...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, December 19, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                     ஜாதகம் சரியில்லையாம் யாருக்கு ?
நமது நெல்லை கோட்டத்தில் சில உப கோட்ட அதிகாரிகளின் நடவடிக்கைகள் நமக்கு ஏற்புடையதாக இல்லை அவர்கள் ஆய்வுக்கு செல்லும் இடங்களில் ஊழியர்களை அர்ச்சிக்கும் வார்த்தைகள் மிரட்ட்டல்கள் என நம் கவனத்திற்கு வந்தபொழுதெல்லாம் நாம் நமது SSP அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்று சில ASP களின் நடவடிக்கையை சரிபடுத்தியிருக்கிறோம் .ஆனால் வள்ளியூர் ஆய்வாளர் அவர்களின் சமீபத்திய நடவடிக்கைகள் ஊழியர்களுக்கு மன உளைச்சலை மட்டுமல்ல கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
இது குறித்து நேற்று நமது முக்கிய பொறுப்பாளர்களிடம் கலந்துபேசி வருகிற 23.12.2019 மாதாந்திர பேட்டியில் நமது SSP அவர்களிடம் முழுமையாக விவாதித்து அவரது நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்துவோம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது .
.வள்ளியூர் ஆய்வாளர் அவர்களின் நடவடிக்கைகளில் சில 
*செல்லும் இடங்களில் எனக்கு ஜோசியம் தெரியும் உங்கள் கையை காட்டுங்கள் என்று எல்லை மீறுகிறார் ?யாருக்கு ஜாதகம் சரியில்லை என்று விரைவில் தெரிய போகிறது ?
*விடுப்பு கேட்கும் ஊழியர்களிடம் 100 கணக்குகள் தொடங்கினால் தான் விடுப்பு என மிரட்டல் 
* தான் குறிப்பிட்ட கணக்குகளை பிடிக்காதவர்களை நேரில் அழைத்து விளக்கம் கேட்பேன் என்று வாட்ஸாப் அச்சுறுத்தல் 
*MTS தேர்விற்கு HALL டிக்கெட் வாங்க சென்றவர்களிடம் எத்தனை கணக்கு பிடித்திருக்கிறாய் ?நீ பரீட்சை எழுதி என்ன செய்யப்போகிறாய் என ஆசிர்வாதங்கள் ?
*பணகுடி மேளாவிற்கு மேளா எங்கு நடக்கிறது என முறைப்படி தெரிவிக்காமல்  புள்ளிமானை தேடி அலைய விட்டுள்ளார் ?(புள்ளிமான் என்பது ஒரு தனியார் பள்ளிக்கூடம் )
*விடுப்பு மறுக்கப்பட்ட ஊழியர் நமது மூலம் SSP அவர்களிடம் பேசி விடுப்பு பெற்றபின் அந்த ஊழியரை தொலைபேசியில் அழைத்து இனி  எல்லாம் SSP இடமே கேட்டுக்கொள் அடுத்தவாரம் நான் தான் இன்ஸ்பெக்ஷன்க்கு வருவேன் பார்த்துக்கொள்கிறேன் என்பது 
                   இப்படி தொடரும்  வள்ளியூர் உபகோட்ட கதைக்கு முடிவு ஏற்படாவிட்டால் புதிய ஆண்டின் துவக்கத்தில் வள்ளியூரில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது தவிர்க்கமுடியாத ஒன்று என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கூட்டு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை 


0 comments:

Post a Comment