...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, December 23, 2019

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

வேலைநிறுத்தத்தில் பங்கேற்போம் !அஞ்சல்துறையை பாதுகாப்போம் !

               ஜனவரி 8-2020 ஒருநாள் வேலைநிறுத்தம் 
அஞ்சல் துறையில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கங்களும் (NFPE -FNPO-AIGDSU ) போராட்டத்தில் பங்கேற்கின்றன .இதற்காக இந்த மூன்று சங்கங்களுக்கும் 12.12.2019 அன்று நமது இலாகா முதல்வரிடம் தனித்தனியான போராட்ட நோட்டீசை முறைப்படி கொடுத்துள்ளனர் .நமது கோட்டத்தை பொறுத்தவரை வருகிற ஜனவரி 2 &3 ம் தேதிகளில் அனைத்து அலுவலகங்களுக்கும் வேலைநிறுத்த விளக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம் .
                                           முக்கிய    கோரிக்கைகள் 
1.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய் ! கடைசிமாத ஊதியத்தில் 50 சதம் ஓய்வூதியம் என்பதனை உறுதிப்படுத்து !..
2.GDS ஊழியர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இலாகா அந்தஸ்தை வழங்கிடு !
3.MACP பதவியுயர்வுக்கான பெஞ்சுமார்க் முறையை நீக்கிடு !
4.அஞ்சலகங்களுக்கு வாரம் 5 நாட்கள் வேலைநேரமாக அறிவித்திடு !
5.CIS/CBS /RICT/POSTMANAPP இவைகளிலுள்ள பிரச்சினைகளை சரிசெய்திடு !
6.கேடர் சீரமைப்பு பதவியுயர்வை தபால்காரர் /MTS பகுதிக்கும் அமுல்படுத்து !
                                            போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
P.பாலகுருசாமி கோட்டசெயலர் (பொ ) அஞ்சல் நான்கு 
---------------------------------------------------------------------------------------------------------------.

                          

0 comments:

Post a Comment