...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, December 20, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                                      முக்கிய செய்திகள் 
*22.12.2019 அன்று நடைபெறுவதாக இருந்த GDS TO MTS தேர்வு மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
* போஸ்ட்மாஸ்டர் கிரேடு பொதுபிரிவோடு இணைக்கப்பட்டபின்னணியில் அவர்களின் போஸ்டிங் குறித்து அஞ்சல் வாரியம் 19.12.2019 அன்று விளக்க ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது .
(a )அதன்படி கிரேடு III ஊழியர்கள் HSG I ஆகவும் கிரேடு II ஊழியர்கள் HSG II ஆகவும் கிரேடு I ஊழியர்கள் LSG ஊழியர்களாகவும் இருப்பார்கள் 
(b ) இப்பொழுதுள்ள கிரேடு I  ஊழியர்கள் தாங்கள் பணியாற்றும் LSG அலுவலகத்தில் தங்களது TENNURE முடியும் வரையிலும் அவர்களுக்கு HSG II பதவிஉயர்வு வந்தாலும் அவர்கள் விரும்பினால் அதே அலுவலகத்தில் (பழைய LSG அலுவலகத்தில் )TENNURE முடியும் வரை தொடரலாம் .அதே போல் கிரேடு II ஊழியர்களும் TENNURE முடியும் வரையில் அதே அலுவலகத்தில் தொடரலாம் .
* வருகிற ஜனவரி 8 அன்று நடைபெறும் வேலைநிறுத்தத்தில் அஞ்சல் துறையில் FNPO சங்கமும் AIGDSU -GDS சங்கமும் கலந்துகொள்கிறது .ஆகவே 08.01.2019 வேலைநிறுத்தத்தை நமது நெல்லை கோட்டத்தில் முழுவெற்றியடைய செய்வோம் .ஆகவே அனைத்து இலாகா ஊழியர்களும் -GDS ஊழியர்களும் இந்த இலாகாவை காப்பாற்றும் புனித போராட்டத்தில் பங்கேற்று வெற்றியடைய உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் 
 நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -P.பாலகுருசாமி கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment