல விருப்பமுள்ள தோழர்கள் இருந்தால் தெரிவிக்கவும் .
   * சூப்பர்வைசர் அஸோஸியேஷன் அதாவது இன்றைய போஸ்ட்மாஸ்டர் கிரேடு சங்கத்திற்கான அங்கீகாரம் அஞ்சல் வாரியத்தால் 23.09.2019 அன்று ரத்துசெய்யப்பட்டுவிட்டது .ஆகவே பழைய தோழர்கள் மீண்டும் நம்மோடு இனைந்து பணியாற்ற அழைக்கிறோம் .
*மத்திய அரசு ஊழியர் எழு ஆண்டுகளுக்கு மேல் அரசு ஊழியராக பணிபுரிந்து அவர் பணியில் இருக்கும் பொழுது இறந்தால்  முதல் பத்து ஆண்டுகளுக்கு  கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக பணி முடித்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 9000+DA+FMA   வழங்கப்பட்டு வந்தது.   தற்போது மத்திய அரசு இதில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக பணிபுரிந்து பணியில் இருக்கும் பொழுது இறந்து இருந்தால் அந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கும் குடும்ப ஓய்வூதியமாக முதல் 10 ஆண்டு காலத்துக்கு 50% வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.        இந்த உத்தரவு 01.10.2019 முதல் அமலுக்கு வருகிறது.  இதற்கு முன் ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக பணி முடித்த பணியில் இருக்கும் பொழுது இறந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு குறைவான குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கும்  01.10.2019 உயர்த்தி வழங்கப்படும்.
 நன்றி 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, September 26, 2019

                                        முக்கிய செய்திகள் 
அதிகரித்துவரும் CPGRAMS புகார்கள் குறித்து அஞ்சல் வாரியம் ஆராய்ந்து அத்தகைய புகார்களை குறைக்கும் பொருட்டு அஞ்சல் ஊழியர்களுக்கு மேலும் தேவையான SOFT SKILL மற்றும் LEADERSHIP QUALITY குறித்த பயிற்சிகளை அளிக்க உத்தரவிட்டுள்ளது .
பொதுவாக வருகின்ற புகார்கள் அனைத்தும் கவுண்டரில் பணிபுரியும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் நெட் கிடைக்கவில்லை -SAP வேலைசெய்யவில்லை(என்ற உண்மையை ) என்று நிரந்தர பதில்களாக  சொல்வதாகவும் மற்றொன்று வாடிக்கையாளர்களுக்கும் அஞ்சல் கவுண்டரில் பணியாற்றும் ஊழியர்களுக்கும்  உள்ள தொடர்பு இடைவெளி ஆகும் .இறுதியாக இதுபோன்று நடக்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தாக்கீது வந்துள்ளது .ஆகவே நமது தோழர்கள் கவனமாக கவுண்டர்களில் வாடிக்கையாளர்களை கையாளும்படி கேட்டுக்கொள்கிறோம் (அஞ்சல் வாரிய கடித எண் NO-13-01/2019 DTD 02.09.2019)
         மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் சார்பாக புதுடெல்லியில் நேற்று 25.09.2019 மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .5 சத பஞ்சப்படி அறிவிப்பை உடனே அறிவிக்கவேண்டும் போனஸ் மாதம் ஒன்றுக்கு 7000 என்பதை ரூபாய் 18000 ஆக மாற்றவேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக நடைபெற்றது .(போனஸ் பார்முலாவை மாற்றவேண்டும் என்ற கோரிக்கைகள் நாம் மறந்து ரொம்ப நாளாச்சு )
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, September 25, 2019

                                                                  முக்கிய செய்திகள் 
ஓய்வு பெறும் நடைமுறையில் மாற்றம் இல்லை
33 வருட பணி நிறைவு செய்த  மத்திய அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு  வழங்கிட, ஓய்வு பெறும் விதிகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் ஓய்வு பெறும் விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் செய்யும் உத்தேசம் அரசுக்கு இல்லை என அரசு  அறிவித்துள்ளது".
                                          OAP பெறும் முதியவர்களுக்கு IPPB கணக்கு 
சமீபத்திய தமிழக அரசு -அஞ்சல் துறை ஒப்பந்தத்தின் படி OAP பெறும் முதியவர்களுக்கு IPPB கணக்கு தொடங்கி அதன் மூலம் பணபலன்கள் அனுப்பப்படும் என்ற உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள தபால்காரர்கள் /GDS ஊழியர்கள் IPPB கணக்கை 27.09.2019 குள் தொடங்க பணிக்கப்பட்டுள்னர் .நமது நெல்லை கோட்டத்தில் மட்டும் 5200 OAP களுக்கு மூன்று நாட்களுக்குள் கணக்கு தொடங்கவேண்டுமாம் .அரசு அறிவிப்புப்படி மொபைல் மூலம் கணக்கு தொடங்க ஆகும் நேரம் சில நிமிடங்களாம் .ஆனால் நடைமுறையில் ஆகும் நேரத்தை என்ன சொல்ல ? இது குறித்து நமது தோழர்களின் ஆதங்கங்களை நேற்று பல்வேறு தளத்தில் பதிவிட்டிருந்தனர் அவைகளில் சில ...

                        *  OAP வாங்கும்  50% முதியோர்களிடம் செல்போன் வசதி இல்லை மற்றும் அவர்களது ( 70,80 வயது முதியோர்) கைரேகைகள் பதிவு செய்ய முடியவில்லை.

*சிலர் கண்பார்வை இல்லாமல் , காது கேளாமை போன்ற குறைபாடு உடையவரிடம் எப்படி சொல்லி எப்படி புரிய வைப்பது.....!? நாளை OAP வழங்க 4 km சென்று வீட்டில் வழங்கினால் சர்வீஸ் சார்ஜ் பிடித்தம் இருக்குமா....
*OAP   நாம் கொடுக்கும்   முதியவர்கள்  தபால்கார்யிடம்  OTPஎண்   சரியா செல்லி நாமும் நல்லபடி யாக பட்டுவாடா  செய்ய ஆண்டவன் உதவிபுரியட்டும் .
*80 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு  கைரேகை விழுவதில்லை என்ற காரணத்தினால் வங்கியின் மூலம் முதியோர் உதவித் தொகை வழங்குவது நிறுத்தப்பட்டு  மணியார்டர் மூலம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் IPPB மூலம் வழங்க நம் அதிகாரிகள் முயற்சி செய்வது என்பது நமக்கு பிரச்சினைதான்.
                                       நன்றி 
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                         

Tuesday, September 24, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                அகில இந்திய மாநாடு ---ஹைதெராபாத் 
நமது அகிலஇந்திய மாநாடு சம்பந்தமாக வரவேற்புக்குழு மற்றும் அகிலஇந்திய சங்கம் சில தகவல்களை தந்துள்ளன .நமது கோட்டத்தை பொறுத்தவரை மாநாட்டிற்கு வருகிறவர்கள் 18.10.2019 முதல் 25.10.2019 வரை விடுப்பு விண்ணப்பிக்கவும் .பயண விவரங்கள் மீண்டும் நினைவு படுத்துகிறோம் .இந்தமுறை அதிக அளவில் ஊழியர்கள் செல்வதால் விடுப்பை முன்கூட்டியே விண்ணப்பித்து அதன் தகவல்களை கோட்டசங்கத்திற்கு தெரிவிக்கவும் 
                               பயனவிவரங்கள் -புறப்படுதல் 
18.10.2019--  19.40 நெல்லை -மதுரை நெல்லை எக்ஸ்பிரஸ் 
19.10.2019-- 01.00 மதுரை -ஹைதெராபாத் (16733) இரவு 11.45 
                                        திரும்புதல் 
23.10.2019 --16.00 ஹைதெராபாத் --நெல்லை (16353) 24.10.2019 இரவு 7 மணி 
 
The Venue of Conference and accommodation is in same campus which is 24 Kms away from Air Port. TSRTC Buses/Prepaid Taxies and Ola, Uber Cabs are available every time at Air Port, Secunderabad and Hyderabad Railway Stations and Bus Stands. Please intimate participation of delegates/Visitors/observers to Reception Committee immediately and also intimate the particulars of participants as required by Reception Committee in their Circular dated 01.09.2019.

Delegate Fee – Rs.2500/- per head has been fixed by Reception Committee for making all your food and lodge arrangements comfortably. Delegate fee should be deposited by every delegate, Visitor and observer compulsorily.

Publication of Souvenir - A souvenir will be published as a mark of event on AIC. All are requested to procure maximum advertisements for publication in souvenir. Advertisement can also be taken from Department and co-operative societies.

For any information and help you can contact the following comrades. Their Mobile numbers are noted against each.

1.    Com. S. S. R. A. Prasad,                                      -        9490300867
Circle Secretary, Telangana-P3 &                                   9133499320
General Convenor, Reception Committee    
தோழமையுடன் SK.ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, September 23, 2019

           வெற்றிகரமாக நடைபெற்ற நெல்லை அஞ்சல் நான்கின் கோட்ட மாநாடு 
                                 நெல்லை அஞ்சல் நான்கின் 38 வது கோட்ட மாநாடு 22.09.2019 அன்று கோட்ட தலைவர் தோழர் A .சீனிவாசசொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .மாநாட்டில் அஞ்சல் நான்கின் மாநிலசெயலர் தோழர் G.கண்ணன் நெல்லை கோட்ட அஞ்சல் மூன்றின் செயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள் .வாழ்த்துரையாக தோழர்கள் சோலையப்பன் ராஜசேகர் இளங்கோவன் ராஜ்மோகன் நெல்லை அஞ்சல் மூன்றின் தலைவர் அழகுமுத்து அம்பை அஞ்சல் மூன்றின் செயலர் தியாகராஜபாண்டியன் தங்கராஜ் GDS செயலர் ஞானபாலசிங் SN .சுப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .மாநாட்டில் தலைவராக தோழர் சீனிவாசசொக்கலிங்கம் செயலராக தோழர் SK 
பாட்சா பொருளாளராக தோழர் இசக்கி ஆகியோர் ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டனர் .தீர்மானங்கள் மற்றும் மாநாட்டு விவரங்கள் அனைத்தும் விரைவில் சுற்றறிக்கையாக வெளியிடப்படும் .மாநாடு வெற்றிபெற உழைத்த /உதவிய அனைத்து அஞ்சல் மூன்று /அஞ்சல் நான்கு மற்றும் GDS தோழர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 







Saturday, September 21, 2019

                                       முக்கிய செய்திகள் 
அஞ்சலக சேமிப்பு கணக்குகள்/சேமிப்பு சான்றிதழ்   பாஸ் புத்தகங்கள் தொலைந்து போனால் Duplicate  பாஸ் புத்தகங்கள் வழங்குவதற்கு காவல் துறையில் புகார் செய்து  காவல்துறையினர் அளிக்கும் முதல் தகவல் அறிக்கை கட்டாயமாக வேண்டுமென பல அஞ்சலகங்களில் கேட்பதாக  பொதுமக்களிடம் புகார் வந்துள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. அஞ்சல்துறை விதிகளில் Duplicate பாஸ் புத்தகங்கள் வழங்குவதற்கு காவல்துறையிடம் இருந்து பெறப்படும் முதல் தகவல் அறிக்கை கட்டாயம் தேவையில்லை என கூறப்பட்டுள்ளதால் பொதுமக்களிடம் முதல் தகவல் அறிக்கை கட்டாயம் கொடுக்க வேண்டுமென   கட்டாயப்படுத்தக்கூடாது என அஞ்சல் துறை உத்தரவிட்டுள்ளது. எனவே Duplicate பாஸ் புத்தகங்கள்/ சான்றிதழ்கள் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய உத்தரவை அனைத்து அஞ்சலகங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு அஞ்சல் துறை 20.09.2019 அன்று உத்தரவிட்டுள்ளது.

 அன்பார்ந்த தோழர்களே ! 
          அஞ்சல் நான்கின்   38 வது  நெல்லை கோட்ட மாநாடு 
                     நாளை நடைபெறும் (22.09.2019)    நடைபெறும் மாநாட்டில் அஞ்சல் நான்கு தோழர்கள்     அனைவரும் கலந்துகொண்டு மாநாட்டை சிறப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
*மாநாட்டில் கலந்துகொள்ளும் தபால்காரர் /MTS ஊழியர்களுக்கு மாநாட்டின் நினைவாக ஒரு BAG வழங்கப்படுகிறது 
*   மாநாட்டில் இயற்றப்படும்   தீர்மானங்கள் குறித்து இன்று மாலைக்குள் தகவல்களை தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்
 * மாநாட்டில் தமிழகத்தின் தொழிற்சங்க அரங்கில் மிக சிறந்த பேச்சளர்களாக வலம்வரும் அஞ்சல் நான்கின் மாநில செயலர் தோழர் G.கண்ணன்  நெல்லை கோட்ட அஞ்சல் மூன்றின் செயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்களின் சிறப்புரையை கேட்க வாருங்கள் 
                                       மாநாட்டு வாழ்த்துக்களுடன் 
                                             SK .பாட்சா கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 
                                              

Friday, September 20, 2019

                                                  முக்கிய செய்திகள் 
முதியோர் ஓய்வூதியம்(OAP) இனி IPPBல் வழங்க தமிழ்நாடு அளவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
1. அவ்வாறு துவங்கும் கணக்குகள் கண்டிப்பான முறையில் முன்பணம்(Initial deposit) எதுவும் வாங்க கூடாது. 0 balance account மட்டுமே துவங்க வேண்டும். 
2. மேலும் OAP கொடுப்பதற்காக தொடங்கப்படும் கணக்கு PENSION SAVINGS BANK ACCOUNT எனும் PRODUCT NAMEன் கீழ் துவங்க வேண்டும்.
இதை பயன்படுத்தி தாங்கள் தங்களுடைய BOவிற்கு உட்பட்ட OAP பயனாளிகளுக்கு கணக்கு துவங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
------------------------------------------------------------------------------------------------------------------
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது .ரயில் முதலில் வந்திருக்கிறது .அதன்பிறகு தான் தபால் வரும் .இது எழுதப்படாத சட்டம் 
---------------------------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் நான்கின் 38 வது நெல்லைகோட்ட மாநாடு வெல்லட்டும் 
  வருகிற 22.09.2019 ஞாயிறன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெறும் அஞ்சல் நான்கின் மாநாடு வெல்லட்டும் .
----------------------------------------------------------------------------------------------------------------------
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

GDS  ஊழியர்களுக்கான மகிழ்ச்சி செய்தி CHILDREN EDUCATION FACILITATIONALLOWANCE FOR GDS
மழலை வகுப்புகள்(LKG,UKG) முதல் 12-ஆம் வகுப்பு முடிய  GDS ஊழியர்களின் குழந்தைகளுக்கு CEFA தொகை வழங்கப்படும். 

CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE ஆனது GDSஊழியர்களின்  இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இரண்டாவது குழந்தை இரட்டை அல்லது பல குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் அந்த குழந்தைகளுக்கும் CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE வழங்கப்படும்.
CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டொன்றுக்கு ரூ 6000 ஆகும்.
CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE பெறுவதற்கு குழந்தைகள் முந்தைய  கல்வி ஆண்டில் படித்த பள்ளி அல்லது கல்வி நிறுவன தலைவரிடமிருந்து பெறப்படும் சான்றிதழ் போதுமானது . மேற்கண்ட சான்றிதழ் குழந்தைகள் முந்தைய கல்வி ஆண்டில் பள்ளி அல்லது கல்வி நிறுவனத்தில் படித்ததை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.மேற்கண்ட சான்றிதழ் பெற முடியாவிட்டாலும் குழந்தைகளின் ரிப்போர்ட் கார்டு அல்லது பணம் செலுத்தியதற்கான ரசீது ஆகியவற்றை சுய ஒப்பமிட்டு சமர்பித்து CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE பெற்றுக் கொள்ளலாம்.
கல்வி ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் . CEFA பெற  ஒரே விண்ணப்பத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் விண்ணப்பித்தால் போதுமானது. இரண்டாவது குழந்தை இரட்டை குழந்தைகள் அல்லது  பல குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் வரையறுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து இணைக்க வேண்டும்.
GDS ஊழியர்களின் கணவன் அல்லது மனைவி  அரசு ஊழியராக இருப்பின் யாரேனும் ஒருவர் மட்டுமே CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE
பெற விண்ணப்பிக்க முடியும். ஆண்டுக்கு ஒரு முறை ஒவ்வொரு நிதியாண்டில் முடிவிலும் CEFA பெற விண்ணப்பிக்கலாம்.
CHILDREN EDUCATION FACILITATION ALLOWANCE தொகை பெறுவதற்கு GDS ஊழியர்களின் குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி/ கல்வி நிறுவனங்களில் படித்திருக்க  வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம்/பள்ளி என்பது அரசுப்பள்ளிகளாகவோ மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி பெறும் பள்ளிகளாகவோ பள்ளிகள் இடம்பெற்றிருக்கும் இடங்களுக்கான  கல்வி அங்கீகார ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளாகவோ இருக்க வேண்டும்.
GDS ஊழியர்களின் குழந்தைகள் பத்தாம் வகுப்புக்கு பிறகு 2 ஆண்டு படிக்கக்கூடிய டிப்ளமோ/ ஐடிஐ /சான்றிதழ் படிப்புகளுக்கும் CEFA  தொகை வழங்கப்படும். 
CEFA திட்டம் 01.10.2019 முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிதியாண்டில் மட்டும் ஒரு குழந்தைக்கு ரூ 3 ஆயிரம் என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட CEFA தொகை வழங்கப்படும். அடுத்த ஆண்டு முதல்  குழந்தை ஓன்றுக்கு ரூ 6000 என்ற அடிப்படையிலேயே CEFA வழங்கப்படும்.

CCL  எடுப்பதில் புதிய மாற்றங்கள் குறித்த விளக்க ஆணையை DOPT 30.08.2019 அன்று வெளியிட்டுள்ளது 
Amendment in the CCS Leave Rules 1972 consequent upon the implementation of the recommendations of 7th CPC
No. 11020/01/2017-Estt. (L)
Government of India
Ministry of Personnel PG & Pensions
Department of Personnel & Training
Old JNU Campus, New Delhi
Date: 30.8.2019
                           OFFICE MEMORANDUM
Sub: Amendment in the CCS (Leave) Rules, 1972 consequent upon the implementation of the recommendations of 7th CPC.
(a) CCL may be granted at 100% of the leave salary for the first 365 days and 80% of the leave salary for the next 365 days.
(b) CCL may be extended to single male parents who may include unmarried or widower or divorcee employees.
(c) For single female Government servants, the CCL may be granted for six spells in a calendar year. However, for other eligible Government servants, it will continue to be granted for a maximum of 3 spells in a calendar year.
IV. "Special Disability Leave for injury intentionally inflicted" under Rule 44 has been substituted by a new Leave named "Work Related Illness and Injury Leave (WRIIL)" which may be granted to a Government servant (whether permanent or temporary), who suffers illness or injury that is attributable to or aggravated in the performance of her or his official duties or in consequence of her or his official position. With the introduction of WRIIL, "Special Disability Leave for accidental injury" (under Rule 45) and Hospital Leave (under Rule 46) have been deleted. WRIIL has foil owing provisions:-
(a) Full pay and allowances will be granted to all. employees during the entire period of hospitalization on account of WRIIL.
(b) Beyond hospitalization, WRIIL will be governed as follows:
(i) Government servants (other than military officers) will be paid full pay and allowances for the 6 months immediately following hospitalization and Half Pay only for 12 months beyond that period. The Half Pay period may be commuted to full pay with corresponding number of days of HPL debited from the employee's leave account.
(ii) For officers of the Central Armed Police Forces (GAFF), full pay and allowances will be paid for the 6 months immediately following hospitalization, and full pay only for the next 24 months.
(iii) Personnel below the rank of officers of GAFF will be paid full pay and allowances, with no limit regarding the period of leave.
(iv) In the case of persons to whom the Workmen's Compensation Act, 1923 applies, the amount of leave salary payable imder WRIIL shall be reduced by the amount of compensation payable under the Act.
(v) No EL or HPL will be credited during the period that employee is on WRIIL.
(Rajendra Prasad Tewari)
Under Secretary to the Government of India
Tele. No. 26164316
To,
All Ministries/ Departments of the Central Government

Thursday, September 19, 2019

                                                              வருந்துகிறோம் 
திருச்சி மண்டல அஞ்சல் மூன்றின் முன்னாள் செயலர் -திராவிட இயக்கத்தின் தீவீர பற்றாளர் அண்ணன் மீனாட்சிசுந்தரம் அவர்கள் 
மறைந்தார்கள் .அன்னாரது இறுதிச்சடங்கு இ ன்று மாலை 4 மணியளவில் ஸ்ரீரங்கத்தில் நடைபெறுகிறது .அண்ணன் பாலு காலங்களில் மத்தியமண்டலத்தில் பல்வேறு இயக்கங்களில் முன்னனி தலைவராக இருந்துசெயல்பட்டவர் .அன்னாரின் மறைவிற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் 
தலைவர் NCA -அண்ணன் பாலு பேரவை

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
  நேற்று CPMG அவர்களுடனான நான்கு மாத த்திற்கொருமுறை நடக்கும் பேட்டியில் எடுக்கப்பட்ட முடிவுகள் 
 * 2019 எழுத்தர் பதவி உயர்வு PA தேர்வுக்கான( LGO) இடங்கள் அதிகரிக்க வேண்டுமானால் 2019 க்கான LSG  List  வெளியிட்ட பின்பு தான் காலியிடங்கள் உருவாகும் தற்போது PA வாக                            இருக்கக்கூடியவர்கள் LSG பதவி உயர்வு பெற்றால் மட்டுமே PA காலியிடங்கள் அதிகரிக்கக்கூடும் என்கின்ற அடிப்படையில்  இன்னும் பத்து தினங்களுக்குள் சுமார் 750 பேர் LSG. List  வெளியிட இருப்பதாக தெரிவித்தார்கள் .இதில் எத்தனை பேர் பதவி உயர்வு பெறுகிறார்களோ அத்தனை இடங்கள் கூடுதலாக நடந்துமுடிந்த LGO தேர்வு காலியிடங்களாக கிடைக்கும் .அதே போல்  நமது கோட்டத்தில் VACANCY இறுதிசெய்யப்பட்டு அறிவித்தபின்னர் LSG பதவிஉயர்வு பெற்ற இடங்கள் சேர்க்கப்படும்பொழுது இன்னும் கூடுதல் காலியிடங்கள் கிடைக்கும் .நிச்சயம் இதுகுறித்து நமது நெல்லை கோட்ட சங்கம் நமது நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசென்று கூடுதல் இடங்களை LGO தேர்வெழுதிய தோழர்களுக்கு பெற்று தருவோம் 
*HSG ll.  HSG l காலியாக உள்ள பதவிகளை தகுதியுள்ள நபர்களை வைத்து உடனடியாக  நிரப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம்  போஸ்ட் மாஸ்டர் கிரேட்   ஜெனரல் லைன் உடன் இணைந்த பிறகு சீனியாரிட்டி சரி செய்து கொண்டிருக்கிறோம் அது முடிந்தவுடன் விரைவில் நிரப்பப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது
அதேபோல் OFFICIATING பார்ப்பதற்கும் முற்றிலும் சீனியாரிட்டி கடைபிடிக்கப்படவேண்டும் என்றும் புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .
*ஞாயிறு ஆதார் பணி நமது கோட்டத்தில் நடப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது .CPMG அவர்களும் நமது நெல்லை கோட்ட நடவடிக்கைகள் மற்றும் நமது மாநிலங்களவை உறுப்பினர் அவர்களின் தொடர் வற்புறுத்தல் இவைகளினால் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை இல்லை என்று தெரிவித்தார்கள் .இன்னும் மேலும் தகவல்கள் மாநிலச்சங்கம் பதிவிட்டவுடன் தெரிவிக்கப்படும் .மாநிலச்சங்கத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, September 18, 2019

மத்திய அரசு ஊழியர்களின் மகத்தான போராட்டம் --19.09.1968 
   51-வது ஆண்டு --வீர வரலாறு -செப்டம்பர் 19 -மறுபதிப்பு 
           அன்றைய வேலைநிறுத்தங்கள் --உயிர்பலி_  சஸ்பென்ஷன் _ டிஸ்மிஸ் _கைது _தடியடி -இதை எதிர்கொண்டதுதான் நமது சங்கம் என்பதை நினைத்து பெருமை கொள்வோம் 
புதிய /இளைய தோழர்கள் அவசியம் படிக்கவேண்டிய பதிவு 
 19.09.1968 மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் -குறைந்தபட்ச ஊதியம் கேட்டு அதிகபட்சமாக உயிர் நீத்த ஊழியர்களின் தியாகத்தை போற்றுவோம் .பிகாங்கீர் பதான்கோட் உள்ளிட்ட நான்கு  இடங்களில் போலீஸ் காரர்களின் துப்பாக்கி சூட்டில் ஒன்பது ரயில்வே ஊழியர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தார்கள் .வேலைநிறுத்த முந்திய நாளிலே புது டெல்லியில் மட்டும் 1650 தபால் தந்தி ஊழியர்களும் 350 இதர மத்திய அரசு ஊழியர்களும் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர் .ரயில்வே பாதுகாப்பு துறைகளை விட தபால் தந்தி பிரிவில் வேலைநிறுத்த தாக்கம் அதிகமாக இருந்தது .8700 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் .44000 தற்காலிக ஊழியர்களுக்கு TERMINATION நோட்டீஸ் வழங்கப்பட்டது .10000  பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர் சுதந்திரத்திற்கு பிறகு நாட்டில் மூன்றாவது முறையாக ESMO (ESSENTIAL SERVICE ORDINANCE ) அமுல்படுத்தப்பட்டது .1960 வேலைநிறுத்தத்திற்கு பிறகு அமைக்கப்பட்ட JCM அமைப்பை நமது தலைவர் மிக  சரியாக பயன்படுத்தினார்கள் .1967 ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் நடைபெற்ற JCM கூட்டத்தில் 1.தேவைகேற்ற குறைந்தபட்ச ஊதியம் 2.பஞ்சப்படியை அடிப்படை சம்பளத்தோடு இணைப்பது .3.பஞ்சப்படி கணக்கீட்டு முறையை மாற்றுவது என மூன்று கோரிக்கைகளை ஊழியர் தரப்பு வைத்தது .ஆனால் அரசு பிடிவாதமாக பஞ்சப்படி பார்முலா மாற்றுவதை அஜெண்டாவில் சேர்க்காமல் நிராகரித்தது .நாடுமுழுவதும் வேலைநிறுத்தத்தின் அவசியமும் ஊழியர்களிடையே கோபமும் அதிகரித்திருந்தது .அரசும் தன் பங்கிற்கு உள்துறை அமைச்சர் YB.சவான் மூலம் 25.08.1968 அன்று அரசு திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தது .ஊழியர்களுடன் பேச்சுவார்தை என ஒருபுறமும் மறுபுறம் வேலைநிறுத்தத்தை முடக்க தலைவர்களை கைது செய்தும் தனது இயல்பான முகத்தை அன்றைய அரசு வெளிக்காட்டியது .ஆனாலும் திட்டமிட்டபடி 19.09.2018 அன்று காலை 06.00 மணிக்கு நாடுமுழுவதும் மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது .நாடுமுழுவதும் 2.80 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றதாக அதிகாரபூர்வமாக செய்திகள் அறிவிக்கப்பட்டது .வேலைநிறுத்தம் ஒருநாள் என்றாலும் அதன் பாதிப்புகள் பல நாட்களாக நீடித்தது .பழிவாங்கல்கள் -கைது இவைகளை கண்டித்து கிட்டத்தட்ட ஒருமாத காலம் வரை விதிப்படி வேலை (WORK TO RULE ) கடைபிடிக்கப்பட்டது .பாரத பிரதமரின் நேரடி தலைஈ ட்டினால் விதிப்படி வேலை (WORK TO RULE ) முடிவுக்கு வந்தது .வேலை நிறுத்த நாட்களில் அரசு நடந்துகொண்ட மிகமோசமான அடக்குமுறைகளை குறித்து சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது .அன்றைய பிரதமர் திருமதி .இந்திரா காந்தி அம்மையார் அவர்களே ஊழியர்களின் வேலைநிறுத்தம்  எப்படி இந்த அளவிற்கு சர்வதேச கவனத்தை ஈர்த்தது என ஆச்சரியப்பட்டார்கள் . பெருமழைக்கு பின் வடிந்தோடும் மழைநீரை போல  ஓராண்டுக்கு பின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற திரு VV.கிரி அவர்களிடம் வேலைநிறுத்த பழி வாங்குதலை முற்றிலுமாக நீக்கவேண்டும் என ஊழியர்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று பழிவாங்குதலால் படிப்படியாக நீக்கப்பட்டன .19.09.2018  என்பது உயிர்பலி டிஸ்மிஸ் சஸ்பென்ஷன் என நம் முன்னோர்கள் அடக்குமுறைக்கு எதிராக விரும்பி ஏற்றுக்கொண்ட பதக்கங்கள் .ஆனால் இன்றோ NO WORK -NO PAY என்றாலும் ஊழியர்களை திரட்டுவது என்பது நமது நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தாலும் -தியாக தலைவர்களின் தியாகங்களை நெஞ்சில் நிறுத்தி முன்னேறுவோம் .
                                                       தொழிலாளி கையேந்தும் 
                                                      பிச்சைகாரனல்ல --சலுகை என்பதும் 
                                                      அரசு நமக்கு இடும் பிச்சையல்ல 
இதோ !நமது தலைவர்கள் நமது அன்றைய பிரதமர் இரும்பு பெண்மணி இந்திரா அவர்களுடன் உறுதிகுலையா உள்ளதோடு நேரடி பேச்சுவார்த்தை நடத்திய காட்சி 
வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, September 17, 2019

                                  மணமக்களை வாழ்த்துகிறோம் 
பாளையம்கோட்டை கிளை சங்கத்தின் முன்னாள் கிளை செயலர் தோழர் KR .கண்ணன் அவர்களின் இல்ல மணவிழா -16.09.2019
                                                                   மணமக்கள் 
R .சரவணன் B .Tech ...                  ----------------  K .ரம்யா M.Sc 
மணமக்கள் நீடூடி வாழ்க என நெல்லை NFPE வாழ்த்துகிறது 

Monday, September 16, 2019

அன்பார்ந்த தபால் காரர் /MTS தோழர்களுக்கு !
 வணக்கம் .வருகிற 22.09.2019 அன்று நமது நெல்லை கோட்ட 38 வது மாநாடு நடைபெறுவதை தாங்கள் அறீவீர்கள் .இந்த மாநாட்டில் நமது மாநிலசெயலரும் /அகிலஇந்திய உதவி பொதுச்செயலருமான தோழர் G.கண்ணன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள் .இந்த மாநாட்டில் எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள் மற்றும் விவாதிக்கவேண்டிய கருத்துக்கள் உங்களிடம் வரவேற்க படுகின்றன .ஏற்கனவே பல இளைய தோழர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் .ஏனைய தோழர்களுக்கும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தால் மாநாட்டில் இதுகுறித்து விரிவான விவாதம் /விளக்கங்கள் அளிக்க வசதியாகஇருக்கும் .கருத்துக்களை சொல்லிட எந்தவித தயக்கமும் வேண்டாம் .இது நமது அரங்கம் .இதோ .இதுவரை வந்த கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு 
*நடந்து முடிந்த தேர்வு குறித்தும் அதில் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச VACANCY குறித்தும் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்தியிருந்தனர் .
*நமது தோழர்கள் விழுந்து விழுந்து படிப்பதை பார்க்கையில் நாம் எழுதபோகப்போறது ப்ரமோஷன் பரிட்சையா SSC பரிட்சையா என்று எனக்கு புரியவில்லை ப்ரமோஷன் டெஸ்ட் என்பது ஒரு முறை எழுதி பாஸ் பண்ணினால் போதுமானது அதன்பின் சீனியாரிட்டி அடிப்படையில் ப்ரமோஷன் கொடுக்கவேண்டும் ஆனால் இப்போது நாம் எழுதப்போகும் தேர்வு அப்படி அல்ல நாம் பாஸ்செய்தால் மட்டும் போதாது அதிகமார்க்கும் எடுக்கவேண்டும் இது என்னவிதமான ப்ரமோஷன் டெஸ்ட் என தெரியவில்லை ஏன் தபால்காரர்கள் மட்டும் வஞ்சிக்கபடுகிறார்கள் மேலும் SSC வைக்கும் நேரடி தேர்வில் உள்ள அனைத்து பாடத் திட்டங்களுடன்(Gk, Maths, Reasoning & language paper also) கூடுதலாக Department volumes சேர்த்து இந்த தேர்வுக்காக ஆயுத்தம் ஆகிறோம் இருந்தபோதிலும் vacancies என்பது மிகமிகக் குறைவாகவே உள்ளது
*ஒரு GDS லீவு எடுத்தால் அந்த இடத்தில் out sider பணி செய்து கொள்ளலாம் ஆனால் நமது இடத்தில் GDS மட்டுமே பணிபுரியவேண்டும் ஏன் நமது இடத்தில் out sider யை போடக்கூடாது 
ஆனால் இப்போதைய சூழலில் நாம் லீவு போட்டால் திரும்பவும் அந்த பணியை நாமேதான் செய்ய வேண்டியுள்ளது
*.vacancy July வரைதான் சேர்கப்பட்டுள்ளதென்றால் December வரை வரகூடிய vaccany சேர்க்கப்பட வேண்டும்.
*. Type test நீக்க வேண்டும். குறைந்தது 75% qualification mark என்பதை குறைக்க வேண்டும்.
* Rule 38 transfer பரிந்துரைகளை விரைந்து முடிக்க வேண்டும்.
*. Promotion exam கான syllabus குறைக்க வேண்டும்.
நன்றி !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Grant of one increment on notional basis for calculation of all pensionary benefits to the employees retiring on 30th June and whose DNI is 1st July

                                 அஞ்சல் நான்கின் கோட்ட செயற்குழு 
அன்பார்ந்த தோழர்களே !
                                      வருகிற 22.09.2019 அன்று நடைபெறும் நமது 38 வது கோட்ட மாநாட்டிற்கு முன்னதாக இன்று நடைபெறும் செயற்குழு கூட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் 
                                           செயற்குழு கூட்டம் 
நாள் -16.09.2019   நேரம்-மாலை 05.30 மணி 
இடம் --திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் 
தலைமை -தோழர் A .சீனிவாச சொக்கலிங்கம் 
பொருள் --
*ஈராண்டறிக்கை சமர்ப்பித்தலும் -ஒப்புதலும் 
*தணிக்கை செய்யப்பட்ட வரவு -செலவு அறிக்கை சமர்ப்பித்தலும் -ஒப்புதலும் 
*இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
                    மாநாடு சிறக்க உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் 
SK .பாட்சா கோட்ட செயலர் அஞ்சல் நான்கு நெல்லை 

Saturday, September 14, 2019

                             வாழ்த்துக்களும் -நன்றிகளும் 
நாளை(15.09.2019)  நடைபெறும்     எழுத்தர் தேர்வில்  பங்கேற்கும் அனைத்து தோழர்களுக்கும் /தோழியர்களுக்கும் நெல்லை NFPE தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது 
தேர்விற்கு தயாராகும் தோழர்களுக்காக தனி வாட்ஸாப் தொடங்கி அதில் பல்வேறு பகுதி தோழர்களை இனைத்து மிக பயனுள்ள செய்திகளை படிக்கவும் /பகிரவும் முழு முயற்சிகள் எடுத்த தோழர் பாலகுருசாமி போஸ்ட்மேன் மஹாராஜநகர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .அதேபோல் பிற செய்திகள் எதையும் பதியாமல் குழுவின் மான்பை காத்திட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி !நன்றி                                 ------------------------------------
    
 .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர் நெல்லை 

                                                         வாழ்த்துகிறோம் 
நாளை(15.09.2019)  நடைபெறும்     எழுத்தர் தேர்வில்  பங்கேற்கும் அனைத்து தோழர்களுக்கும் /தோழியர்களுக்கும் நெல்லை NFPE தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது 
                                          ------------------------------------
            தோழர் மோகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 
நீண்ட காத்திருப்பிற்கு பிறகு இன்று RULE 38 மூலம் ராமநாதபுரம் கோட்டத்திற்கு இடமாறுதல் பெற்று செல்கின்ற தோழர் மோகன் MTS மகா ராஜாநகர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
                                                கவலைகளை -தனது 
                                                கவிதைகளால் கொட்டி தீர்த்தவர் 
                                                வணிக வளர்ச்சிக்கு பேருதவி புரிந்தவர் 
                                                எல்லா தரப்பிலும் நட்பு வட்டத்தை  
                                                விரித்தவர்              
                                                குறுகிய கால பழக்கத்திலும் 
                                                நெருங்கிய உறவை வளர்த்தவர் 
                                                 வாழ்த்துக்கள்  கவி.மோகன் 
                  ----------------------------------------------------------------------------------------------------
நன்றி .வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர் நெல்லை 
                                                                                

Friday, September 13, 2019

அன்பார்ந்த தோழர்களே !
 LGO தேர்வு காலியிடங்கள் நமது கோட்டத்தில் UR -2 SC -1 என ஆக மொத்தம் 3 காலியிடங்கள் மட்டுமே உள்ளன .கடந்தாண்டுகள் வரை இருந்த VACANCY முழுவதும்  RULE 38 இடமாறுதலுக்கு (33) சென்றுவிட்டதால் இந்த 2019 ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலியிடங்களே நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளன .
நன்றி .தோழமையுடன் ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                                          இமாலய இலக்கு --வானம் தொட்டுவிடும் தூரம் தான் 
இந்திய அஞ்சல் துறை வரலாற்றில் முதன்முறையாக MOC (Minister of Comm&IT) அவர்களின் "நேரடி (கட்டுப்பாட்டின்) மேற்பார்வையின்" கீழ் DOPக்கு நிர்ணயிக்கப்பட்ட Account's Targets விபரங்கள்... Minister அவர்களாலேயே நேரடியாக Target Achievment விபரங்கள் மாதாமாதம் ஆய்வு செய்யப்படுமாம்.
நமது அமைச்சகம் இந்த நிதியாண்டிற்கு நிர்ணயித்துள்ள இலக்குகள் -இவைகளை மார்ச் 2020 குள் எட்டிவிடவேண்டுமாம் அவைகளில் சில 
IPPB கணக்குகள் -                   -5 கோடி 
பரிவர்த்தனை மதிப்பு  ரூபாய் 5 00 000 கோடி 
SSA -கணக்குகள்                  -2 கோடி 
பரிவர்த்தனை மதிப்பு  ரூபாய்  200 கோடி 
PLI /RPLI  -- 50,000 villages to be covered under
Bima Gram Yojana
கங்கா ஜெல் -3000 அலுவலகங்களில் வினியோகம் 
ஆதார்- 15 crores transactions through 13352
Aadhaar Centers located at Post OFFICES 
--------------------------------------------------------------------------------------------------------------------------
                                   RTP வழக்கில் மேலும் ஒரு வெற்றி --மேலும் தகவல்களை பெற நமது முன்னாள் மாநிலசெயலர் தோழர் V.பார்த்திபன் சென்னை அவர்களை அனுகவும் (9444208955)
                                         ----------------------
சமீபத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் பெறப்பட்ட  உத்தரவினை அனைத்து EX RTP க்களுக்கும் அமல்படுத்த வேண்டி ஓவ்வொரு EX RTP க்களும் தனிப்பட்ட முறையீட்டினை CPMG அவர்களுக்கு அளிப்பது எனவும், இது குறித்து அனைத்து தொழிற்சங்க மாநில செயலர்களையும் அனுகுவது எனவும் முடிவு செய்யப்டது.  தேவை ஏற்படின் Ex RTP சார்பாக தனிப்பட்ட முறையில் நீதின்றத்தில் வழக்கு தொடர்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி! தொடர்ந்து தங்களது ஒத்துழைப்பினை நல்கிட வேண்டுகின்றோம்.    V.பார்த்திபன்,  L.சுந்தரமூர்த்தி, G.ரமேஷ்குமார். Anna Road HPO.
                                      ----------------------------------------
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, September 12, 2019

                                             முக்கிய செய்திகள் 

IPPB rolls out of Aadhaar-enabled payment services (AePS)

அனைத்து வங்கிகளுக்கான சேவைகளை IPPB மூலம் பெறலாம் .
IPPB முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் புதிய சேவை தொடக்கம் .இதன் மூலம் 34 கோடி ஜன் தன் கணக்கு உள்ளிட்ட எந்த வங்கி சேவையையும் வாடிக்கையாளர்களின் வாசற்படியில் IPPB யால் கொடுக்கமுடியும் -நமது அமைச்சர் பெருமிதம் 
  • IPPB has now become the single largest platform in the country for providing interoperable banking services to the customers
  • To avail these services, a customer with an Aadhaar linked account can simply authenticate his/her identity with fingerprint scan
  • India Post Payments Bank (IPPB) on Monday said that it has rolled out Aadhaar enabled payment system (AePS) services. With this, IPPB has now become the single largest platform in the country for providing interoperable banking services to the customers of any bank. Union Minister for Communications and IT Ravi Shankar Prasad today announced the rollout of AePS services on IPPB's first anniversary.
  • --------------------------------------------------------------------------------
  •               அகில இந்திய மாநாடும் -IP தேர்வும் 
  • அஞ்சல் மூன்றின் 32 வது அகிலஇந்திய  மாநாடு ஹைதராபாத் மாநகரில் 20.10.2019 முதல் 22.10.2019 வரை நடைபெறுகிறது .இதற்கிடையில் ஏற்கனவே தள்ளிவைக்கப்பட்ட அஞ்சல் ஆய்வாளர்களுக்கான தேர்வும் 19.10.2019 &20.10.219 ஆகிய நாட்கள் நடைபெறுவதாக அஞ்சல் வாரியம் அறிவித்துள்ளது .இதுகுறித்து நமது அகிலஇந்திய சங்கம் அஞ்சல் வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் நமது இளைய தோழர்கள் முழுமையாக பங்கேற்கும் வகையில்  IP தேர்வை ஒருமாத  காலத்திற்கு தள்ளிவைக்க வேண்டுகோள் விடுத்துள்ளது .
  • நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, September 10, 2019

                                                         முக்கிய செய்திகள் 
*PLI  இயக்குனராக புதிய விளக்க கடிதத்தின்படி விரிவாக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு (தொழிற்சார் படிப்புகள் உள்ளிட்ட ) ரூபாய் 20 லட்சம்வரை பாலிசி எடுக்க அவர்களின் சுய அறிவிப்பு (Self Declaration )உள்ள வருமானம் குறித்த தகவல்கள் போதுமானது .
மற்றவர்களுக்கும் 20 லட்சம்வரை பாலிசி எடுக்க அவர்களின் சுய அறிவிப்பு (Self Declaration )உள்ள வருமானம் குறித்த தகவல்கள் போதுமானது .ரூபாய் 20 லட்சத்திற்குமேல் சம்பளப்பட்டியல் /வங்கி அறிக்கை வருமானவரி தாக்கல் செய்த நகல் இவைகளில் எதாவது ஒன்று போதுமானது .PLI யை பொறுத்தவரை கூடியவிரைவில் நம்மைவிட்டு தனியாக செல்வதற்கான அடித்தளமாகத்தான் நடைமுறைகள் அனைத்தையும் எளிதாக்கி வருவதாக தெரிகிறது ..
* எழுத்தர் தேர்வை எதிர்நோக்கியுள்ள தோழர்களுக்கு HALL TICKET வழங்குவது தொடர்பாக நேற்று மாலை தான் CPMG அலுவலகத்தில் இருந்து அனைத்து கோட்டங்களுக்கும் தகவல்கள் வந்துள்ளன .இன்னும் ஓரிரு நாளில் தேர்வு அனுமதி கடிதம் தங்களுக்கு வந்தடையும் .
-*அஞ்சல் ஆய்வாளர்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .வருகிற அக்டோபர் 19 மற்றும் 20 ம் தேதிகளில் நடைபெறுகிறது .
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 29.09.2019
அகிலஇந்திய அளவில் காலியிடங்கள் மற்றும் அனைத்து விவரங்களும் அஞ்சல் வாரிய 09.09.2019 தேதியிட்ட அறிவிப்பில் கானலாம் .தேர்விற்கு தயாராகும் அனைத்து தோழர் /தோழியர்களுக்கும் NELLAI NFPE யின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, September 9, 2019

Saturday, September 7, 2019

                                                   முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
*10.09.2019 செவ்வாய் முகரம் விடுமுறை என்பது தமிழகத்திற்கு 11.09.2019 புதன் என மாற்றப்பட்டுள்ளது .இதுகுறித்து தமிழக CPMG அலுவலகத்தில் இருந்து 06.09.2019 அன்று அதிகாரப்பூர்வ ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
*GDS TO PA தேர்விற்கு 2015 _16  2016 _17 2017 _18 ஆண்டுகளில் GDS ஊழியராக பணிபுரிந்து தபால்காரர் MTS ஆக பணிபுரிவோர் அந்தந்த ஆண்டுகளில் GDS ஆக பணிபுரிந்து இருந்தால் 15 /9 /2019 தேர்வில் பங்கேற்கலாம் என்ற 8 /7 /2019 ஆணை விலக்கிக் கொள்வதாக அஞ்சல் வாரியம் தனது 06.09.2019 தேதியிட்ட விளக்க ஆணையில் கூறியுள்ளது .
* PLI /RPLI  அனைத்துவகையான PAYMENT DISBURSEMENT மற்றும் MCCAMISH UDDATION குறித்து  அஞ்சல் வாரியம் 05.09.2019 வெளியிட்டுள்ள கடிதத்தில் PM /SPM Disbursement குறித்து அவர்களே இதை கண்காணிக்கவேண்டும் என்றும் இதில் ஏதேனும் வேறுபாடுகள் இருந்தால் கோட்ட அலுவலகத்திற்கு உடனே தெரிவிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது .
 நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, September 6, 2019

அன்பார்ந்த தோழர்களே !
   நெல்லை அஞ்சல் நான்கு சங்கத்தின் 38 வது கோட்ட மாநாடு சம்பந்தமாக நேற்று நமது மாநகர் பகுதி அலுவலகங்களில் உறுப்பினர்களை சந்தித்து நன்கொடைகளை பெற்றுக்கொண்டோம் .மிக ஆர்வமாக உதவிய அனைத்து தோழர் /தோழியர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
   இன்று 06.09.2019 இரண்டாம்நாளாக நான்குனேரி வள்ளியூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு செல்கிறோம் .அந்தந்த பகுதி ஊழியர்கள் தயாராக இருக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, September 5, 2019

                                            முக்கிய செய்திகள் 
PLI /RPLI  MATURITY மற்றும் இதர சர்வீஸ் REQUEST வகைக்காக ஒரு அலுவகத்தில்(CPC ) இருந்து பிற அலுவகத்தில் (CPC ) கொடுக்கப்பட்டால் வழக்கம்போல் ஒரிஜினல் CASE FILE கேட்டு தேவையில்லாத தாமதத்தை தவிர்க்கும் பொருட்டு கீழ்கண்ட வழிமுறைகளை PLI இயக்குனரகம்30.08.2019 அன்று புதிய வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது   .அதன்படி 
*பிரிமியம் ரசீது புத்தகத்தில் உள்ள பதிவுகள் சரியாக இருந்தால் 
* PAY பாலிசி க்கு காலாண்டு /அரையாண்டு காலத்திற்கான ஊதிய பிடித்த சான்றுகள் வழங்கப்பட்டால் 
* கடன் தொகை நிலுவையில் இல்லாமல் இருந்தால் 
          ஒரிஜினல் கேஸ் பைல் வரும்வரை காத்திருக்காமல் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றிக்கொடுக்கலாம் என்பது வரவேற்கத்தகுந்தது .இது வாடிக்கையாளர் சேவையை மேலும் விரைவுபடுத்தவும் /விரிவுபடுத்தவும் உதவும் .
     நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, September 4, 2019

                                               நெல்லை கோட்ட செய்திகள் 
* ATR மற்றும் TR க்கான நியமன உத்தரவுகள் நேற்று வெளியாகியுள்ளன .
* PRI (P ) பாளை மற்றும் திருநெல்வேலி பதவிகளுக்கான விண்ணப்பங்கள் LSG ஊழியர்களிடம் இருந்து கோரப்பட்டுள்ளன .விருப்பவிண்ணப்பங்கள் கோட்ட அலுவலகத்தில் இருக்கவேண்டிய கடைசி நாள் 06.09.2019 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, September 3, 2019

                                                   நெல்லை  செய்திகள் 
நமது நெல்லை அஞ்சல் நான்கின் கோட்ட மாநாடு வருகிற 22.09.2019 அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெறுகிறது .மாநாட்டு நன்கொடையாக உறுப்பினர்களிடம் ரூபாய் 200  பிரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது .ஆகவே வருகிற 05.09.2019 முதல் 07.09.2019 வரை நமது நிர்வாகிகள் நேரிடையாக உங்களை சந்திக்க வருகின்றார்கள் .நமது தோழர்கள் கீழ்கண்ட குறிப்பிட்ட நாட்களில் தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் .
05.06.2019 -மஹாராஜநகர் பெருமாள்புரம் மேலப்பாளையம்  டவுண் திருநெல்வேலி மற்றும் பாளையம்கோட்டை மற்றும் மாநகர பகுதிகள் 
06.06.2019 -நான்குனேரி வள்ளியூர் ஏர்வாடி திருக்குறுங்குடி பணகுடி 
07.06.2019  -திசையன்விளை அணுவிஜய் கூடன்குளம் வடக்கன்குளம் காவல்கிணறு 
             நன்றி .மாநாட்டு வாழ்த்துக்களுடன் 
SK .பாட்சா கோட்ட செயலர் நெல்லை 

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத பிரதமர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு 
COPY OF CONFEDERATION MEMORANDUM TO BE SUBMITTED TO HON'BLE PRIME MINISTER OF INDIA AND CABINET SECRETARY ON 05-09-2019. COPY OF MEMORANDUM SHOULD BE SUBMITTED TO ALL DEPARTMENTAL HEADS AND HEAD OF OFFICES BY ALL AFFILIATED ORGANIZATIONS AND STATE / DISTRICT CoCS HOLDING DEMONSTRATIONS & GATE MEETINGS ON 05-09-2019 
No.Confdn/Memorandum/2016-19                                                05th September 2019

To
                 Shri. Narendra Modiji,
                 Hon’ble Prime Minister of India,
                 South Block,
                 New Delhi - 110 001.
Respected Prime Minister,
               Sub: Memorandum on the long pending demands of the Central Government employees - Request for kind intervention - regarding.
                 This Memorandum is submitted with the most fervent hope that the Hon’ble Prime Minister will be condescend to intercede on our behalf to settle the following long pending issues agitating the minds of 32 lakhs Central Government employees and 33 lakhs Central Govt. Pensioners.
10 POINTS CHARTER OF DEMANDS OF CONFEDERATION
1.    Scrap New Contributory Pension scheme (NPS).   Restore Old defined benefit Pension Scheme (OPS) to all employees.  Guarantee 50% of the last pay drawn as Minimum Pension.
2.      Honour assurance given by Group of Ministers (GoM) to NJCA leaders on 30-06-2016.  Increase Minimum Pay and Fitment formula.  Withdraw the proposed move to modify the existing time-tested methodology for calculation of Minimum wage.  Grant HRA arrears from 01-01-2016.  Withdraw “Very Good” bench mark for MACP,  Grant promotional hierarchy and date of effect from 01-01-2006.  Grant Option-I parity recommended by 7th CPC to all Central Govt. Pensioners.  Settle all anomalies arising out of 7th CPC implementation.
3.    Stop corporatization / privatisation of Railways, Defence and Postal Departments.  Withdraw closure orders of Govt. of India Printing Presses.  Stop proposed move to close down Salt Department.  Stop closure of Govt. establishments and outsourcing.
4.      Fill up all six lakhs vacant posts in the Central Government Departments in a time bound manner. Reintroduce Regional Recruitment for Group B & C posts.
5.      (a)  Regularisation of Gramin Dak Sevaks and grant of Civil servant status.  Implement remaining positive recommendations of Kamalesh Chandra Committee report.
          (b)  Regularise all casual and contract workers including those joined on or after 01-09-1993.
6.     Ensure equal pay for equal work for all.  Remove disparity in pay scales between Central Secretariat staff and similarly placed staff working in field units of various departments.
7.  Implement 7th CPC Wage Revision and Pension revision of remaining Autonomous bodies.  Ensure payment of arrears without further delay.  Grant Bonus to Autonomous body employees pending from 2016-17 onwards.
8.  Remove 5% condition imposed on compassionate appointments.  Grant appointment in all eligible cases.
9.     Grant five time bound promotions to all Group B & C employees. Complete Cadre Review in all departments within a time-frame.
10.    (a)   Withdraw the anti-worker wage/labour codes and other anti-worker Labour reforms.  Stop attack on trade union rights.  Ensure prompt functioning of various negotiating forums under the JCM Scheme at all levels.
          (b)    Withdraw the draconian FR 56 (j) and Rule 48 of CCS (Pension Rules 1972.