...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, December 2, 2019

                                                   முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                            அஞ்சல் துறையின் மீது அடுத்த தாக்குதல் --
பாரம்பரியமிக்க நமது துறை பல்வேறு புது புது தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது .POSB இருக்கும் போதே  IPPB ,இன்சூரன்ஸ் பிரிவிற்கு தனி இயக்குனரகம் ,பார்சல் சேவைக்கு புது இயக்குனரகம் என மூன்று திட்டங்கள் நடைமுறையில் உள்ளன .இன்று அடுத்த நடவடிக்கையாக COMMON SERVICE CENTER என்று நமது அலுவலகதிற்குள்ளே நமது சர்வரை பயன்படுத்தி தனியார் சேவைகளை நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளதாம் .கிட்டத்தட்ட சுமார் 6000 அஞ்சலகங்களில் இந்த COMMON SERVICE CENTER  தொடங்கப்படவுள்ளதாம் .எப்படி ரயில்வே துறையில் அரசாங்க தடத்தில் தனியார் ரயில் இயக்கப்படுகிறதோ ,எப்படி தொலைத்தொடர்பு துறை கேபிள் வழியாக தனியார் செல்போன் நிறுவனங்கள் சேவையை பெற்றதோ அதேபோல் அஞ்சல்துறையிலும் இந்த ஆபத்துகள் நெருங்கிக்கொண்டு வருகின்றன .1991 முதல் அரசாங்கத்தின் புதிய பொருளாதார கொள்கையை   நாம் எதிர்த்து போராட்டங்களை நடத்தி கொண்டிருந்தாலும் போராட்டத்தின் தன்மையை பார்த்துதான் சிலஇடங்களில் அரசு பின்வாங்குகிறது 
(உதா .போர்தளவாடங்களை தயாரிக்க தனியாருக்கு அனுமதி ) பல இடங்களில் அமுல்படுத்துகிறது .இந்த தாக்குதலை எதிர்த்தும் குறிப்பாக புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் புதிய தோழர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் எவ்வளவு என்பதை உறுதிப்படுத்தவும் நடைபெறவிருக்கும் ஜனவரி 2020  எட்டாம் தேதி ஒருநாள்  வேலைநிறுத்தத்தை வெற்றிபெற செய்திடுவோம் .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


0 comments:

Post a Comment