...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, September 25, 2019

                                                                  முக்கிய செய்திகள் 
ஓய்வு பெறும் நடைமுறையில் மாற்றம் இல்லை
33 வருட பணி நிறைவு செய்த  மத்திய அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு  வழங்கிட, ஓய்வு பெறும் விதிகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் ஓய்வு பெறும் விதிமுறைகளில் எவ்வித மாற்றமும் செய்யும் உத்தேசம் அரசுக்கு இல்லை என அரசு  அறிவித்துள்ளது".
                                          OAP பெறும் முதியவர்களுக்கு IPPB கணக்கு 
சமீபத்திய தமிழக அரசு -அஞ்சல் துறை ஒப்பந்தத்தின் படி OAP பெறும் முதியவர்களுக்கு IPPB கணக்கு தொடங்கி அதன் மூலம் பணபலன்கள் அனுப்பப்படும் என்ற உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள தபால்காரர்கள் /GDS ஊழியர்கள் IPPB கணக்கை 27.09.2019 குள் தொடங்க பணிக்கப்பட்டுள்னர் .நமது நெல்லை கோட்டத்தில் மட்டும் 5200 OAP களுக்கு மூன்று நாட்களுக்குள் கணக்கு தொடங்கவேண்டுமாம் .அரசு அறிவிப்புப்படி மொபைல் மூலம் கணக்கு தொடங்க ஆகும் நேரம் சில நிமிடங்களாம் .ஆனால் நடைமுறையில் ஆகும் நேரத்தை என்ன சொல்ல ? இது குறித்து நமது தோழர்களின் ஆதங்கங்களை நேற்று பல்வேறு தளத்தில் பதிவிட்டிருந்தனர் அவைகளில் சில ...

                        *  OAP வாங்கும்  50% முதியோர்களிடம் செல்போன் வசதி இல்லை மற்றும் அவர்களது ( 70,80 வயது முதியோர்) கைரேகைகள் பதிவு செய்ய முடியவில்லை.

*சிலர் கண்பார்வை இல்லாமல் , காது கேளாமை போன்ற குறைபாடு உடையவரிடம் எப்படி சொல்லி எப்படி புரிய வைப்பது.....!? நாளை OAP வழங்க 4 km சென்று வீட்டில் வழங்கினால் சர்வீஸ் சார்ஜ் பிடித்தம் இருக்குமா....
*OAP   நாம் கொடுக்கும்   முதியவர்கள்  தபால்கார்யிடம்  OTPஎண்   சரியா செல்லி நாமும் நல்லபடி யாக பட்டுவாடா  செய்ய ஆண்டவன் உதவிபுரியட்டும் .
*80 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு  கைரேகை விழுவதில்லை என்ற காரணத்தினால் வங்கியின் மூலம் முதியோர் உதவித் தொகை வழங்குவது நிறுத்தப்பட்டு  மணியார்டர் மூலம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் IPPB மூலம் வழங்க நம் அதிகாரிகள் முயற்சி செய்வது என்பது நமக்கு பிரச்சினைதான்.
                                       நன்றி 
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                         

1 comment:

  1. நடப்பதை சரியாக கூறினீர்கள்.80 வயதிற்கு மேற்பட்டவர்க்கு eMO வழியாக வீட்டில் கொடுத்துக்கொண்டு இருந்ததை விட ஓய்வூதியர்களுக்கு என்ன கூடுதலாக கிடைக்க போகிறது IPPB வழியாக.? ஒன்றுமே இல்லை. அரசுக்கு 50 ரூபாய் லாபம். அஞ்சலகத்திற்கு 50 ரூபாய் நஷ்டம். IPPB க்கு 30 ரூ லாபம், ஓய்வூதியர்களுக்கு 30 ரூபாய் நஷ்டம். 30 ரூபாயை தபால்காரர் எடுத்ததாக குற்றச்சாட்டு தான் மீதி வரும்..

    ReplyDelete