...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, September 19, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
  நேற்று CPMG அவர்களுடனான நான்கு மாத த்திற்கொருமுறை நடக்கும் பேட்டியில் எடுக்கப்பட்ட முடிவுகள் 
 * 2019 எழுத்தர் பதவி உயர்வு PA தேர்வுக்கான( LGO) இடங்கள் அதிகரிக்க வேண்டுமானால் 2019 க்கான LSG  List  வெளியிட்ட பின்பு தான் காலியிடங்கள் உருவாகும் தற்போது PA வாக                            இருக்கக்கூடியவர்கள் LSG பதவி உயர்வு பெற்றால் மட்டுமே PA காலியிடங்கள் அதிகரிக்கக்கூடும் என்கின்ற அடிப்படையில்  இன்னும் பத்து தினங்களுக்குள் சுமார் 750 பேர் LSG. List  வெளியிட இருப்பதாக தெரிவித்தார்கள் .இதில் எத்தனை பேர் பதவி உயர்வு பெறுகிறார்களோ அத்தனை இடங்கள் கூடுதலாக நடந்துமுடிந்த LGO தேர்வு காலியிடங்களாக கிடைக்கும் .அதே போல்  நமது கோட்டத்தில் VACANCY இறுதிசெய்யப்பட்டு அறிவித்தபின்னர் LSG பதவிஉயர்வு பெற்ற இடங்கள் சேர்க்கப்படும்பொழுது இன்னும் கூடுதல் காலியிடங்கள் கிடைக்கும் .நிச்சயம் இதுகுறித்து நமது நெல்லை கோட்ட சங்கம் நமது நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசென்று கூடுதல் இடங்களை LGO தேர்வெழுதிய தோழர்களுக்கு பெற்று தருவோம் 
*HSG ll.  HSG l காலியாக உள்ள பதவிகளை தகுதியுள்ள நபர்களை வைத்து உடனடியாக  நிரப்பப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம்  போஸ்ட் மாஸ்டர் கிரேட்   ஜெனரல் லைன் உடன் இணைந்த பிறகு சீனியாரிட்டி சரி செய்து கொண்டிருக்கிறோம் அது முடிந்தவுடன் விரைவில் நிரப்பப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது
அதேபோல் OFFICIATING பார்ப்பதற்கும் முற்றிலும் சீனியாரிட்டி கடைபிடிக்கப்படவேண்டும் என்றும் புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .
*ஞாயிறு ஆதார் பணி நமது கோட்டத்தில் நடப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது .CPMG அவர்களும் நமது நெல்லை கோட்ட நடவடிக்கைகள் மற்றும் நமது மாநிலங்களவை உறுப்பினர் அவர்களின் தொடர் வற்புறுத்தல் இவைகளினால் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை இல்லை என்று தெரிவித்தார்கள் .இன்னும் மேலும் தகவல்கள் மாநிலச்சங்கம் பதிவிட்டவுடன் தெரிவிக்கப்படும் .மாநிலச்சங்கத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் 
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment