...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, December 6, 2019

அன்பு அண்ணன் KVS அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தாமதத்திற்கு வருந்துகிறேன் -இந்த 
தாமதத்திற்கும்  வருந்துகிறேன் 
நேற்றைய அண்ணன் JR அவர்களின் 
முகநூல் பக்கத்தை பார்த்தேன் 
அதில் வெளியிடப்பட்ட உங்கள் 
புகைப்படத்தையும்  பார்த்தேன் !
என் நினைவுகள் என்னை மீண்டும் 
பின்னோக்கி அழைத்துச்சென்றன !
நீங்கள் மாநில செயலராய் 
வலம் வந்த நேரம் அ து !
நெல்லையில் இருந்து மதுரைக்கு 
நாம் இருவரும் பயணித்திருக்கும் போது 
நமக்குள் நடந்த பேச்சுக்களின் இடையே 
இலக்கியத்தின் பக்கம் போனீர்கள் 
செல்லி உள்ளிட்டிட உலகம் போற்றும் 
உன்னத கவிதைகளை 
சொல்லி தந்தீர்கள்-அதற்கு  ஈடாக 
கவிஞர் மீரா அவர்களின் கவிதைவரிகளை 
நினைவூட்டினீர்கள் .
'நீ முதல்முறை என்னை 
பார்த்தபோது -என் 
உள்ளத்தில் முள் பாய்ந்தது 
முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும் 
எங்கே இன்னும் ஒருமுறை பார் '
ஆம் முள்ளை ...........
அதுமட்டுமல்லாமல் அந்த 
கனவுகள் +கற்பனைகள் =காகிதங்கள் 
கவிதைநூலை எனக்காக 
தங்கள் அன்பு புதல்வன் மூலம் வாங்கி 
16.04.2005 அன்று எனக்கு பரிசளித்தீர்கள் 
அந்த நூலின் முதல் பக்க வரிகள் இது 
"என்னை மீண்டும் இசைக்க வந்துள்ளாய் 
என்னால் உனக்கு பெருமை வரவேண்டும் என்பதல்ல 
உன்னால் எனக்கு வாழ்வு வரும் :
தொலைத்துவிட்ட தருணங்கள் 
அப்படியே போகட்டும் 
இனி என் பயணமெல்லாம் 
நீ காட்டும் திசையில் தான் !
                                              அன்புடன் தம்பி ஜேக்கப் ராஜ் 



0 comments:

Post a Comment