...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, December 27, 2019

                                                     முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                                 மத்திய பட்ஜெட்க்கு முந்தைய பரிசீலனைக்கு மத்திய தொழிற்சங்கங்கள் இனைந்து தங்கள் கருத்துக்களை வலியுறுத்தி நமது மத்திய நிதி அமைச்சருக்கு 19.12.2019 அன்று ஒரு மெமோரண்டம் கொடுத்துள்ளனர் .அதில் குறைந்தபட்ச ஊதியத்தை 15 வது லேபெர் கமிஷன் வரையறுத்த அடிப்படையில் வழங்கிடவேண்டும் என்றும் குறைந்தபட்ச ஊதியத்தை ரூபாய் 21000 ஆக மாற்றிடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது .மேலும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கிராஜூடி கணக்கீடு ஒவ்வொரு ஆண்டிற்கும் அரைமாத ஊதியம் என்பதற்கு பதிலாக முழு மாத ஊதியத்தை கணக்கிற்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது .மேலும் வருமானவரியை பொறுத்தவரை மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரை வருமானவரி விலக்கு அளிக்கவேண்டும் .என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது .
                                       ரயில்வே துறையில் சீரமைப்பு ?
   ரயில்வே துறையில் தற்சமயம் இருந்த 8 போர்டு உறுப்பினர்கள் அனைத்தையும் ஒருங்கினைத்து Chief Executive Officer (CEO ) என்கின்ற பதவியின் கீழ் 4 உறுப்பினர்களை கொண்ட நிர்வாகஅமைப்பு மாற்றிஅமைக்கப்பட்டுள்ளது .இது குறித்து அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை கடந்த 24.12.2019 ஒப்புதல் கொடுத்துள்ளது இந்த அமைப்பு தன்னாட்சி பெற்ற அமைப்பாக செயல்படும் .இதன்மூலம் அந்தந்த பகுதியில் இயக்கப்படவிருக்கிற தனியார் ரயில் உள்ளிட்ட முக்கியமுடிவுகளை எடுத்திட அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது .முதலில் சீரமைப்பு என்ற பெயரில் தொடங்கி சீரழிவை நோக்கி தடம் புரளாமல் இந்த ரயில்வே பயணிக்குமா ?
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -P..பாலகுருசாமி கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment