...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, September 10, 2019

                                                         முக்கிய செய்திகள் 
*PLI  இயக்குனராக புதிய விளக்க கடிதத்தின்படி விரிவாக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு (தொழிற்சார் படிப்புகள் உள்ளிட்ட ) ரூபாய் 20 லட்சம்வரை பாலிசி எடுக்க அவர்களின் சுய அறிவிப்பு (Self Declaration )உள்ள வருமானம் குறித்த தகவல்கள் போதுமானது .
மற்றவர்களுக்கும் 20 லட்சம்வரை பாலிசி எடுக்க அவர்களின் சுய அறிவிப்பு (Self Declaration )உள்ள வருமானம் குறித்த தகவல்கள் போதுமானது .ரூபாய் 20 லட்சத்திற்குமேல் சம்பளப்பட்டியல் /வங்கி அறிக்கை வருமானவரி தாக்கல் செய்த நகல் இவைகளில் எதாவது ஒன்று போதுமானது .PLI யை பொறுத்தவரை கூடியவிரைவில் நம்மைவிட்டு தனியாக செல்வதற்கான அடித்தளமாகத்தான் நடைமுறைகள் அனைத்தையும் எளிதாக்கி வருவதாக தெரிகிறது ..
* எழுத்தர் தேர்வை எதிர்நோக்கியுள்ள தோழர்களுக்கு HALL TICKET வழங்குவது தொடர்பாக நேற்று மாலை தான் CPMG அலுவலகத்தில் இருந்து அனைத்து கோட்டங்களுக்கும் தகவல்கள் வந்துள்ளன .இன்னும் ஓரிரு நாளில் தேர்வு அனுமதி கடிதம் தங்களுக்கு வந்தடையும் .
-*அஞ்சல் ஆய்வாளர்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .வருகிற அக்டோபர் 19 மற்றும் 20 ம் தேதிகளில் நடைபெறுகிறது .
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 29.09.2019
அகிலஇந்திய அளவில் காலியிடங்கள் மற்றும் அனைத்து விவரங்களும் அஞ்சல் வாரிய 09.09.2019 தேதியிட்ட அறிவிப்பில் கானலாம் .தேர்விற்கு தயாராகும் அனைத்து தோழர் /தோழியர்களுக்கும் NELLAI NFPE யின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment